Sunday, February 12, 2006

*நட்சத்திரம்* - இன்றே கடைசி

அமாங்க! அந்தா இந்தான்னு ஒரு வாரம் ஓடிடிச்சி. இன்னைக்கு தான் நம்மோட கடைசி ஷோ. இந்த ஒரு வாரம் தமிழ்மணம் தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிட எனக்கு வாய்ப்பு கொடுத்த காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

மறக்க முடியாத ஒரு வாரம். இதை என்னுடைய வலைப்பூ வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வாரமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. நெசமாவே, நான் இந்த அளவு ஆதரவை எதிர்ப்பார்க்கவில்லை..எத்தனை புதிய நண்பர்கள்..எத்தனை பாராட்டுக்கள்..நன்றி..நன்றி..நன்றி..

பொங்கல் பதிவு போட்டு சரக்கு காலியாகி போய் இருக்கும் போது பார்த்து மதி அவர்கள் 'நட்சத்திரம் ஆக விருப்பமா' என்று கேட்ட போது, ரொம்பவே பயமாக இருந்தது. நம் மானம் போய்டக் கூடாதேன்னு கொஞ்சம் யோசித்தேன். ஒத்துக்கொண்ட நாளில் இருந்தே ஒரே யோசனை...என்ன எழுத..என்ன எழுத..என்று..பல்லு வெளக்கும் போது...சாப்பிடும் போது..இப்படி சதா அதே நெனப்பு தான். அப்போ அப்போ தோனுவதை எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக மொத்தம் ஐந்து பதிவுகளுடன் தயாரானேன்.

நான் அவ்வளவாக மற்றவர்கள் வலைப்பதிவுகளுக்கு சென்றதில்லை. நேரம் இருப்பதில்லை என்பது ஒன்றே காரணம். என் 3 வயது மகளுடன் விளையாடவே நேரம் போய்விடும். எல்லோரும் தூங்கியதும் விடியற்காலை கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது எழுதுவது உண்டு. நெலம இப்படி இருக்க, இப்படி அறிமுகம் இல்லாத எனக்கு வரவேற்பு கிடைக்குமா என்று அச்சம் இருந்தது. இங்கே வலைப்பதிவை படிப்பதில் 95% நண்பர்கள் வலைப்பதிவர்களே. இங்கே வரும் 1000 வலைப்பதிவையும் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. நமக்கென ஒரு நட்பு வட்டம், நம் ரசனைக்கேற்ற படி உருவாகிவிடுகிறது. என்னை மாதிரி நினைவலைகளில் காலம் தள்ளும் கும்பல், நக்கல்/நையாண்டி என்று ஒரு கும்பல், கருத்து/குடுமி சண்டைக்கு என்று ஒரு கும்பல் என்று நமக்கு ஒரு வட்டம் உருவாவது உண்மையே. இதை எல்லாம் மீறி என்னை கண்டு கொள்வார்களா என்று நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து விட்டீர்கள். நன்றி நண்பர்களே..

மொத்தம் ஐந்து பதிவுகளுடன் நட்சத்திர வாரத்தை தொடங்கினேன். 'இன்று முதல்' என்று ஆரம்பத்திற்கு 23 நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் என்னுடைய 'ஏங்குதே மனம்' 32 நண்பர்களை தேடிக் கொடுத்தது. ஒரு காதல் கதை சொல்ல முயற்சியின் விளைவே 'மலரே..குறிஞ்சி மலரே'. இதன் இறுதி பாகத்தை நண்பர் நடாவிடம் காட்டிய போது, சுத்தமாக திருப்தி இல்லை என்று சொல்லி விட்டார். அப்புறம் உட்கார்ந்து நிறைய திருத்தினேன். 'யோய்! காதலர்களை சேர மட்டும் விட்டுடாதீங்க என்ன. நல்லா இருங்கைய்யா' என்று திட்டினார். 'அதெல்லாம் சேர்த்து வைக்க முடியாது. முடிவை மாற்ற ஐடியா இல்லை' என்று கூறிவிட்டேன் :-). சில பதிவுகளை நான் பதிவதற்கு முன்னமே படித்து அதன் நிறை குறைகளை கூறிய நண்பர்கள் நடாவுக்கும், குமரனுக்கும் என்னோட நன்றி. அந்த கதையின் முடிவு எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்து உங்க கருத்துக்களை சொன்னீங்க. அவங்களுக்கு என் மனசுக்குள்ளேயே ஒரு பெரிய நன்றி.

