Friday, February 24, 2006

நாலு பேருக்கு நன்றி

கோ.ராகவன் கூப்பிட்டு இருக்காக
தம்பி சிங்கு கூப்பிட்டு இருக்காக
கீதா கூப்பிட்டு இருக்காக
குமரன் கூப்பிடவான்னு கேட்டாக, நான் தான் வேண்டாம்னுட்டேன்.

இப்படி செவனேன்னு இருந்தவன இழுத்து இங்கே புலம்பவிட்டுட்டாங்களே..ஏற்கனவே நாலு நாலா பதிவ பாத்து பாத்து வெறுத்து போயி இருப்பாங்க. இதுல என்னைய வேற புடிச்ச நாலு, புடிக்காத நாலுன்னு போட சொன்னா நான் என்ன செய்வேன். இருந்தாலும் ஒரு பதிவு போட விசயம் கெடைச்சிருக்குல்லா. விட முடியுமா? என்ன சொல்லுதிய.

எவனோ ஒரு மகராசன்/ராசி ஆரம்பிச்சி வச்சி, ஒன்னு நாலாகி, நாலு பதினாறாகி..இப்படியே வைரஸ் மாதிரி போய்ட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்மணம் முகப்புல வெறும் நாலா தான் தெரியும் போல. 'லே! இனி எவனாவது நாலுன்னு வார்த்தைய பதிவுல எங்கையாவது பயன்படுத்தினா தமிழ்மணம் சேகரிக்காது' அப்படின்னு காசி சார் ஒரு சட்டம் கொண்டு வரதுக்குள்ள என்னோட பதிவ போட்டுறேன் (காசி சார்! சும்மா ஜாலியா தான். தப்பா எடுத்துக்காதிய :-).

என்ன பெரிசா சொல்ல போறேன். ஏதாவது எழுதி அடுத்த நாலு பேர இழுத்து போடணுமே..ம்ம்ம்..சரி ஆரம்பிச்சுடறேன்..

இதுவரை வாழ்ந்த நாலு இடங்கள்.

1. கந்தசாமிபுரம் - எங்க ஊரு பேரு தாங்க.
2. விழுப்புரம் - ரெண்டாப்பு ரெண்டு மாசம் அங்கே படிச்சேன். ஊரு ஒத்துக்கலைன்னு கிராமத்துக்கே ஓடிட்டோம்.
3. சென்னை - படிச்சது, வேலை பார்த்தது
4. அமெரிக்கா - தற்காலிகமாக. கம்பெனி அனுப்பி இருக்கு.

புடிச்ச நாலு படம்

1. ஆண் பாவம்
2. காதலிக்க நேரமில்லை
3. மணல் கயிறு
4. மைக்கேல் மதன காமராஜன்

புடிச்ச நாலு சினிமா ஆளுங்க.

1. இளையராஜா
2. இளையராஜா
3. இளையராஜா
4. இளையராஜா

பார்த்த நாலு வேலைகள்:

1. பல்பொடி கம்பெனி
2. சைக்கிள் கடை (பதிவு சீக்கிரம் வருது)
3. டி.வி ஷோரும்
4. இப்போ சாப்ட்வேர்

போதும்னு நெனைக்கிறேன். இப்போ நாலு பேர எங்கே போய் தேடுவேன். எல்லோரும் சங்கிலில இருக்காங்கலே..யாரு பதிவுக்கு போனாலும் அங்கே 'நாலு'ன்னு ஒரு பதிவு இருக்குதே..என்ன செய்ய..சரி இவங்களை இழுத்து விடலாம்

1. மோகன் தாஸ்
2. பாரதி
3. சத்தியா
4. அல்லி மகன்

17 comments:

இலவசக்கொத்தனார் said...

வாருமய்யா. நீங்களும் மாட்டிகிட்டீரா. சந்தோசம். சந்தோசம். இப்பொந்தான் நிம்மதியா இருக்கு.

அமெரிக்காவுல எங்கவே இருக்கீறு?

சிங். செயகுமார். said...

என்ன சிவா தேரி ஆட்டுகுட்டின்னு பட்டியல் நீளும்னு நெனச்சேன். இப்பிடி.............

லதா said...

//பார்த்த நாலு வேலைகள்:
1. பல்பொடி கம்பெனி//

இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் என்று அகில உலக புகழ் பெற்றிருக்கும் கம்பெனியா?
:-)

சிவா said...

இலவசம்! குமரன் குடிகொண்டிருக்கும் அதே மினியாபோலிஸ் தான்..அதே ஆபீஸ் தான் :-)

சிவா said...

