Wednesday, September 21, 2005

திருவாசகம்

ஒரு வழியாக இரண்டு வருடமாக காத்திருந்த 'திருவாசகம்' ஒலித்தட்டு (CD) ஜுலை 1 ஆம் தேதி வந்து வெளிவந்தது. நான் ஒரு இளையராஜாவின் பரம ரசிகன் ஆதலால் நம்மலால என்னவெல்லாம் இந்த திருவாசக விற்பனைக்கு செய்ய முடியுமோ அத செய்ய நினைத்தேன். நம்ம நண்பர் ஒருவர் வேற அவர் பங்குக்கு ஒரு 100 CD விற்க போவதாக சொல்ல, நம்மை உசுப்பி விட்டது. காசு கொடுத்து CD வாங்கி இங்கே உள்ள மக்களுக்கு பழக்கமே இல்லை. எல்லாமே இனையத்தில் இருந்து இறக்கி கொள்கிறார்கள்.

நம்ம பங்குக்கு tis-usa கிட்ட இருந்து ஒரு 10 CD அனுப்ப சொன்னேன். ஒரு 20 CD வந்து சேர்ந்தது. வித்தப்புறம் காசு கொடுங்கன்னு சொல்லிட்டங்க. CD விலையை சொன்னதும் எல்லோரும் தலைதெரிக்க ஓடி விட்டார்கள். எல்லாவற்றையும் இந்திய ரூபாயிலேயே மாற்றி பார்த்து பழகி போன நம்ம புத்தி, $15 CD விலை என்றதும், Rs.650 - ஆ ஆ ஆ என்று எட்டி பாக்காலலே ஓட வைக்கிறது. $15 கொஞ்சம் அதிகம் தான். $8 - $10 சரியாக இருந்திருக்கும். தவிர இந்தியாவில் Rs.150 - ம் இங்கே Rs.650 வைத்ததால், நிறைய பேர் இந்தியாவில் இருந்து அனுப்ப சொல்லி விடுகிறார்கள். Rs. 300 க்குள் மேட்டர் முடிந்து விடும் இல்லையா.

சில நண்பர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். மெதுவாக போக ஆரம்பித்தது. tis-usa -ல இருந்து 'நீங்க அங்கே இருக்கற தமிழ் சங்கம், கோவில் எல்லாம் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உதவி பண்ணுவார்கள்" என்று சொன்னார்கள். எனக்கும் சரி என்றே பட்டது.

முதலில் தமிழ் சங்கம். கடல் கடந்து, தமிழை வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறார்கள். இந்த திருவாசகத்திற்க்கும் ஏதாவது உதவி பண்ணுவார்கள் என்று நினைத்தேன். அவர்கள் இனையம் போய் பர்த்தேன். சுனாமிக்கு நிதி கொடுங்க என்று முதல் பக்கத்துலேயே 'ஈ ஈ ஈ' என்று விளம்பரம் பல்லை காட்டியது. வங்கி கணக்கு எண், காசு கொடுக்க விவரம் எல்லாம் தெளிவாக இருந்தது. சுனாமி போய் 6 மாதம் போய் விட்டது, இன்னும் காசு பிரிக்கும் அவர்களின் நாட்டு பற்றை பார்த்து கண் கலங்கி விட்டது. சரி ஒரு இ-மெயில் அனுப்பி பாக்கலாம் அப்படின்னு ஒன்னு அனுப்பினேன். ஒரு வாரம் ஆனது பதிலே இல்லை. பாவம் எல்லாரும் ஜுலையில் டிசம்பரில் வந்த சுனாமிக்கு உதவி செய்ய போய் விட்டார்கள் என்று நினைத்து, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா என்று உறுதி செய்ய, இன்னொரு மெயில் (வேறு ID-ல இருந்து தான்) அனுப்பினேன் , "சார், நான் கொஞ்சம் சுனாமிக்கு பணம் கொடுக்க நினைக்கறேன், விவரம் அனுப்புங்கன்னு'. (புழுவ போட்டா மீன் வெளியெ வந்து தானே ஆக வேண்டும்). அடுத்த நாளே பதில் வந்தது, பணம் அனுப்பசொல்லி விவரங்களுடன். இப்படி இயற்கை அழிவுகள் வந்தால், அடிக்கிற அனுதாப அலையில மீன் பிடிக்க தான் நிறைய கும்மல் கிளம்பிவிடுகிறது. என்னோட திருவாசக மெயிலுக்கு இன்னும் பதில் இல்லை. காசு மேட்டர்னா சொல்லு அப்படின்னு சொல்லறாங்க. என்னே ஒரு தமிழ் பற்று.