மதி அவர்கள் என்னிடம் என்ன மாதிரியான பதிவை எதிர்பார்ப்பார்கள் என்றும், இந்த வாய்ப்பை எதற்கு கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பதிவிலாவது அவர்களே 'இதை தான் எதிர்பார்த்தேன்னு சொல்ல வைக்கணும்னு நெனைச்சேன். அது 'ஏங்குதே மனம்' பதிவின் மூலம் கிடைத்தது.ரொம்ப சந்தோசமா இருந்தது. நான் இந்த பதிவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. மீண்டும் நன்றி நண்பர்களே.

அடுத்து கருப்பனை தான் பதியலாம் என்று இருந்தேன். அப்புறம் ஒரே செண்டிமெண்ட் பதிவாகவே போய்விடும் என்று தான் கிராமத்து மணத்தை எடுத்து விட்டேன்.

ஐந்தாவது (கடைசி) பதிவாக, ஒரே கிராமமா எழுதறோமே, கொஞ்சம் சாதாரணமாகவும் எழுத முயற்சிக்கலாமேன்னு வந்த ஆசையின் விளைவே 'வர..வர..நாடு நல்லால்லே'. நண்பர் கைப்புள்ள (மோகன்ராஜ்) சொன்ன மாதிரி, ஒரு கிராமத்து கதை எடுத்து விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். இருந்தாலும் ஒரு முயற்சி தானே. அதில் நான் ஒரு நகைச்சுவை/நையாண்டி நடையில் தான் முயற்சி பண்ணினேன். சில நண்பர்களுகு புரிந்தது. என் மனைவியே வாசித்து பாத்துட்டு திரு திருன்னு முழிக்கிறா. சரி டோட்டல் ப்ளாப்னு நெனைச்சிக்கிட்டேன் :-). அதில் நான் சொல்ல நினைத்த விசயம், ஒரு தனி மனிதனாக நம்மால் முடிந்த அளவு நல்ல விஷயங்களை முயற்சிக்கிறோமா என்று தான். கடைசில எல்லோரும் லஞ்சத்தை புடிச்சிக்கிட்டாங்க. எனக்கே பயம் வந்துட்டு..நாமே ஒரு குடுமி புடி சண்டையை, அதுவும் நட்சத்திர வாரத்தில் ஆரம்பித்து வைக்கிறோமோன்னு..புள்ளையார் புடிக்க கொரங்கா மாறிடுச்சு..அதனால தான் அவசர அவசரமா ஒரு பதிவை 'பள்ளிக்கூடம் போகலாமான்னு' எழுதி போட்டேன் (திருப்தி இல்லாமலேயே), ஒரு விவாத விடயத்துடன் என் நட்சத்திர வாரத்தை முடித்து கொள்ள மனம் இல்லாமல்.அதுக்கும் நண்பர்கள் கொடுத்த பின்னூட்டத்தை இன்னிக்கு காலைலேயே பாத்துட்டு, சந்தோசமா இந்த கடைசி பதிவை எழுதுகிறேன்.

மொத்ததில் நான் எழுதிய ஐந்து பதிவுகளும் எனக்கு ரொம்ப திருப்திங்க. திருப்தி எப்போ வரும்னா, வரும் பின்னொட்டங்களின் எண்ணிக்கையில் அல்ல. அதில் நண்பர்கள் எழுத்துக்களில். எனக்கு எவருமே 'நல்ல பதிவு' 'அருமை' என்று மொட்டையாக சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரும் மனதில் இருந்து கொட்டி விட்டு போயிருந்தீர்கள். என் பதிவை விட, நீங்கள் இட்ட பின்னோட்டங்கள் ரொம்ப சுவாரசியமானவை. நன்றி நண்பர்களே.