தம்பி சிங்கு! தேரி, ஆட்டுக்குட்டி எல்லாம் ஒரு வரியில சொல்ல கூடிய புடிச்சதா..அதெல்லாம் தனி தனி பதிவா வருதே..அதனால தான் விட்டுப்புட்டேன்..ஒரே பட்டியலில் பட்டியல் போட்டா மனசு கேட்குமா :-)

சிவா said...

வாங்க லதா! அதே அதே! எப்படி கண்டுபுடிச்சீங்க.இங்கே பாருங்க.

http://sivapuraanam.blogspot.com/2005/12/blog-post.html

பழூர் கார்த்தி said...

என்னங்க, புடிச்ச நாலு சினிமா ஆளுங்களுமே 'இளையராஜா'தானா ???? பரவால்ல நல்லாத்தேன் இருக்கு :-)

பரஞ்சோதி said...

சிவாவும் வந்தாச்சா?

அதானே, சிங் சொல்லுற மாதிரி எலந்தைப்பழம் எல்லாமே சொல்லுவீங்கன்னு பார்த்தா?

நாலு என்பதற்காக நாலே வெசயத்தை சொல்லி சமாளிச்சிபுட்டியேப்பூ.

சிவா said...

சோம்பேறி பையன்! ஆமாங்க. ராஜா இசையை தவிர, அவர் உருவத்தை டி.வில பார்த்தாலே நான் ரொம்ப சந்தோசமா ஆகிடுவேன். நான் ரசிக்கும் ஒரே சினிமா துறையை சேர்ந்த ஆள் அவர் தான். அதான் ஒரே ஆள் பேர போட்டாச்சி.

சிவா said...

அல்லிமகன்! வாங்க சார்! வாங்க! அதான பார்த்தேன்..ஒன்னுமே எழுதாம இருக்கறேன்னு :-).
எசக்கி புடிச்சிருக்கா..நன்றி. சைக்கிள் கடை சீக்கிரம் வருது. பாரதிராஜா அளவுக்கு 'என் இனிய' என்றெல்லாம் சொல்ற அளவுக்கு நமக்கு கதை ஞானம் கெடையாது..உங்களை மாதிரி ஆளுங்க தொடர்ந்து படிச்சி சொல்ற கருத்துக்கே 'நீங்க சொல்ற மாதிரி ரெண்டு நாள் சாப்பாடு இல்லாம எழுதலாம்''என்ன சொல்றீய :-)

சிவா said...

வாங்க பாரதி! சங்கிலியில் இனைச்சாச்சி :-). உங்கள் நாலு பதிவை சீக்கிரம் போடுங்க..பார்க்க, படிக்க ஆவலாய் உள்ளேன்.

சிவா said...

பரஞ்சோதி! கூட்டத்தோட கோவிந்தா பதிவுல ரெண்டு லைன்ல சொல்ல கூடிய விசயமா நம்ம தேரி, கிராமம் எல்லாம்..அதான் சிம்பிளா முடிச்சிட்டேன் :-). உங்க பதிவு எப்போ வருது

சத்தியா said...

"போதும்னு நெனைக்கிறேன். இப்போ நாலு பேர எங்கே போய் தேடுவேன். எல்லோரும் சங்கிலில இருக்காங்கலே..யாரு பதிவுக்கு போனாலும் அங்கே 'நாலு'ன்னு ஒரு பதிவு இருக்குதே..என்ன செய்ய..சரி இவங்களை இழுத்து விடலாம்"

1. மோகன் தாஸ்
2. பாரதி
3. சத்தியா
4. அல்லி மகன்"

என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு
நன்றி சிவா.

G.Ragavan said...

மணல்கயிறு படம் எனக்கும் பிடிக்கும் சிவா. அதில் உலக்கை குத்திக்கிட்டே கிஷ்மூ சாணி மிதிக்கிற சீன் பயங்கர காமெடியா இருக்கும்.

அதே மாதிரி மைமகாராஜன்ல மனோரமாவும் ரூபினியும் மேடையில் நாடகம் போடுற சீன். ரொம்ப நல்லாருக்கும். கடைசி வரைக்கும் அலுக்காம சிரிக்கலாம்.

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

சிவா said...

நன்றி சத்தியா! எப்போ உங்க நாலு பதிவு வருது :-))

சிவா said...

ராகவன்! //**அதில் உலக்கை குத்திக்கிட்டே கிஷ்மூ சாணி மிதிக்கிற சீன் பயங்கர காமெடியா இருக்கும்.
**// ஆமாங்க. 'மணல் கயிறு' படம் முழுவதுமே காமெடி தான். அப்புறம் மனோரமாவ பார்க்க ரகசியமா கிஷ்முவ அனுப்ப, அங்கே உமாவோட அப்பா வந்து சேர...செம காமெடி