இங்கே அமெரிக்காவிலும் அத்தனையும் உண்டு என்று பார்த்திருந்திருந்தும், ஏனோ அப்படி பேசுவார்கள். இங்கேயும் மாலையில் வாகன நெரிசலில் எத்தனையோ பேர் சாலையை விட்டு கரையில் வண்டியை ஓட்டி செல்கிறார்கள் (அங்கு வண்டியை ஓட்டக் கூடாது என்று விதி இருந்தும்). அதற்கு மேல் போக பாதை இல்லை என்றதும் சாலைக்குள் வர, முன்னேறி போறவனையும் போக விடாமல் தங்கி கொண்டிருப்பார்கள். எல்லா கண்ராவியும் இங்கேயும் உண்டு. தெருவுக்கு தெரு பிச்சை காரர்கள் இங்கேயும் உண்டு. "Hey! Man! U have a dollar change" - என்று கேட்கும் கருப்பண்ணன். பாலத்திற்க்கு அடியில் தூங்கி விட்டு, "Homeless! Hungry! Help Please! God Bless You" என்று சோம்பேறித்தனமாக அட்டையை வைத்துக் கொண்டு சிக்னலில் பிச்சை எடுக்கும் வெள்ளையன். தாளமே இல்லாமல் ஒரு கொட்டை வைத்துக்கொண்டு "டண்ட நக்கர" என்று தட்டிக் கொண்டு தட்டு ஏந்தும் கருப்பண்ணன். இப்படி இந்த சின்ன ஊரிலேயே என்னால் 100 பிச்சை காரர்களை காட்ட முடியும். தொலை தூரம் போகும் பஸ்ஸில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததும் இடத்திற்க்காக அடித்து கொள்ளும் அமெரிக்கர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்க்காக நான் அமெரிக்காவை குறை சொல்ல வில்லை. எல்லா நாட்டிலும் எல்லாமும் இருக்கிறது என்றே சொல்கிறேன்.
அமெரிக்காவிலும் எல்லா ஒழுங்கும், எல்லாம் தனக்கு தாராளமாய் கிடைக்கும் என்பது வரைக்கும் தான். ஏனோ! எதற்க்கெடுத்தாலும் "அமெரிக்காவை பார்! ஜப்பானை பார்!" என்று பாடம் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள் ( என்னடா 'அன்னியன்' -அ பத்தியான்னு நினைக்காதீர்கள். இது வேற).
இந்த பதிவை நான் போட காரணமே "கிழட்டு அனுபவங்கள்" என்று ராஜசேகரன் எழுதிய பதிவினால் தான். ஏதோ பெரிய மேதாவி போல் " தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது." "இதைச் சொல்வதற்கு எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளது இல்லையா? " என்று சொல்லியிருந்தார். சரி, அது அவரது அபிப்பிராயம் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. இது ஏதோ குஷ்பு மேட்டரும் இல்லை, "பெண் சுதந்திரம்" மேட்டரும் இல்லை.
ஐயா! மேதாவியே! அயல்நாட்டிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும், தங்களுக்கு என் தாய் நாட்டை பற்றி என்ன நக்கல்?. அயல் நாட்டுக்கு போங்கள். நன்றாக சம்பாதியுங்கள். முடிந்தால் தாயகம் திரும்பி வாருங்கள். இல்லை "சூழ்நிலை" காரணமாகவோ, இல்லை "இந்தியா உங்களுக்கு வாழ தகுதியற்ற நாடு என்று நீங்கள் நினைத்தாலோ" அங்கேயே குடிமகனாகி விடுங்கள். அதில் தப்பேதும் இல்லை. அது அவன் அவன் விருப்பம்.
ஆனால், அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு, பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். ஏதோ ஒரு A/C அறையில் உட்கார்ந்து கொண்டு, ஓசியில் ஒரு இனையம் கிடைத்ததும் உங்கள் புண்ணாக்கு மேதாவி தனத்தை "இந்தியா ஒரு போதும் முன்னேற போவதில்லை" "நான் சீனா போயிருக்கிறேன்" "ஜப்பான் போயிருக்கிறேன்" என்று கேணத்தனமாக பேசாதீர்கள். நீங்கள் வேறு நாட்டை பற்றி உயர்வாக தாராளமாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் ஏன் எதற்க்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்கிறீர்கள். நீங்கள் வந்து இறங்கியவுடன் பளிங்கு போல சாலையும், பல்லக்கு போல காரும் இருந்தால் தான் அது உங்களுக்கு வளர்ந்த இந்தியாவாக தெரியும் என்றால், அது உங்கள் தவறு.
தன் வேலையை விட்டு அடுத்தவர் பசி போக்க உழைத்து கொண்டிருக்கும் இந்த மதுரை இளைஞரும் இந்தியாவில் தான் இருக்கிறார்.
