Saturday, September 17, 2005

5 நிமிடத்தில் நீங்கள் கோடீஸ்வரனாக..

.

என்னங்க ஏதோ காளான் வளர்க்க, மெழுகுவர்த்தி செய்ய விளம்பரம்னு நெனைச்சிங்களா?. இல்லீங்கோ!. இது வேற விசயம்.. நீங்கள் கோடீஸ்வரனாக உங்களுக்கு தேவை கீழ்கண்டவற்றுள் ஒன்று,

சில பசு மாடுகள்..இல்லன்னா பரவாயில்லை.. எளிதா ஒன்னு..ஓரு முறுக்கு சட்டி, 1 லி எண்ணை, கொஞ்சம் கடலை மாவு.. கொஞ்சம் வசதி இருந்தா ஒரு பேருந்து.. ஒன்னுமே இல்லயா, கவலைய விடுங்க… உங்க வீட்டுல உங்க தாத்தா பழைய பெட்டிய தொறந்து பாருங்க, ஏதாவது மூலிகை செய்ய ரகசியம் எதாவது இருக்கும்.. இது தவிர முக்கியமான ரெண்டு பேர்… ஒரு திரைப்பட இயக்குனர்.. ஒரு இசை அமைப்பாளர்… ஹீரோ!!! . அது நீங்க தாங்க…

இப்போ புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். போன வாரம் ‘ஒரு நாள் ஒரு கனவு’ படம் பார்த்தேன். ஒரு காட்சியில ஸ்ரீகாந்தோட அம்மா” டேய்.. நீ அவ இடத்துக்கு போய் (அதாங்க அந்தஸ்து) அவள கூட்டி வர வேண்டும்’ அப்படிம்பாங்க.. படமும் கிட்டதட்ட முடியும் நேரம் ஆகிவிட்டது. இனி ஒறே வழி.. “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்’ அண்ணாமலை பாட்டு மாதிரி பாட்டு தான்னு நினைச்சேன். இருந்தாலும் பாசில் மேல ஒரு நம்பிக்கை ( படம் இந்த காட்சி வரும் போதே டப்பா டான்ஸ் ஆடிபோய்தான் இருத்தது). போட்டாரு பாருங்க ஒரு பாட்டை ‘இளமைக்கோர் வேகம் உண்டு , நீயும் எழுந்து வா’ அப்படின்னு. 5 நிமிடத்தில் ஸ்ரீகாந்த் கோடீஸ்வரனாயிட்டார். பாசில் நீங்களுமா!

விக்ரமனிடமே இருந்த காப்புரிமையை இப்போ சுரேஷ் கிருஷ்ணா, பாசில், ஆர். வீ. உதயகுமார் (படம் ‘நந்தவன தேரு’) எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எதற்க்கும் விக்ரமன் ஒரு வழக்கு தொடர்வது நல்லது.

எல்லா பாட்டுமே5 நிமிடம் வரும் பாட்டு என்றாலும் நல்ல காமெடியா தான் இருக்கு. கதாநாயகன் பஞ்ச பரதேசியா இருப்பார். பாட்டு உச்ச சுதியில் ஓடி கொண்டிருக்கும். ஊருல இருக்கற மில், பள்ளிகூடம்(சைடுல பொது சேவையும் பண்ணறாராம்) ஹீரோ பேருல காண்பிப்பாங்க. ஹீரோ தன் குடும்பத்தை ஒரு பெரிய வீட்டுக்கு மாற்றுவார். குடும்பமே ‘ஆ’ என வாயை பொளந்துகிட்டு நிக்கும். சுத்தி இருக்கற காமெடியனுங்க எல்லாருக்கும டை (Tie) கட்டி விட்டுருவாங்க. அவங்களும் நடக்க முடியாம கஷ்டப்பட்டு ஹீரோ கூட ஓடிக்கிட்டு பரபரப்பா இருப்பாங்க. ஹீரோ எதாவது கோப்புகளிள் கையெழுத்து போட்டுகிட்டே இருப்பார். தலைமுடியையும் மாற்றி மழுங்க சீவீ இருப்பார் (சீரியசா ஆயிட்டாராம்).

இந்த மேட்டர் சீரியல் பண்ணறவங்க கைல கெடைச்சுதுன்ன 365 எபிசோடா மாத்திர மாட்டாங்க…

7 comments:

Ramya Nageswaran said...

நல்லா தமாஷா எழுதியிருக்கீங்க..

Unknown said...

arrumayaga ezhudiirrukirgal. Sirrupu thaanga mudyavillai.

Nandri

Anonymous said...

Ha Ha Ha Ha!!!! Sooper writings!!!Siritha mugathudan ezhundhu selgiraen.
With Love,
Usha Sankar.

மதுமிதா said...

ஆமாம் சிவா

ஒரு புது மணப்பெண்னும், மாப்பிள்ளையும்
இங்கு வீட்டுக்கு வந்திருந்தாங்க.

அந்தப்பெண் சொன்னாள்
"அம்மா இவர் சொல்றார் அந்தப்பாட்டைப்பாடச் சொல்லி;
ஆனால் முதல்ல வந்த பாட்டைப் பாடிடாதே.கடைசியில் வரும் பாட்டைப்பாடும்மான்னார்
நாமா அஞ்சு நிமிஷத்தில சீக்கிரமே அது மாதிரி வாழ்க்கைத்தரத்தை இன்னும் உயர்த்திக்கலாம்னு சொன்னார்" னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சா

இப்பதான் காரணம் புரியுது

Anonymous said...

Very good one!!!

Anonymous said...

cool...man.....

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

கலக்கல்..
இப்படி படம் எடுத்த எத்தனை புரட்யூசர் 5 நிமிஷத்துல பிச்சகாரன் ஆனாங்களோ? ஏம்பா டைரக்டர்ஸ்
ஒரு அஞ்சு நிமிஷம் இந்த பதிவ படிச்சிட்டாவது திருந்துங்கப்பா..!