நம்ம அறை நண்பர் வேலு கும்பகர்ணன் தம்பி என்பதால், தூக்கத்தில் பொளந்து கட்டுவான். சுத்தி என்ன நடக்குது. எப்போ தூங்கினோம், எப்போ முழிக்கிறோம் என்பது கூட தெரியாமல் தூங்குவான். ஒரு நாள் எதோ ஒரு வகுப்பு இல்லாமல் போக, மதியமும் வகுப்பு இல்லை என்பதால், வந்தவுடன் கட்டையை சாய்த்து விட்டான். நான் மதியம் துணி எல்லாம் தொவைச்சி குளிச்சி மாலையில் அறையில் உக்கார்ந்து இருந்தேன். மாலையில் எழ போகும் நண்பரை கொஞ்சம் கலாய்க்கலாம் என்று, எழுந்தவுடன் "என்னடா! நாயே! இப்படி தூங்கிட்ட! வகுப்புக்கு நேரமாச்சுடா. ஏண்டா மனுசன்னா இப்படியா தூங்குவான். நேத்து தூங்கி, இன்னைக்கு காலைல எழுந்திருக்கிறே! " என்றேன். சாயங்காலம் என்பதால் வேலுக்கு சூரியன் மறையுதா, உதிக்குதான்னு கொஞ்சம் குழப்பமாயிடுச்சு!. தவிர நான் வேற குளிச்சி விபூதி பட்டையெல்லாம் அடிச்சு இருந்தேனா, விடிஞ்சிடுச்சு போலன்னு நம்பிட்டான்.
மட மடன்னு ப்ரஷ்ல பேஸ்ட வச்சி பல்ல வெளக்கிகிட்டே குளிக்க பக்கட்டையும் எடுத்துக்கிட்டு பாத் ரூம் கெளம்பிட்டான். அங்கே எவனும் இல்லாததை பார்த்து வேலுக்கு சந்தேகம் வந்து விட்டது. உடனே பக்கத்து அறைல போய் பசங்க கிட்ட சூரியனை காட்டி
" டேய்! இப்போ விடியுதா! இருட்டுதா!" ன்னு கேட்க செம காமெடியாச்சு.
நேற்று ஒரு பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். "போக்கிரி ராஜா' படத்தில் இருந்து S.P.B அலம்பி தள்ளிய பாடல். சில பாடல்கள் S.P.B மட்டுமே பாடமுடியும். அதுவும் இந்த மாதிரி பேசி கதை சொல்லிக் கொண்டே பாட அவரை விட்ட வேற ஆளு கிடையாது. அதில் வரும் "சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு" வரியை கேட்டதும் என் கல்லூரியில் நடந்த மேலே சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது.
இந்த பாடலை கேட்டு சந்தோசமா இருங்க. (பாடலுக்கு கீழே).
பாடல்:
கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு
ஐயா மேலே சாமி வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
அந்திபட்ட நேரத்தில சந்திரன ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா
இந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன் தலைகீழா
தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்
சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சி
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு என்னான்..
எனக்கொன்னும் தெரியாது நா வெளியூருன்னு பூட்டான் அவன்
என்ன தான் போட்டாலும் நிதானம் தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதையா
கன்னியை தாயென்பேன் கிழவியை கன்னி என்பேன்
கன்ரோலு கொஞ்சம் கூட கொறையாதையா
அட மீன் செத்தா கருவாரு நீ செத்தா வெறும் கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி
கடவுள்...
ஒரு பெண்ண பார்த்தேன்.. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னே..
ஆகலன்னா.. குழந்த குட்டி இருக்கான்னே...குடுத்தா பளார்னு
நா விடுவேனா.. அடுத்த பெண்ண பார்த்து
முன்கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னே
ஆமா! ரெண்டு கொழந்த இருக்குன்னா...
அப்புறம் தான்.. கல்யாணம் ஆச்சான்ன்னு கேட்டேன்..
அன்னைக்கு தான் தங்க பல்லு கட்ட அவசியம் வந்தது.
விஸ்கிய போட்டேன்னா இங்கிலிசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு.
கள்ள குடிச்சேன்னா நாடோடி பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும் அத கேட்டு.
அட ஆகாயம் கால் மேலே...பூலோகம் கை மேலே
ஆடி காட்டுகிறேன் வா நைனா..
கடவுள்...
7 comments:
Funny Song. Thanks Siva for sharing. Do you know who wrote this song?
குமரன். பாடலாசிரியர் கண்ணதாசனாக இருக்கலாம். ஏனென்றால் "மீன் செத்தா கருவாடு" கண்ணதாசன் சொன்னதுங்கன்னு வைரமுத்து அண்ணாமலையில சொல்லுவாரு
// டேய்! இப்போ விடியுதா! இருட்டுதா!" //
இது எனக்கும் சிலமுறை நடந்திருக்கு. அவசரமா அவசரமா எழுந்து சாயங்காலம் 7 மணிக்கு கிளாஸுக்கு கிளம்பிருக்கேன். கிளைமேட்டும் ஒரு காரணம். விண்டரிலும் காலையும் மாலையும் கும்மிருட்டா இருக்கும். சம்மரில நேரெதிரா இராத்திரி 7 மணிக்கு சுள்ளுன்னு வெயில் அடிக்கும். அப்புறம் குழம்பாம என்ன செய்யறது?
இந்தப் பாட்ட இதுவரைக்கும் கேட்டதேயில்லியே!
ம்.
பாட்டு நல்லாயிருக்கு.
இது கண்ணதாசன் எழுதியது எண்டுதான் நானும் நினைக்கிறேன்.
யாராவது உறுதி செய்வீர்களா?
Siva, Ramanadhan sir sonna mathirri ithu pala perruku naduthuruku....nanney orru silla sammyam kozhombi poi....pall theythiruken... :-)
Nalla thogupu.
Anbudan,
Natarajan.
Vasanthan,
Yes. it's true that it was written by Kannadasan.
உங்கள் தகவலுக்கு நன்றி ராம்கி.
Post a Comment