சரி, சங்கம் தான் கவுத்துட்டு. கடவுளை பாக்கலாம் அப்படின்னு கோவில் போனேன். ஐயர் தமிழ் தான். பரவாயில்லையே கண்டிப்பா உதவி பண்ணுவார் என்று ஒரு நம்பிக்கை. போய் பேசினேன், "திருவாசகமா..அப்படின்னா என்னா" அப்படின்னு ஒரு குண்டை தூக்கி போட்டாரு. "பள்ளிக்கூடத்துல எல்லாம் 'புல்லாகி பூடாய்' அப்படின்னு படிசிடுப்போமே' - இது நான். ' நியாபகம் வரலை. ஒன்னு பண்ணுங்கோ. ஒரு CD எனக்கு கொடுங்கோ (ஓசி). கேட்டு பாத்துட்டு மத்தவாகிட்ட சொல்லறேன்." இது வேலைக்கு ஆகாதுன்னு, " இங்கே ஒரு நாள் CD வித்துக்கலாமா?. கோவிலுக்கு வெளியே தான் - கேட்டேன். "ஓ! நீங்க என்ன வேணும்னாலும் வித்துக்கோங்கோ. ஆனா, கொஞ்சம் டொனேசன் (donation) மட்டும் கொடுத்துட்டு பண்ணிக்கோங்கோ' . அதோடு அந்த திட்டத்திமும் ஊத்திக்கிச்சு.

பணம் கொடுத்தாதான் எல்லாமே நடக்கும் போலன்னு, நானே நண்பர்கள் எல்லோரிடமும் போய் திருவாசக பாடலை போட்டு காட்டி பேசினேன். கேட்ட எல்லோருமே வாங்கி கொண்டர்கள். கடைசியில மொத்தமாக 35 CD வித்தேன். ஏதோ ஒரு சின்ன திருப்தி..

6 comments:

Ganesh Gopalasubramanian said...

உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் சிவா

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

Good Work Shiva.. Keep it up :-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இவ்வளவு தாமதமாக விமர்சனம் தான் போட்டிருக்கிறீர்களோ என்று படிக்க ஆரம்பித்தேன்..இந்த விற்பனையில் உள்ள சிக்கல்களையும் சில போலி மனிதர்களையும் அடையாளம் காட்டி உள்ளீர்கள்..அதற்காக திருவாசகம் சி.டி வாங்காதவர்கள் எல்லாம் தமிழ் துரோகிகள் என்ற ரீதியில் எழுத அவசியமில்லை. சிலருக்கு இசை ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்..இருந்தாலும் சி.டி வாங்குவது தனிப்பட்ட விருப்பம்..அப்புறம், உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

சிவா said...

Dear Ravisankar,

Thanks for your comment. I didn't mention anywhere like that. I mentioned about about the money involved everywhere. Iyyar CD vangalai entru naan avarai kurai sollaliye. Avar donation keddathai thaan solli irunthen. eppadiyo, ungal ezhuthukku romba natri. adikkadi visit pannunga. :-)

ஜெகதீஸ்வரன் said...

Hi Siva,
Sorry for the late reply. Just now i've seen ur mail.

Nothing to do with thamizmanam agian. All the new post will be collected automatically..

All ur new posts r good.. Wishes for writing more in Tamil.

Cheers,
Jagadhees.

குமரன் (Kumaran) said...

சிவா, நீங்க சொல்ற மின்னியாபொலிஸ் கோவில் ஐயரைப்பத்தி எனக்கும் தெரியுங்கறதால அவர் கேட்டது எனக்கு ஆச்சரியமா இல்லை. நாம ஒத்துக்கிட்டாலும் சரி ஒத்துக்காட்டியும் சரி, வைஷ்ணவ சைவ வேற்றுமை இன்னும் இருக்கு. ஐயர் வைஷ்ணவர். திருவாசகமோ சைவத் திருமுறை. அப்படி இருக்க 'திருவாசகமா அப்படின்னா என்ன'ன்னு அவர் கேட்டிருந்தா அதில ஆச்சரியம் இல்லை. நீங்கள் ஒரு சிவன் கோவில் ஐயரிடம் சென்று 'பகவத் விஷயம்' என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயமாய் அவருக்குத் தெரிந்திருக்காது - ஆனால் வைஷ்ணவர்களிலோ (ஐயெங்கார்) சிறு குழந்தைக்கும் தெரியும். மேலும் மின்னியபொலிஸ் ஐயெர் ஆந்திராவில் பல தலைமுறையாய் வாழ்ந்து வரும் தமிழ் ஐயெங்கார். அதனால் அவருக்கும் திருவாசகம் தெரிய வேண்டிய அவசியமில்லை.

அந்த 'டொனெசன்' விஷயத்தைப் பத்தி நான் ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படித்தான் எல்லா இடத்திலயும் நடந்துகிட்டு இருக்கு.