Thursday, September 29, 2005
பூவார் சென்னி மன்னன்
இளையராஜாவின் 'திருவாசகம்' வந்த புதிதில் எனக்கு அதில் உள்ள இசை பிடித்திருந்தது. ஆனால் பாடலின் பொருள் அவ்வளவாக புரியவில்லை. எதோ சிவனை போற்றி பாடப்படுகிறது என்று தெரிகிறது, ஆனால் முழு பொருளும் புரியவில்லை. B.Sc முதலாமாண்டில் இரண்டாவது செமஸ்டரில் 3 கணித பாடத்திலும் சேர்த்து 94 % எடுத்ததற்க்காக தமிழ் ஆசிரியர் என்னை கூப்பிட்டு பாராட்டிவிட்டு தமிழில், ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டார். நானும் பாசாகிட்டேன் சார் என்று 35 , 36 என்றேன். காரி துப்பிவிட்டு சென்றார் (ஆங்கிலத்தில் 1 மார்க் அதிகம் எடுத்த கோபம் அவருக்கு). இப்போது இந்த இளையராஜாவால் மறுபடியும் தமிழ் படிக்க வேணடியதா போச்சு.
அங்கே, அங்கே சில பாடல்களுக்கு பொருள் கிடைத்தது, ஆனால் முழு பாடலுக்கும் கிடைக்கவில்லை. அந்நேரம் கிடைத்தவர் தான் எனது நண்பர் குமரன். நம்ம மரமண்டைக்கு ஏறும் வகையில் தினமும் ஒரு அடிக்கு பொருள் எழுதி தருகிறேன் என்றார். தன் வேலைகளுக்கு இடையே எனக்காக எழுதி கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும். இப்போது 4-வது பாடல் எழுதி கொண்டு இருக்கிறார்.
திருவாசகத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு பொருளை கொண்டு வரும். 'பூவார் சென்னி மன்னன்' பாடல் 'வாருங்கள் ! இறைவனை நோக்கி செல்வோம்' என்று ஒரு நடைபயணம் போல என்பது போல எல்லா பாடல்களும் வரும். அதற்கு ஏற்றார் போல் இசையும் ஒரு Marching போல செல்லும். "பூவேறு கோனும்" பாடலில் ஒரு தும்பி வாயிலாக இறைவனின் புகழ் பாடப்படும்.
பொருள் புரியாமல் கேட்டதை விட, திருவாசக பாடல்கள், பொருள் புரிந்து கேட்க்கும் போது பல மடங்கு ரசிக்க முடிந்தது. பூவார் சென்னி மன்னன் பாடலின் பொருளை கீழே உள்ள சுட்டியில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.
முதலில் மறக்காமல் SaiIndra Font-ஐயும் இங்கே இருந்தது இறக்கிக்கொள்ளுங்கள். இது அழகி மென்பொருளை கொண்டு எழுதியது. ( யுனிகோடில் சரியாக எனது கணிணியில் வரவில்லை). ( Copy to your C:\Windows\fonts folder)
ஒரு முறை முழுவதும் வாசித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள். முழு இசையையும் உணர்வீர்கள்.
பூவார் சென்னி மன்னன்
இந்த Document-ல் எதாவது எழுத்து பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்கிறேன். தமிழ் தட்டச்சுக்கு நான் புதிது.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
Siva,
Nalla Kaariyam Seidheergal. Nandri.
Nanbaraey,
Kadaichi Paattin Aangila pozhippil 'Except' endru ulladhu. Adhu 'Expect' endru irukkavendum.
ம்ம் சிவா சார் திருவாசக வெற்றியைக் கெட்டியாக புடிச்சுகிட்டீங்க போல.. :-)
நல்ல முயற்சி
அருமை! தமிழுக்கும் ஆக்ஸிஜன் கொடுக்க மேலும் இருவர் உள்ளீர்கள், மகிழ்ச்சி.
பாடல் அர்த்தம் புரிய இவ்வளவு மெனக்கெட வேண்டாம். ஏற்கனவே இசைவட்டில் உள்ள எல்லா பாடல்களுக்கான உரையையும் http://ta.wikibooks.org/wiki/thriuvasagam தளத்தில் பதிவேற்றியுள்ளேன். அல்லது, ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதுங்கள். pdf வடிவில் உரை அனுப்பி வைக்கிறேன். இது குறித்த எனது வலைப்பதிவையும் பின்வரும் முகவரியில் பார்க்கலாம்.
http://thamizhthendral.blogspot.com/2005/07/blog-post_21.html
ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி. கண்டிப்பாக நிறைய பேர் முன்னமே எழுதி இருப்பார்கள். அது எனக்கு எழுதி தரும் என் நண்பருக்கும் தெரியும். அவரது எளிய நடையில் எனக்காக எழுதி கொடுப்பார். சரி நண்பர்களும் பார்க்கட்டுமே என்று தான் பதிவில் போட்டேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Nanbaraey,
Ungal Nanbar Kumaranai pattri melum sila thagavalkal koorungal.
Ravishankar avargaley,
Siva solliyathu polla, intha padalin artham Kumaran sonna priagu, kettapatharkey inbamaga irrikirathu. Siva matrrum yennai pondra vargalluku miga ellmiyana murayil, nanbrraga irrunthu Kumaran solli kudutha. Itharku naangal avarauku nadri kadan pattu ullom.
Anbudan,
Nata
நன்றி நடராஜன். விரைவில் 'பூவேறு கோனும்' பாடலுக்கு பொருளை எதிர்பாருங்கள்.
மன்னிக்கவும், அது மாணிக்கவாசகர் அருளியது.
Post a Comment