திரை இசையில் தாலாட்டுப் பாடல்கள் எப்படி இருக்கின்றன என்று தேடியதில் சில நல்ல பாடல்கள் கிடைத்தன. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவு. தாலாட்டு பாடல்கள் எல்லாமே சுகமானவை. அழகான தாய்மையை சொல்லும் வரிகள் கொண்ட பாடல்கள். இங்கே சிலவற்றை கேட்டு பாருங்கள்.
__________________________________________________
முதல் பாடல். இசைகருவிகள் பயன்படுத்தாத ஒரு பாடல். சின்ன குயில் என்று சும்மாவா சொன்னார்கள். பாடல் இதோ...
தவமான தவமிருந்து தாளாம நா சொமந்த முக்கனியே !
நவமான மாமணியே ! நா படைச்ச கண்மணியே எந்துரையே !
பழஞ்சேலையில ஏனகட்ட செல்வ மக தூங்கிரலாம் !
அதிகாலையிலே கண்முழிச்சி வெளையாட போயிரலாம்.!
இதுவும் சித்ரா தான். அப்படி ஒரு இனிமை. தபேலா இசை மேலும் அழகு சேர்க்கிறது. கேட்டு பாருங்கள்.
சிறுவாழை தண்டு ரெண்டு சினுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு சாய்ந்து வரும் தோள்களில்
தாய்மை என்பது அது போல வரமும் ஏதடா!
உன்னை சுமப்பது அது போல சுகமும் ஏதடா!
இளங்காற்றின் இன்பமே ! இனி ஏது துன்பமே !
__________________________________________________
மூன்றாவதாக ஒரு சுசிலா பாடல்.
குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழழை உன் சொல் போல இசையாவதேது!
யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை !
உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவும் இல்லை !
அன்பிலே அன்பை இனைத்து வம்புகள் செய்வதும் என்ன
உண்மை தான் சொல்லடி செல்வமே சிரிக்காதே !
"துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில், புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்....அறிவாயோ" இதோ ஒரு அன்னையின் பாசம்.
பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்
கண்ணில் நிலவு குடி இருக்கும்!
இதழ் ஒரத்திலும் சிந்தும் தேன் துளிகள்
அமுதாய் அமுதாய் அது இனிக்கும் !
நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் !
நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்.....அறிவாயோ?.
_____________________________________________________________
கடைசியாக ஒரு சின்ன தாலாட்டு. மூன்று வரி தான் இந்த பாடல். சோகம் கலந்த ஒரு தாலாட்டு.
ஆசை ராஜா ஆரீரோ !
அம்மா பொன்னே ஆரீரோ !
தோளிலே மாலையாய் ஆடும் கண்ணா ஆரீரோ!
ஆடும் கண்ணா ஆரீரோ!
உமா ரமணனின் முதல் பாடல் என்று நினைக்கிறேன். பாடல் கேட்க..
_________________________________________________________________
பின் குறிப்பு : இதில் சின்ன தம்பியில் வரும் "தூளியிலே ஆட வந்த" போன்ற பாடல்களை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பாடல்களில் பொதுவாக "பாட்டெடுத்து நான் படிச்சா. ...காட்டருவி கண்ணுறங்கும்" - இந்த ரீதியில் ஹீரோவில் பாடும் திறமையை போற்றி பாடுவதாகவே போகும். இதை தாலாட்டு பாடலாக எடுத்துக் கொள்ளவில்லை.
உங்களுக்கு தெரிந்த பாடல்களையும் கூறுங்கள்.
18 comments:
why not 'Varam Thantha saamikku' - Sippikkul Muthu???????
இசையில்லா அந்த முதல் பாடல் தான் முத்தான தாலாட்டு.
ஐயோ நிறைய இருக்குங்க.
"இந்தப் பச்சைக் கிளிக்கொரு.." - நீதிக்குத் தலைவணங்கு
இன்னும் நினைவு வர வர ஏத்தறேன்.
Jsri!
அமாம்! அந்த எம்.ஜி.ஆர் பாடல் ரொம்ப பிரபலம். ஏத்துங்க..ஏத்துங்க. எனக்கும் நாலு பாட்டு தெரிஞ்ச மாதிரி இருக்கும்.
அனானிமஸ்! அந்த பாடலை எப்படியோ மறந்து விட்டேன். நியாபக படுத்தியதற்க்கு நன்றி.
தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் "கண்ணான கண்மகனே கண்ணுறங்கு சூரியனே" பாடல், வைரமுத்து எழுதிய அருமையான பாடல்
வெளிகண்ட நாதர் அவர்களே!