உண்மைய சொல்லனும்னா, இதுக்கே ஓஞ்சி போய்ட்டேன். மண்டையிலே சத்தியமா சரக்கு கெடையாதுங்க. இந்த 5 பதிவுக்கே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். குடும்ப நேரங்கள் ரொம்பவே அடி வாங்கின. என்ன பண்ணுறது நட்சத்திர வாரமாச்சே. காலியா போன சரக்கு சட்டில இருந்து கொஞ்சம் இருந்ததையும் நல்லா சொரண்டி போட்டாச்சி. இப்போ நல்லா விம் பார் போட்டு கழுவி சட்டிய கவுத்தியாச்சி. என்னுடைய புராணம் வழக்கம் போல வாரம் ஒன்றாவது தொடர முயற்சி செய்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு பெரிய வாய்ப்பை கொடுக்கும் காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் மனசார என் நன்றியை மீண்டும் சொல்லிக்கிறேன்.
எனக்கு அடுத்தததா நட்சத்திரமாக ஆரம்பிக்க காத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

இந்த ரெண்டு மூனு வாரமாகவே பரிச்சைக்கு படிக்கும் மக்கு மாணவன் போல தான் என் நிலைமை. கஷ்டப்பட்டு படிச்சி பரிட்சை எழுதிட்டேன். பாஸா! பெயிலா- என்று நீங்க தான் சொல்லணும். பாஸோ..பெயிலோ...ஆனா பரிட்சை முடிஞ்சதும் பெரிய ஒரு லீவு விடுவாங்களே... :-)

ஹையா...எனக்கு லீவு விட்டுட்டாங்களே...வரேன் :-)

--------------------------------------------------

மொத்தமாக 60 நண்பர்கள் வந்து என்னுடைய வாரப்பதிவுகளை படித்து என்னை ஊக்கப்படுத்திச் சென்றுள்ளீர்கள். எல்லோருக்கும் என்னோட சிறப்பு நன்றிகள் :

தேசிகன், எல்.ஏ. வாசுதேவன், மதி கந்தசாமி, சிங் செயகுமார், பாரதி, தருமி சார், ஜோசப் சார், குமரன், பரஞ்சோதி, கைப்புள்ள (மோகன்ராஜ்), ராகவன், ஜோ, சதீஷ், ரஜினி ராம்கி, தாணு, செல்வன், இலவசகொத்தனார்,முத்துகுமரன், சிங்.செயகுமார்(எல்லா பதிவுக்கும் கவிதை கொடுத்ததுக்கு சிறப்பு நன்றி தம்பி), முத்து (தமிழினி), ஐயா ஞானவெட்டியான், மஞ்சூர் ராசா, இராமநாதன், சுந்தர், என்னார், இளவஞ்சி, இளந்திரையன், நடா, நிலவு நண்பன், கார்த்திக் ஜெயந்த், சந்தோஷ், கீதா, கிறுக்கன், டி.ராஜ், விவசாயி, சத்தியா, ஒலியினிலே, உஷா அக்கா, சாம், ராமச்சந்திரன் உஷா, எல்.எல்.தாஸ், மணியன், அபிராமம், தெக்கிக்காட்டான், நாமக்கல் சிபி, நிலா,மதுமிதா அக்கா, செல்வராஜ், பார்த்தா, தங்கமணி, அல்வாசிட்டி விஜய், வி.எஸ்.ரவி, கோபி, அல்லி மகன், காஞ்சனா, கீதா சாம்பசிவம், கார்த்திக், குணா, சிவகுமார்,வெளிகண்ட நாதர், யுகன் மற்றும் அனானி நண்பர்கள். யாராவது விட்டு போயிருந்தா, மன்னிச்சிடுங்க.

மற்றும் படித்து பின்னோட்டம் போட நேரம் இல்லாமல், வசதி இல்லாமல், பின்னோட்டம் எப்படி போடுவது என்று விவரம் தெரியாமல் சென்ற எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

எல்லாத்துக்கும் மேலே இந்த வாரம் முழுவதும் ப்ளாக்கர் என்னை தொந்தரவு செய்யாமல் பாத்துக்கிட்ட கடவுளுக்கு ரொம்ப நன்றி.

35 comments:

கைப்புள்ள said...

சிவா,
இந்த ஒரு வாரமும் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் ரசித்து படித்தேன். உங்களுடைய எழுத்து நடைக்கு நான் ரசிகன் ஆகி விட்டேன் என்பதில் எனக்கு ஒரு துளியளவும் சந்தேகமில்லை. எங்கேயாவது என் பதிவுகள்ல அதன் தாக்கம் கண்டிப்பா இருக்கும்னு நெனைக்கிறேன்.