ஏழை மாணவிக்காக பணம் சேர்த்து கொடுத்து சந்தோசமாக இருக்கிறது என்று சொல்லும் இந்த டோண்டு ராகவனும், பாலாவும் இந்தியாவில் தான் இருக்கிறார். முட்டி அளவு சென்னை மழை நீரில் செருப்பை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக கூறும் இவர்கள், அதற்க்காக 'இந்தியா முன்னேறாது' என்றா சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் ஒரு ஏழை மாணவிக்கு உதவுவது. அது அவர்களின் நல்ல எண்ணம்.
தன்னால் முடிந்த கல்வியை ஏழை மாணவர்களுக்கு கற்று கொடுக்க, நேரம் ஒதுக்கி, இந்தியா முன்னேற வேண்டும் என்று இருக்கும் இவர்களும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இவர்களின் கனவு இது தான்.
இவர்கள் திரு. அம்பானியோ. டாட்டாவோ கிடையாது. நம் ஒருவரால் என்ன மாற்றம் கொண்டு வர முடியும் என்று சப்பை கட்டுபவர்களுக்கு மத்தியில், சாதாரண மக்களாய் இருந்து தன்னால் முடிந்தவற்றை தன் தாய் நாட்டுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடம் கேட்டால், இந்தியா "சீனா மாதிரியோ! அமெரிக்கா மாதிரியோ" ஆக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். "நான் நன்றாக இருக்கிறேன். என்னால் என் தாய் நாட்டுக்கு, என் மக்களுக்கு முடிந்ததை செய்வது என் கடமை " என்று தான் சொல்வார்கள். இவர்கள் சாலை உடைந்து கிடந்தாலும், தன்னால் ஒரு கல்லை எடுத்து போட முடியுமா என்று பார்ப்பார்கள். இந்தியாவில் எதுவுமே சரியில்லை என்று உம்மை போல சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட இவர்களின் இந்தியாவிற்க்கு, உம்மை போன்றவர்களின் பரிதாபமோ, கரிசனமோ தேவை இல்லை.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் மனிதன்.
இருப்பதை சிறப்பாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர்கள் இந்தியர்கள்.
இவர்களுக்கு (இந்தியர்களுக்கு) உங்கள் புண்ணாக்கு அனுதாபம் தேவை இல்லை.
பரபரப்பாக எழுத வேண்டும் என்றால் "பெண் விடுதலை" "கற்பு" "ஆண் ஆதிக்கம்" என்று எழுதுங்கள். கேணத்தனமாக எதற்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்காதீர்கள்.
அன்புடன், சிவா.
42 comments:
நல்லா உறைக்கிற மாதிரி கேட்டிருக்கிங்க
சினியப்பன்
Nicely written !
ஏங்க கிழட்டு hotdog சொல்றதுன்னால இந்தியா முன்னேறாம போய் விடுமா?
அது கிழட்டு hotdog.
அமெரிக்கால TaxPayer பணத்துல உட்கார்ந்து Blog எழுதுனா வேலை போய்டுமா? எதுக்கும் Arnold கிட்ட ஒரு வார்த்த கேளுங்க?
உண்மைதான். எங்க ஊர்ல டிராபிக் போலீஸ் பிடிச்சா
50 ரூவா குடுத்துட்டு போய்ட்டே இருப்போம் என்று ஒரு
அறிவுக்கொழுந்து அமெரிக்கர்களிடம் சொல்லியது.
அடுத்த வாரம் அமெரிக்க போலீஸ் கட் ரினாவில் டி.வி.
சுட்டுக்கொண்டு ஓடுகிறது.
Dear Siva,
Thanks a lot for bringing this topic. What you have said is 200% correct. Within MN state,if you have seen all this, what should I say about New York. All u have mentioned about beggars,homeless, people fighting for seat,( why long distance, come to the path train), smoking for others(?)
,spitting,looting,murder and what not??? Less rape because here anyone can sleep with anyone.
But as u have mentioned, people think about America,China and what not....we need not worry even a bit....We have lot many Indians who feels the same like u and I. At the same time I would like to add that, we also have NRI's who really feel for the country and donate cash a lot..
Do not understand why these people think America is better.Just because even a Dog can have a car here,just because any dog gets 24/7 internet access etc. and because of these stuff if one thinks America is better, then they are making a big mistake. We will for sure attain these things in India very soon.Not every American leads a cozy life.
Katrina has exposed this very clearly. Can write a lot further, but let me end with this question?
Mother and mother nation can be only one. Just because ones parents are not educated, one will not call his/her friends well educated parents as his.
When will these people realize this?
Why all 'Anonymous'??? Indiyargaley yeen Bhayyam??