"தண்ணீர் தண்ணீர் " படம் பார்த்திருக்கிறேன். பாடல் அவ்வளவாக நியாபகம் இல்லை. நியாபக படுத்தியமைக்கு நன்றி.
"தேனே தென்பாண்டி..."- உதய கீதம்
"இப்படியோர் தாலாட்டு"- அவர்கள்
"அத்தை மடி மெத்தையடி"
"தாழம்பூவே கண்ணுறங்கு.."
"கண்ணன் ஒரு கைக்குழந்தை"- பத்ரகாளி
"கண்ணே கலைமானே.." மூன்றாம் பிறை
"ஓ பாப்பா லாலி"- இதயத்தைத் திருடாதே
இதெல்லாம் இப்போதைக்கு மேலாக நினைவுக்கு வந்தது. இதுல எந்தெந்தப் பாடலை நீங்க நிஜ தாலாட்டுன்னு சொல்வீங்கன்னும் தெரியலை. :)
"நீல வண்ணக் கண்ணா வாடா.." பாடுகிற நிஜமாவே தூக்கம் வரும். ஏதோ பழைய்ய படம்.
"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே"
"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல"- பாச மலர்
"பூஞ்சிட்டுக் கன்னங்கள்.." - துலாபாரம்
"தென்பாண்டிச் சீமையிலே" - நாயகன்
"தாலாட்டு மாறிப் போனதே"- உன்னை நான் சந்தித்தேன்(சந்தேகம்)
"பச்சைமலைப் பூவு.." - கிழக்கு வாசல்
பழைய பாடல்கள் நிறைய இருக்கலாம். எனக்குத் தெரியாது. :))
Jsri அவர்களே! மிக நல்ல பாடல்களை வரிசை படுத்தியிருக்கிறீர்கள். நன்றி!
"அத்தை மடி மெத்தையடி" "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல" மிகவும் நல்ல பாடல். நிஜ தாலாட்டுன்னு நான் பொதுவாக பாடல் முழுவதும் குழந்தையை பற்றி வரும் பாடல்களை சொல்லியிருந்தேன். நீங்கள் சொல்லியிருக்கிற பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்.
"பச்சைமலைப் பூவு..", "ஓ பாப்பா லாலி" "கண்ணே கலைமானே.." இதெல்லாம் ஒரு வகை.
செல்லக் கிளியே மெல்லப் பேசு - பெற்றால்தான் பிள்ளையா
ஆராரோ ஆரிரோ கண் மலரே நீயாரோ
அன்னை என்ற பெறுமை தந்தாய்
அன்புக்கோர் அர்த்தம் சொன்னாய்
துண்பத்தை மறந்து நின்ற தூயவனே பாடுகின்றேன்
ஆராரோ ஆரரிரோ
அந்தி வரும் சந்திரனே ஆடிவரும் பூங்காற்றே
ஓடி வரும் புதுப்புனலே பொன்மலரே கண்மலராய்
பூஜையின் பலனைக் கண்டேன்
பூவை நான் பெருமை கொண்டேன்
பூவுலகம் பெருமை கொல்ல கண்மலரே
கண்டதுயிலாய்.
இது எப்படி இருக்கு
சின்னஞ் சிறு கிளியே - கண்ணுக்குள் நிலவு
சின்ன தாயவள் - தளபதி
என்னார்! கவிதை நல்லாருக்கு. நீங்க எழுதினதா?.
கணேஷ்! 'கண்ணுக்குள் நிலவு' பாடலை என் பதிவிலேயே ஆடியோவோடு போட்டிருக்கிறேன்.
Chinnanchiru kannmalar, Chembavala vaaimalar......
Path Bhakthi- by P.Susheela
Seeraarum Payinkilliye Chiinnanchiru
Puthumalare.....
Thaaiyillappillai-by Soolamangalam Rajaluxmy.
Velli Nila Muttraththile-
TMS in Vettaikkaran
Ivai ellam nalla thaalattu paadalgal.
Jay of Toronto
ஜே! ரொம்ப நாள் கழித்து இந்த பதிவை பார்த்ததுக்கு ரொம்ப நன்றி. உங்க பாடல் பட்டியல் நன்று. குறித்துக் கொண்டேன். தொடர்ந்து வாங்க.
Siva,
Can you please tell me what films the song "then pOdhikai Kaatre" and the first song is from?
-Kajan
Kajan! 'தென் பொதிகை காற்றே' - படம் 'பூமணி'.
முதல் பாடல் 'தவமாய் தவமிருந்து' இடம்பெற்ற படம் 'புதுப்பாட்டு'
அன்புடன்,
சிவா
Singara punnagai kannara kandale sangeetha veenayum yedhukkamma? - Song by MS Rajeswari
Post a Comment