எனக்கு உங்க கிட்ட ரொம்ப புடிச்சது நீங்க அனுபவிச்சதை,பார்த்ததை, உணர்ந்ததை எல்லாம் உண்மையா கொஞ்சம் கூட போலித்தனமோ செயற்கைத்தனமோ இல்லாம் எழுதறீங்க பாருங்க...அது தாங்க. உங்க எழுத்துல ஒரு genuinenessஐ என்னால உணர முடியுதுங்க. நீங்க நெனக்கிறத எழுத்துல சுலபமா உங்களால கொண்டு வர முடியுது. ரொம்பவே ரசிச்ச வாரம் இதுங்க. லீவு முடிஞ்சு நீங்க வந்ததும் இன்னும் கலக்கல் பதிவுகளை எதிர்பார்க்குறேன். நன்றி.

ramachandranusha(உஷா) said...

என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பு என்பது இதமான, சுகமான அல்லது ஏதாவது ஒன்றை அறிந்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். எளிமையின் அழகை நீங்கள் மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். கிராமம் என்பது
சினிமாவில் மட்டும் பார்த்ததால், கிராமங்கள், சிறுவயது அனுபவங்கள் என்றால் ஓடி வந்துப் படித்துவிடுவேன். வழக்கமான
டயலாக்- நட்சத்திர வாரம் முடிந்ததும் காணாமல் போகாமல், அவ்வப்பொழுது வந்து எழுதுங்கள்.

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் சிவா,

உங்க நட்சத்திர வாரத்தில் அசத்திபுட்டியேலே.

ENNAR said...

ஒரு வாரம் சிறப்பாக பதிவிட்டு உங்களுக்கு வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

ஒரு வாரம் நல்லா போச்சுங்க சிவா. நீங்களும் இந்த வாரத்திக்கு அப்புறம் நிறுத்தாம தொடர்ந்து எழுதுங்க.

படிக்கத்தான் இருக்கோமில்லா.

மணியன் said...

உங்கள் நட்சத்திர வாரம் நன்றாக இருந்தது.இனி முன்னாள் நட்சத்திரமாக மேலும் மிளிர வாழ்த்துக்கள்.

பூனைக்குட்டி said...

சிவா நானெல்லாம் எல்லாப்பதிவையும் வாசித்தேன். பதிலிட முடியாத அளவிற்கு நேரப்பிரச்சனை. உங்கள் வாரம் நன்றாகவேயிருந்தது.

G.Ragavan said...

சிவா, உங்கள் நட்சத்திரவாரம் வயிற்றைக் கெடுக்காத சத்துள்ள வீட்டுச் சாப்பாடு போல இருந்தது என்பதே உண்மை.

நல்ல சாப்பாடு சாப்பிட்ட பின் கையும் வாயும் மணக்கும் என்பார்கள். அது போல இதமான பதமான அமைதியான உங்கள் நேர்மையான எழுத்துகள் படித்து மனம் மணக்கிறது.

இந்த வாரம் நான் வேலைப்பளுவில் மாட்டிக் கொண்ட பொழுது, நான் வருத்தப்பட்டேன். சிவாவின் நட்சத்திர வாரத்தில் என்னால் ஒழுங்காக பின்னூட்டம் இடமுடியவில்லையே என்று.

ஊர்க்காரார். நல்ல பேர்க்காரர் அல்லவா. இன்றைக்கு நேரம் ஒழியவும் வந்து இந்தப் பதிவைப் பார்த்தேன். இனிமேல் மற்ற பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் இடுகிறேன்.

நம்மூர் மண்ணின் மனத்தையும் நல்ல பண்புகளையும் எடுத்து வைத்த உமக்கு நன்றி. நன்றி. நன்றி.

Sundar Padmanaban said...

சிறப்பாக வாரத்தை முடித்ததற்குப் பாராட்டுகள் சிவா.

நட்சத்திர வாரத்தில் நட்சத்திர அறிவிப்பாக My SPB வலைப்பதிவைப் பற்றி அறிவித்ததற்கும், அப்படியொன்றை ஆரம்பிக்கத் தூண்டுதலாய் இருந்ததற்கும் நன்றிகள்.

உங்கள் பதிவுகளைப் படிததாலும் தொடர்ந்து பின்னூட்டமிட முடியவில்லை. மன்னிக்க.

வாழ்த்துகள்.

அன்புடன்
சுந்தர்.