Naam annaivarrum irrukirom ondraga....
Anbudan,
Nata
அந்த வலைப்பதிவில் மூக்கன் என்றொரு அறிவாளியும் இருக்கிறார், கருத்துகளைக் கூறிக்கொண்டு...பாதி நேரம் மனசுக்கும் மூளைக்கும் சம்பந்தம் இல்லையாம் - மூளையே இல்லாத அவர் சொல்வது இது. Hmmm.
Ikkaraikku akkarai pachai
Siva, thoola coola solliteenga. Ellam aravekkattu thanamthaan karanam. People dont think anymore for their own good. It is a fast food nation what else do you expect, what he eats nothing but @#$& so his thoughts are. Pls visit http://thekkikattan.blogspot.com/
சிவா, நானும் இது போன்றவர்களை பார்த்து மனம் நொந்திருக்கிறேன். இவர்களுக்கு ஒரு self worth, self dignityயே கிடையாது. ஒரு பணக்கார நண்பன் வீட்டுக்கு போய் தன் தாய் வீட்டிலே இருக்கிற குறைகளை சொல்லும் மனப்பான்மை தான் இது. ஆதங்கத்துலே நமக்குள்ளே பேசிக்கலாம். நீங்க சொல்ற மாதிரி ஏதாவது உருப்படியா செய்யலாம். அதை விட்டுட்டு குறைகளை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கிறவங்களை பார்த்தா எரிச்சல் தான் வருது.
சிலருக்குக் கற்பைப் பற்றிக் குறை சொன்னால் கோபம். சிலருக்கு நாட்டைக் குறை சொன்னால் கோபம். இந்தியா அவ்வளவு சிறந்த நாடு என்றால் நீங்கள் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள்?
Anonymous அவர்களே! நான் சொல்ல வந்த கருத்து உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். அதற்க்கு எதற்க்கு Anonymous! பெயரை சொல்லலாமே?
Siva,
His perspective comes out of comparing the malay tamils and the malay chinese.
Your perspective comes out of comparing desis in US and the average 'Joe in the street'.
Probably Rajasekar didn't had an oppurtunity to know about the achievements of desis in US.
Hence this contradiction.
Did you read his previous episodes (of this series) where he discussed about how the malay constitution prefers/enforces prefernces to bhumiputras( ethnic malays ) in every sphere of life?
And he is clearly given the educational/socio/economic conditions of tamils in malaysia. Isn't it incorrect to compare them with the educated, well-paid desis in US?
As I follow the news about malaysian tamils and TN tamils stranded in malaysia regularly, I tend to agree with his observations (on the tamil part). Regarding the chinese part, the ppl in my office (in US) don't create that great impression.
Further, he is not insulting about indians/tamils in a chinese blog or an english blog isn't it? He is sharing his prespective with fellow desis. What is wrong in that?
One final word, criticism could be a great motivator.
Just wanted to clarify one point. I have not had a chance to read the katturai posted in Sundar's blog. So, I am not commenting on the contents of that katturai. My comments are specifically about Siva's first para and related thoughts.
Dear Sive,
i am an indian residing in Malaysia for the last 8 years.
I agree with the essence of your post. but it will be correct if you are telling about indian born people who are living abroad, if they are insulting india and indians. Mr. Rajasekaran who is writing the said article is a malaysian by birth. his family has been there for generations and his writng is on malaysian tamils. he need not feel patriotic towards india, indeed he should be loyal to his country that has given everything to him, that is Malaysia.
one person has commented in Mooku Sundar's blog that tamils went to Malaysia from 10th century onwards. but now, tamils there means those who went there in 19th century onwards (mainly estate workers). the others who may have migrated there 1000 years ago, mingled with the local population and they all are malay race now. there are no distinct tamils like those in Srilanka. all the malays by birth are muslims who form the bulk of the population. infact he has given brief history of them in the first post. apart from that, whatever he has written about the discrimination against non-malays, bumiputra status, all are true.
in spite of all that hurdles the chinese have improved and the amount of economy they control in teh whole of South east asia is staggering. the National economic policy (NEP)was devised by the malaysian govt only to increase the equity of wealth sharing by malays. if i remember correctly before introducing the NEP some 30 years back the chinese were controlling 90% of the economy.
Raji
cont..