நிலா said...

//மொத்ததில் நான் எழுதிய ஐந்து பதிவுகளும் எனக்கு ரொம்ப திருப்திங்க. திருப்தி எப்போ வரும்னா, வரும் பின்னொட்டங்களின் எண்ணிக்கையில் அல்ல. //

சிவா,
இங்கேதான் நிக்கறீங்க.

எளிமைக்குன்னு ஒரு சுவை உண்டு. அது பாசாங்கு இல்லாத உங்கள் எழுத்துக்களில் இருக்கு. வாழ்த்துக்கள்

சத்தியா said...

சிவா!

உங்கள் நடசத்திர வாரம் மிக நன்றாக, ரசனையாக மனதைத் தொடும் விதத்தில்
அமைந்திருந்தது. வாழ்த்துக்களுடன்...

நன்றிகள் சிவா.

சிவா said...

தருமி சார் சொல்லி சென்றது (தெரியாம அழிச்சிட்டேன் :-):

எல்லாருமு ஒருமித்து ஒண்ணு சொன்னங்க...எழுத்தில் எளிமைன்னு..அது நிஜம்தான். அதோடு 'நெஞ்சுக்கூட்டுல' இருந்து வரும் freshenss இருந்திச்சு.

லீவு கொண்டாடிட்டு நல்ல பிள்ளையா ஒழுங்கா சீக்கிரம் திரும்பி வந்து, நிறைய எழுதுங்க.

சிவா said...

மோகன் ராஜ் (கைப்புள்ள), உங்கள் பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி. உங்கள் வேலைகளுக்கு இடையே தவறாம என்னோட ஒவ்வொரு பதிவையும் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள்.
நீங்க கேட்ட ராஜா பதிவு என்னால கொடுக்க முடியவில்லை. பாதி எழுதி விட்டேன். ஏனோ திருப்தியாக வரவில்லை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதி பதிகிறேன். உங்கள் விருப்பத்தை
நிறைவேறாததற்கு மன்னிக்கவும்.

சிவா said...

ராமசந்திரா உஷா!

//** எளிமையின் அழகை நீங்கள் மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். கிராமம் என்பது சினிமாவில் மட்டும் பார்த்ததால், கிராமங்கள், சிறுவயது அனுபவங்கள் என்றால் ஓடி வந்துப் படித்துவிடுவேன் **// கிராமமே எளிமையும் அழகும் நிறைந்தது தான். அங்கேயே வளர்ந்ததால் என்னிலும் எளிமை இருக்கிறது. என் எழுத்துக்களை ரசித்து தொடர்ந்து பாராட்டியமைக்கு ரொம்ப நன்றி உஷா. கண்டிப்பா ஏதாவது மேட்டர் கெடைச்சிதுன்னா எழுதறேன். :-)

சிவா said...

பாரதி! என்னுடைய ப்ளாக்கிற்கு முதன் முதலாக என் நட்சத்திர வாரத்தில் வந்து தொடர்ந்து கொடுத்த ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி. முகம் தெரியாத, முன்பின் அறியாத உங்களை போன்ற நண்பர்களே என் நட்சத்திர வாரத்தில் எனக்கு கிடைத்த இன்னொரு போனஸ். :-)

//** ஓய்வெடுங்கள்.. மீண்டும் சந்திப்போம். **// கண்டிப்பாக :-)

சிவா said...

நன்றி பரஞ்சோதி!

நன்றி என்னார்!

//**ஒரு வாரம் நல்லா போச்சுங்க **// ரொம்ப நன்றி இலவசக்கொத்தனார் :-).

சிவா said...

நன்றி மணியன்!

//** சிவா நானெல்லாம் எல்லாப்பதிவையும் வாசித்தேன். பதிலிட முடியாத அளவிற்கு நேரப்பிரச்சனை **// மோகன்தாஸ்! எல்லா பதிவையும் படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)

சிவா said...

வாங்க ராகவன்! என்னடா நம்ம ஊரு ஆள காணோம்னு பார்த்தேன். இன்னைக்கே எல்லாத்தையும் படிச்சி சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி ராகவன்.