As an Indian by birth (my husband is a malaysian) when I came to this country, i was under naive impression that all indians will love India. indeed, i found it strange when the malaysian tamils mocked india sometimes. these are the people who have been living here for generations and are malaysian by all means. they may be tamil race and many have no relationships in india except for the cultural and spiritual ties. so their perspective of India and indians differ. if the person has written that india can never match china it is his opinion. after these few posts i asked my husband one day, whether he thinks india will ever surpass china. his answer was a firm NO, and that is the way majority of the malaysians feel.
these people go to India only to send their children for studies, (the rich send them to europe and US)or take a spiritual journey. for others, the tamil nadu they know is through movies. many learn tamil only by watching tamil movies. most of the time they speak at home in English. i have seen many who have never been to India and know it only by movies. we all know how they portray india in movies.
i even had lawyer friend who have never been to india asked me oneday, do zamindars are still there in India like they show in movie MUTHU. i had to explain those days are gone and only in movies they show like that.
for malasyian indians, India a their ancestral land and spiritually they are connected. apart from that their perception is different and we need not go on defensive for his writings. whether we like it or not, that is the way most of them think of india. when we go back to India, we see tell tale signs that things have improved, but for them, it is nothing compared what they enjoyed in their own country. and there is nothing wrong if they compare china with India, and say that china is far ahead of India. it is their perception.
raji
அதென்னப்பா எல்லாருமே அனாமத்தா (Anonymous) தான் பதில் போடுறாங்க. சில பேர் இதை +Ve ஆ எடுத்துக்க வேண்டியதான, எதுக்கு இப்படி Tension ஆறீங்கன்னு கேட்டாங்க. மக்கா! "தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" இந்த தொனியில் என்னத்த +ve ஆ எடுக்கறது?. "there is nothing wrong if they compare china with India, and say that china is far ahead of India. it is their perception" இப்படின்னு சொல்லிட்டு போக முடியாது. உங்க அம்மாவையும் எங்க அம்மாவையும் Compare பண்ணமுடியுமா?. என்னடா "அம்மா" வும் நாடும் ஒன்றான்னு கேக்கறீங்களா?. சில பேருக்கு அப்படித்தான். இங்கே நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் தங்களால் முடிந்ததை இந்தியாவில் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் நோக்கம் சில இந்தியர்களுக்கு எங்களால் முடிந்ததை செய்வது. எங்களுக்கு சீனாவோ, அமெரிக்காவோ மனதில் இல்லை. மலேசியாவிலேயே பிறந்து வாழ்ந்து விட்டு, சில நாடுகளுக்கு சும்மா சுற்று பயணம் போய்விட்டு, நான் பெரிய அனுபவசாலி என்று கத்தக்கூடாது. இங்கேயே பிறந்து வாழ்ந்தவனுக்கு தான் தெரியும், அதன் அருமை. அனுபவங்களை "நீ ஒரு போதும் தலைகீழாக நின்றாலும் உருப்பட மாட்டாய்" என்று உங்கள் மேதாவி தனத்தை காட்ட பயன் படுத்தாதீர்கள். ஏதாவது உருப்படியாக பயன்படுத்துங்கள். ஏதோ ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டை "எப்போதுமே முன்னேறாது" என்று வெட்டி பேச்சு பேசுவாது, உங்களுக்கே கொஞ்சம் கேணத்தனமாக தெரியவில்லையா. எங்கள் உணர்வுகள் உங்களுக்கு புரிவது கடினம் தான். :-) .
சிவா, நன்றாகச் சொன்னீர்கள். சீனாவைப் பற்றிப் பேசும் போது அந்த மலேய அதிமேதாவி, சீன மக்கள் சீனாவில் இருந்த அரசியல் சூழ்நிலையால் உடல் வலுவும் மன வலுவும் அடைந்தனர் என்று எழுதுவாராம். ஆனால் இந்தியர்களைப் பற்றிப் பேசும் போது அவர்கள் கொத்தடிமைகள் அதனால் எந்த காலத்திலும் இந்தியா சீனாவைப் போல ஆகாது என்று பேசுவாராம். அதை சில அனாமத்துகள் 'என்ன தவறு' என்று வக்காலத்து வாங்குகிறார்கள்.
அந்த அதிமேதாவி முதலில் இந்திய வரலாறு படிக்கட்டும். பின்னர் சீனர்கள் பட்ட கஷ்டத்தைப் பற்றிப் பேசட்டும்.
இவர்கள் பேசுவது, ஒருவன் 'எங்கள் அம்மா கெட்டுப் போனவள்' (உண்மையோ இல்லையோ) என்று பேசும் போது, அவனுடைய சகோதரர்கள் உணர்ச்சி வசப்பட்டு 'நாயே, நம் தாயைப் பற்றி ஏனடா இப்படிப் பேசுகிறாய்' என்று கோபப்பட்டால், 'அது அவர்கள் கருத்து. அவர்கள் பார்வை. நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்' என்பது போல் இருக்கிறது.
Siva,
I am posting as anonymous because i don't have a blogger account. i try to tell you that they are not indians by mind, though they are by race. if they look at india or any other country except malaysia ,it is an alien country to them and they tend to believe what they see. i was born and brought up in India and now whenever i go home, i feel proud to see the developements and i have no doubt that our golden era is coming soon.
china has built up a very good image and allows people to see only what they project as modern nation. but, in our country, whether we like it or not, it is not like that. the person who has commented cannot comprehend the improvements that we have made in the last decade or so.
i think you wouldn't have felt offended had a westerner said the same thing. not so long ago India was considered as a land of snake charmers and sadhus. that is what the western media has portrayed. only now the world is beginning to acknowledge us. i consider the said person in the same way as a third party who is not in any way related to India and take his comments with a pinch of salt.
and we cannot go on explaining to them of our achievements. may be he went a bit overboard in saying India can never do it. leaving that aside, i find nothing wrong in what he has written about the achievements of malaysian chinese, how they are thriving, how indians are struggling.
i cannot say anything more because it is difficult to change one's opinion. i only ask you to take criticisms positively.
thanks
raji
நன்றி ராஜி அவர்களே! நேரம் செலவழித்து எழுதியிருக்கிறீர்கள். நான் Anonymous-ஆ பதில் போடறதற்க்கு யாரையும் குறை சொல்லவில்லை என்று நினைக்கிறேன் :-) . ஒரு அயல்நாட்டவனின் கருத்து என்று எடுத்து கொள்ளமுடியாது. ஒரு சீனாக்காரனோ, ஒரு அமெரிக்கனோ அவனது இனை தளத்தில் இந்தியாவை பற்றி "ஒரு போதும் உருப்படாது" என்று சொன்னாதற்க்கெல்லாம் Tension ஆகிக்கிட்டு இருக்க முடியுமா?. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கனும். ஆனால், "தமிழ் மன்றம்" என்று, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒருமைப்பாடுடன் தங்கள் எழுத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு இடத்தில், தமிழ் மொழியிலேயே, நான் ஒரு மேதாவி என்று காட்ட வேண்டுமா?. அவர்களுக்கு இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இப்படியும் ஒரு நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்று தான் நான் பதிவை போட்டேன். நான் இந்தியா உலகிலேயே உயர்ந்த நாடு என்று புள்ளிவிவரங்கள் இட்டு, யாரையும் ஒத்துக்கொள்ளச் சொல்ல வில்லையே?. தமிழ் மணத்தில் இந்தியர்கள் கூடும் இடத்தில் ஒரு நாட்டை பற்றி வார்த்தைகளை/ கருத்துக்களை ஒரு நல்ல கண்ணோட்டத்தில் பயன்படுத்துங்கள். நான் முன்னமே சொன்ன மாதிரி, இது குஷ்பு மேட்டரும் இல்லை, தங்கர் மேட்டரும் இல்லை.
ஒரு நாட்டை பற்றி குறை சொல்வதற்க்கு கொஞ்சம் தகுதிகள் வேண்டும். அது இந்தியாவில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு, நான் மேதாவி என்று ஒரு அயல்நாட்டை (இந்தியா மட்டும் அல்ல) குறைத்து பேசி, உங்கள் புராணம் பாட வேண்டாம்.
நீங்கள் சொன்னது போல, "it is difficult to change one's opinion." என்னை சொன்னீங்களோ, அவரை சொன்னீங்களோ. உண்மை தான். நானும் அதையே தான் சொல்கிறேன். நான் யாரையும் மாறச் சொல்லவில்லை. இது எங்கள் கண்ணோட்டம். :-)
Siva,
thanks again. i felt a bit different because your reply implied as if writing as anony is a msitake. as i said before i agree with your post entirely when it comes to indians who were born and brought up in India and bad mouth about the country that gave everything to them at the drop of a hat. i had a bad experience with a young chap on my last trip few months ago. this gentleman is studying in Australia for the last two years and was going back after a holiday. he had befirended a malaysian indian girl doing medicine in India. with just 2 years of living abroad, he was blabering to her, how the place deasn't agree to him anymore, how it is dusty, noisy, lousy, the village indians are stupid people who can be easily manipulated (this gem came from his mouth when he asked the stewardess to arrange the seat for the girl next to him by replacing an elderly indian man. he had the audacity to tell had it been educated indians or a white man they will not shift to other palce) etc., i just wanted to spank him and felt wahtever you have written above. i didn't join the conversation, but just by sitting next to him, i understood the whole story. only he did most of the talking, and was trying impress her with his accent, trying to act cool etc. and almost told his life history
these are the kind of people we must be angry with. i understand the writing of that malaysian because, after coming here i have seen the attitude of these people, what they feel about indian indians. his writing refelct the general idea that these people have about india and indians.
i have had expreiences here, when they come to know that i am from india, many have mockingly told me that getting married to a foreigner is the easiest way to come abroad as if milk and honey is flowing there and we are trying to escape from dire conditions.
unfortunately many form the opinion based on what they see in movies, or on short pilgrimages to India, what they see, they believe.
thanks once again,
raji
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி ராஜி அவர்களே! அடிக்கடி ப்ளாக்கிற்க்கு வந்து போங்க.