//** உங்கள் நட்சத்திரவாரம் வயிற்றைக் கெடுக்காத சத்துள்ள வீட்டுச் சாப்பாடு போல இருந்தது **// :-). ஹோட்டல் மாதிரி வகை வகையா, கலர் கலரா எடுத்து சொல்ல தெரியவில்லை. இருக்கிறதை அப்படியே எடுத்து விட்டேன். நீங்க ரசித்ததுக்கு நன்றி ராகவன்.

நம்ம ஊரு கதைய சொல்லிக்கிட்டே இருக்கலாம்..என்ன சொல்லுதிய..முடிஞ்ச அளவு வலையேத்தறேன் :-))

சிவா said...

நன்றி சுந்தர்! My SPB-அ ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. எனக்கும் நட்சத்திர வாரம் முடிகிறது. நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். மேலும் சில நண்பர்கள் சேர்ந்து எழுதுவதை பார்க்க ரொம்ப சந்தோசம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

சிவா said...

வாங்க சத்தியா! நீங்கள் தொடர்ந்து படித்து கொடுத்த ஊக்கத்தை என்னால் மறக்க முடியாதுங்க. உங்களை மாதிரி நண்பர்களால் என் வாரம் இனிய வாரமாக சென்றது. ரொம்ப நன்றி சத்தியா.

சிவா said...

தருமி சார்! (உங்களை மிஸ் பண்ணிட்டேன் பாருங்க :-)

//** எழுத்தில் எளிமைன்னு..அது நிஜம்தான் **// நன்றி சார்

//** லீவு கொண்டாடிட்டு நல்ல பிள்ளையா ஒழுங்கா சீக்கிரம் திரும்பி வந்து, நிறைய எழுதுங்க **//

சரி சார்! ஊர் காரவிய சொல்லிட்டிய..வந்துடறேன் :-)

சிவா said...

உஷா அக்கா!
//** Natchathira vaaram - Nalla peyar - ADhil neenga miga azhagana Star a jolicheenga!!!**// நன்றி.

//** Oru nalla ezhuthalin Sagodhariyaga irupadhil perumai kolgiren **// ரொம்ப ஓவர். தம்பிய ரொம்ப கிண்டல் அடிக்கறீங்க :-))

//** Sivavuku naan oru saghodhari - avarai enaku theiryum = enru net la ungalai padutha mudivu panniten!!! **// ஹாஹாஹா..மொதல்ல எனக்கு நல்ல பேரு இருக்கான்னு பாத்துக்கோங்க.. :-))

சிங். செயகுமார். said...

நெஞ்சில் நிறைந்த வாரம்
கொஞ்சும் கிராமம்
அஞ்சாயிரம் மைல் தாண்டினாலும்
அழகான தமிழில்
நிழலாக என் முன்னே
இனிய தமிழில்!
எழுதுங்கள் நண்பரே
இதயத்தால் வாசிக்கிறோம்!
அன்புடன்
சிங்.செயகுமார்.

சிவா said...

//** எளிமைக்குன்னு ஒரு சுவை உண்டு. அது பாசாங்கு இல்லாத உங்கள் எழுத்துக்களில் இருக்கு **// நன்றி நிலா. கிராம வாழ்க்கையே ஒரு பாசாங்கில்லாத வாழ்க்கை தானே. அதை நான் சும்மா எடுத்து விடுறேன் :-)). எல்லோருக்கும் புடிச்சிருக்கிறதை பார்க்க ரொம்ப சந்தோசம் :-). (நீங்க சுட்டி கொடுத்த கதை ஒன்னு படிக்க பாக்கி இருக்கிறது :-).

சிவா said...

தம்பி சிங்கு! கடைசி பதிவுக்கும் ஒரு குட்டிக் கவிதை கொடுத்து அண்ணனை சந்தோச படுத்திட்டீங்க. நன்றிய்யா :-)

Anonymous said...

சிவா,

எப்படி இருக்கிங்க.. ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கிங்க போல.. உங்க எல்லா பதிவுலயும் படித்து பின்னூடம் போடணுமின்னு ஆசைதான் இருந்தாலும் முடியலை. ஆனாலும் நேரம் கிடைச்சப்ப தவறாம வந்து படிச்சேன். என்னை உருக்கினது கருப்பன்(ஏன்னா நானும் அனுபவபட்டிருக்கேன்...) மற்ற பதிவுகளை மறுபடி சாவகாசமா படிச்சு பின்னூட்டமிடறேன்.