பிறந்ததில இருந்து ரொம்ப காலமா குடிசையிலே வாழ்ந்த ஒருத்தன் ஏதோ ஒரு வேல கிடச்ச பிறகு ஒரு கல் வீட்டுக்குப் போறான்னு வச்சிக்குவோம். புது வீட்ல மழை பெய்தால் ஒழுகுவதில்லை. ஒரு நல்ல தரையிலமுதல் தடவையா தூங்க முடியுது. அப்பாடா இனிமேல் குடிசை வாழ்வு நமக்கில்லை. அந்த நரகத்தில் வாழ்ந்நது போதும் என்று அவன் முடிவெடிக்கிறான் என்று வைச்சுக்குவோம்.
இப்படிப்பட்டவனைப் பார்த்து “நீ குடிசையைக் கேவலப்படுத்திவிட்டாய். குடிசை வாழ்வு சிறந்து வாழ்வு, நீ குடிசைக்குத் தான் போகணும் என்று சொல்வது எந்த அளவு நியாயமோ அதே அளவு நியாயம்தான் அந்த இளைஞனை வசைபாடுவதும்.
முடிந்தால் நீங்கள் குடிசையில் வாழ்ந்து காட்டுங்கள். பிறகுஇந்திய நாட்டைப் பற்றிப் பேசலாம்.
உங்களால் குடிசையில் வாழ முடியும்னா எங்களால இந்தியாவுல வாழ முடியும்.
Anonymous அவர்களே! நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு ஒன்னும் புரியலை. என்னை திட்டறீங்களா?. அவர திட்டறீங்களான்னு ஒன்னும் புரியலை. ஒருத்தன் அயல்நாட்டில் இருந்துக்கிட்டு இந்தியாவை பற்றி பெருமை பேசுகிறானே என்ற உங்கள் காண்டு மட்டும் தெரிகிறது. நான் யாரையும் வசைபாட வில்லை. நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். ரொம்ப Tension ஆயிட்டீங்கன்னு நினைக்கிறேன். //** குடிசை வாழ்வு சிறந்து வாழ்வு, நீ குடிசைக்குத் தான் போகணும் என்று சொல்வது எந்த அளவு நியாயமோ **// உங்களுக்கு சுத்தமாக புரியவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் நாட்டுப் பற்றை பார்ப்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி :-)
துடிக்கிறது மனது நிறைய எழுத! ஆனால் நட்பு நாடி வந்த உறவுமுறை தடுக்கிறது.
சிவா! உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி ஜோ அவர்களே! //** துடிக்கிறது மனது நிறைய எழுத**/ எழுத என்ன தயக்கம் நண்பரே. எழுதுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலே ராஜி எழுதிய பின்னூட்டத்துக்குப் பதிலாத்தான் இந்தப் பின்னூட்டத்த எழுதினேன்.
நான் டென்சனாயிட்டேன்னு எப்படி முடிவு பண்ணீங்க?
இந்தியாவுல வாழறதுக்கு வக்கில்லாம அல்லது விருப்பமில்லாமதான வெளிநாட்டுக்கு ஓடிப்போயிருக்கிங்க? அப்புறம் என்ன நாட்டுப்பற்று வேண்டிக்கிடக்குது?
சிலருக்கு மொழிமேல பற்று. சிலருக்கு மதத்துமேல பற்று. சிலருக்கு சாதிமேல பற்று. சிலருக்குப் பெண்களின் கற்பு மேல பற்று. இவங்க எல்லாரையும் விட மேல இருக்கறதா நினைக்கறவங்களுக்கு நாட்டு மேல பற்று. பற்று வைக்கிறவங்க திறந்த மனதுடையவர்களா இருக்கறது சிரமம்.
குறைகளைக் குறை என்று சொன்னா உடனே நாட்டுப்பற்று இல்லாதவன் என்று முத்திரை குத்துவது சுலபம்.
\\இது ஒரு அபத்த லாஜிக். இந்தியாவிலே இருக்கிற எல்லாமே மட்டம்னு சொல்லிகிட்டு யாரும் நாட்டை விட்டு போறதில்லை. பொருளாதார ரீதியா முன்னேற்றம் தேடலாம்னு போறாங்க அவ்வளவுதான்\\
அப்படின்னா பொருளாதாரம் மட்டும் மட்டம்போல.
குறைகளைச் சுட்டிக்காட்டினா அதில் என்ன தவறு?