சிறப்பா நட்சத்திர வாரம் முடிச்சிங்க.. வாழ்த்துக்கள்.

பாருங்க.. இந்த இணையதளம் எத்தகைய உதவி செய்யுது. ஒரேபோன்ற கருத்துடைய/ரசனையுடைய நண்பர்களை/உறவுகளைக் கொடுக்குது.

முதல்நாளன்று எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அட நம்ம சிவாதானா நட்சத்திரம்னு

வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

சிவா said...

கீதா! நல்ல இருக்கேன் கீதா. நீங்க எப்படி இருக்கீங்க.

//** ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கிங்க போல **// ஆமாம் :-))

//** மற்ற பதிவுகளை மறுபடி சாவகாசமா படிச்சு பின்னூட்டமிடறேன். **// கண்டிப்பா படிச்சிட்டு சொல்லுங்க கீதா. உங்கள் கருத்துகளை கேட்க ஆவலாய் உள்ளேன்.

//** முதல்நாளன்று எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அட நம்ம சிவாதானா நட்சத்திரம்னு **// ஆமாம் கீதா..முகம் தெரியாத தூரத்து நண்பர்கள், கிடைக்கும் நட்பு...சந்தோசமா தான் இருக்கு :-).

உங்கள் பாராட்டுக்கு நன்றி கீதா.

நாமக்கல் சிபி said...

நீண்ட நாட்கள் கழித்து ஒரு நெருங்கிய நண்பனை சந்தித்து உரையாடியது போல் இருந்தது உங்கள் நட்சத்திர வாரம். கலக்குங்க சிவா!

Unknown said...

Nandri Siva.....Intha vaara pathivugal annaithyum yennal padika iyyalvillai....Somehow at office I managed to read the Krimathu manam. Unga +ey...to write without any velli veesam.....Kallukunga Siva....

Endrum Anbudan,
Natarajan

சிவா said...

நன்றி சிபி! நண்பர்கள் எல்லோருடைய பின்னோட்டத்தையும் பார்க்கும் போது, என்னுடைய எளிய எழுத்தை புரிந்து கொண்டமை தெரிந்தது. நன்றி சிபி.

நன்றி சதிஷ்.

சிவா said...

யோவ் நடா! இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எப்படியோ..இன்னும் ஒரு வாரத்துலாவது எல்லாத்தையும் படிச்சி சொல்லி இருக்கனும்..இல்லன்னா :-)).

பாராட்டுக்கு நன்றி நடா.

கொங்கு கோபி said...

சிவா..

உங்க பதிவை என்னோட நண்பி மூலமாக கேள்விப்பட்டு வந்து மேஞ்சேன்...ஆகா..நல்ல தீனி...:-)...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது..."இன்றே கடைசி"-தான்...ரொம்ப இயற்கைய இருந்துச்சு...நிறைய எதிர்பார்க்கிறேன்..

சிவா said...

வாங்க கோபிநாத்! நண்பி ரெக்கமெண்ட் பண்ணுற அளவுக்கு ஆகி போச்சா நம்ம ப்ளாக்..கேக்கவே சந்தோடமா இருக்கு :-))

என்னங்க இது, நான் கஷ்டப்பட்டு நெறைய எழுதி போட்டிருக்கேன், நீங்க என்னடான்னா 'இன்றே கடைசி' தான் நல்லா இருக்குன்னு சொல்லறீங்க :-)). எப்படியோ ஒங்களுக்கு புடிச்சா சரி :-)

தாணு said...

சிவா
மனம் நிரைந்த வாழ்த்துக்கள். நல்ல வேளை போனவாரம் கொஞ்சம் ப்ரீ.எல்லா பதிவும் வாசிக்க முடிந்தது. தொடர்பு விட்டுப்போகாமல் அப்பப்போ எழுதுங்க

சிவா said...

வாங்க தாணு அக்கா! எனக்கு கூட உங்கள் தொடர் வரவு ஆச்சரியம் தாங்க. நம்ம ஊருல, டாக்டரா இருந்துக்கிட்டு, குடுப்ப நேரம் தவிர, தினமும் இவ்வளவு நேரம் என் பதிவுகளை படிக்க நேரம் செலவிட்டு உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டீர்கள். ரொம்ப நன்றி தாணு அக்கா.

தொடர்ந்து எழுத கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் :-)

அன்புடன்
சிவா