\\இந்தியாலே இருந்துகிட்டு இந்தியாவை திட்டிக்கிட்டே இருந்தா அனானி சந்தோசப்படுவாரு போல.. \\
இது இன்னா சேம் சைடு கோல் போல இருக்குதே
\\இந்திய பாஸ்போர்ட் இருக்கிற வரைக்கும் எங்கிருந்தாலும் நாட்டுப் பற்று கண்டிப்பா இருக்கும்\\
நீங்க எவ்வோ biased ன்னு இதிலேயே தெரியுது.
Mr. Anonymous,
the post by Mr. Siva is in response to a malaysian indian's perceptions on India. I replied because, these people are racially indians/tamilians, but their thought and undersatnding of other countries will be influenced by what is projected by their govt. and their own judgement with whatever little exposure they had with the country.
the young gentleman, till a couple of years back was in India, the country he was born, grown up, studied (as per his own words). he had ample opportunites to see for himself how the country is progressing. still he talks ill of the country in front of others. i never said that he should never leave the country and stay put. let him go wherever he wants, and do things to as he wishes. that is none of my business.
i assume you are angry with me because i considered the guy not patriotic. i feel the young gentleman is well, just immature and his two years stay abroad has made him compare his motherland with australia and he concluded that this country is not good enough at least for him.
i gave it as an example only because, when our own people can talk like that, see things as black and white only, we should not feel offended when a foriegner say things similar. i consider the malaysian indian as an alien to India.
anonymous, i also assume you consider people who have left India are not patriotic. well, many go abroad to make a decent living for their families back in India. that doesn't mean that they unpatriotic. it is difficult to explain, because, you didnot understand what I wrote in my previous responses.
hope i have made things clear. thanks and with regards,
raj
at the end of my reply above, my name should have been raji, and not raj. sorry for the error in typing
raji
நாட்டுப்பற்று என்று பேசறவங்கதான் immature.
மொழிப்பறற்று, சாதிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று போலவே நாட்டுப்ற்றும் அவசியமற்றது.
எந்த நாட்டிலும் உள்ள குறைகளை யார் வேண்டுமானாலும் பேசலாம். யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.
என் நாட்டில் லஞ்சம் இருக்குதுதான், ஆனா அத வெளிநாட்டுக்காரன்கிட்ட சொல்லக்கூடாது என்பது அபத்தம்.
சொல்லும் கருத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்க. ஆனா சொல்லவே கூடாதுன்னு சொல்லாதீங்க.
நான் சிறுவனாக இருந்தால் கவலைப்படுவேன்தான். ஆனால் மனைவி பிள்ளைகளுடைய ஒரு கணவன் குடும்பத்தைக் கவனிக்காமல், ஊதாரிக் குடிகாரனாகவோ அல்லது சூதாடியாகவோ இருந்தா அப்படிப்பட்டவன் தவறையும் சுட்டிக்காட்டக்கூடாதா?
நான் சிறுவனில்லை. அம்மா இப்படிச் சொல்லிவிட்டாரே என்று அழுவதற்கு. நீங்கள் இன்னும் குழந்தையாக இருந்தால் நான் என்ன செய்யறது?
இங்கே குறை மட்டும் சொல்வதால் என்ன லாபம்? மனைவி குடிகாரக் கணவனின் தவற்றைக் கணவனிடமே சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.
ஆனால் தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதுதான் பேதைமை.
நான் கண்டவரை அனேகமாக வேறு எந்த நாட்டவரும் தன் தாய்நாட்டை மற்றோர் முன் இழித்துப் பேசியதில்லை.
நம் நாடு முன்னேறவே முன்னேறாது என்று ஜோசியம் சொல்வதை விட, முன்னேறுவதற்கான காரணிகளை அடுக்குவது நன்று.
//**நம் நாடு முன்னேறவே முன்னேறாது என்று ஜோசியம் சொல்வதை விட, முன்னேறுவதற்கான காரணிகளை அடுக்குவது நன்று.**// அதை தான் நானும் சொல்லி இருக்கிறேன். சொல்லும் விதம் ஒன்று இருக்கிறது. அதுவும் குறை சொல்வதற்க்கு முன், தனக்கு என்ன அருகதை, நம்ம இந்த நாட்டிற்க்கு ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டிருக்கிறோமா என்று நினைக்க வேண்டும் (இந்தியாவில் வாழ்பவர்களுக்கு இதை சொல்ல வில்லை).
வீட்ல சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்டுத் திருந்தலன்னு ஆன பிறகுதான் வேற வழியில்லாம தெருவுல வந்து முறையிடறா ஆந்த மனைவி. அப்பவும் தான் திருந்தனும் என்று உணராம தெருவுல போய் பேசறதால என் மானம் போவுதேடி என்று மீண்டும் அவள அடிக்கற கணவன் மாதிரி பேசாதீங்க.
திருந்தறதுக்கு முதல் வழி குறைகள ஒத்துக்கறது.
தவறுதலாக நான் ஒரு + குத்திவிட்டேன்.மன்னிக்கவும்.
மன்னித்து வழங்கப்பட்டது கார்த்திக் அவர்களே. இனி அந்த தவறை செய்யாதீர்கள் :-)
enaku therindha oruvar nan ippodhu india pona podhu yegapatta traffic jam. 'every tom dick and harry has a car now' endraar.
idhil sollum mudhal visayam
indhiya oru yezhai , paraari naadu. rendavadhaga indha paraari naatil ippozudhu kandavenelam car vechirukan. yane vechiruka kudadha endru ketka thonugiradhu.
idhai oruvar meeting il 15 per munnilayil sonnal pakkathilirupavanuku kovam varadha?
unga padhivukku + podugiren.
pudhiya naatu paasathai kanbipadharku pazaya natai avasiyam kevala paduthiye aaga venduma enna. ? ivargalum andha parari naatilirundhu vandhavargal dhane. vanathilirundhu varavillaye!
Ayya Annonymous Avargalley,
Therruvil murrai iddungal vennadam ednru solla villai...Anna sollarthey orru kudikarranai paarthu sollringaley......China Chinanu Vaai kizhiyyey pessraningallay...annga inna nadukuthunu Unmmaiyey theirnchuku Karruthu Suthanthiram irruka....???
Vetri perruvathu sullabam....Anna ellaryum mathithu Athai Nalla vaazyil Adainthaal than athu vetri...illana verrum kuppai....
Mallai tamizar,Indiar illana ...Unga vellaiyey parrthukiitu ponga.....Naangal mudhilil Indiargal appuramthaan Tamizhargal ellam.....
Unga veetu prechhannaiyey,neeingalkeetukum munnamey, Naan vanthu therithu vaacha asingaaam irrukathu.......
Mudincha ethavathu seeyunga....illana koncham ammadiyay irrunga Sir.....Namma Naddu matha veeti officergal solli thaan munnarnumdra nellamayil illai....
Ippa China,Americanu Vaaia pollakravanag ellam...India Yenn naddunu oddi vara naal veegu thollavil illai.....
Anbudan,
Nata
எழுதினா தமிழ்ல எழுதுங்க, இல்லன்னா இங்லீஷ்ல எழுதுங்க. தமிழ இங்லீஷ்ல எழுதறத படிக்க முடியலங்க
நல்ல சவுக்கடி சிவா
நான் இப்பொதான் வலை பதிவுக்கு வந்து இருக்கேன்
உங்க பதிவுகளை பாத்து கிட்டு இருக்கேன்...........
Hi Siva
ipo than intha blog padichen..
nanum shiva than..intha blog-ku ivlo periyaaaaaa comments iruku...ellam padithen. but ithula yaarum statistics padi pesave illa..apadi prove pani iruntha ivanga ellam vaaya moodirupanga. america suthanthiram vanginathu 1776, athoda population india va vida 4 times kammi. but area wise 4 times jaasthi. china 1911 vanguchu still it has a large area. but india ivlondu irunthutu evlo population evlo language evlo cultural diff....etc., etc.,
neenga ellorum pesura antha 2 naadum use panrathu 1 language.
but india intha 60 years la entha idathula iruku nu yaarukavathu theriyuma?
ellathayum ennala solla mudiyathu..google it and find. Indian army is the 3rd biggest army. analum naama yaartayum sanda podurathu illa...ivlo language, corruption, illetracy , religion, northies southies nu irunthalum naama intha position-a adanchurukom....namma kita 1 language irunthuchuna naamalum engeyo poirukalam. ipovum munnerite irukom. innum 40 years la (100 years after independt.) naama super power-a than irupom. ipadi sensible-a pesunga. atha vitutu kudikaran, amma kettu ponava ipadi unarchi vasa pattu pesureengale oliya urupadiya onnum pesala...siva i liked ur blog a lot, but neenga kooda apadi pesala...antha malaysia karara thitta mattum than senjurukeenga..hope this will make u all ppl realise their mistakes. ennada entha pakkam ivan pesuran nu paakureengala....dnt worry I AM AN INDIAN. enakum en roomla irukura telugu payanukum epavum ithey than sanda...avan india waste nu solrathum nan support panni pesurathum...oru pala moli solli mudichukuren.
"Mothalla unga muthugula irukura aluka clean pannunga...
atha vitutu aduthavan muthugala aluku irukunu palla katatheenga..."
- Oru True Indian.
P.S: siva send me updates reg this topic to shivaguru.s@gmail.com and delete this P.S.
Post a Comment