Thursday, September 29, 2005

பின்னணி இசை-1 பாரதி

நேற்று cinesouth-ல் சந்திரமுகி படத்தின் பின்னணி இசை ஒலித்தட்டாக வருவதாக ஒரு செய்தி பார்த்தேன். வரவேற்க்கதக்க ஒன்று.

என்னிடம் இருக்கும் இந்த பாரதி படத்தின் பின்னணி இசையையும் கேட்டு பாருங்கள்.

பாரதி, இளைராஜாவின் இசை தாலாட்டு. அத்தனை பாடல்களுமே அருமை. பாரதி வெளிவந்து தேவி திரையரங்கு 40 நாள் ஓடிக்கொண்டிருக்கும் போது, படம் பார்க்க சென்று 'ஹவுஸ்புல்' என்று திருப்பி வந்தேன் (பகல் காட்சி மட்டும் ஒடியது). ரொம்ப மகிழ்ச்சியோடு திரும்பி வந்தேன், படம் ஓடுகிறதே என்று. அந்த படத்தில் வரும் அத்தனை பின்னணி இசையுமே அருமை. இதோ உங்களுக்காக....பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

1. பாரதி கல்கத்தாவில் மக்களின் மூடநம்பிக்கைகளை பார்த்து மனம் வெதும்பி தனது சடை முடி எடுத்து விட்டு ஒரு மகாகவியாக மாறும் காட்சி. கேட்டு பாருங்கள்.


மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

2. பாரதி-செல்லமா முதலிரவு காட்சி. இங்கே அந்த தொடக்க பியானோ, அழகாக செல்லம்மாளின் பதட்டத்தை கொண்டுவரும். அதை தொடர்ந்து 'மயில் போல' பாடலை லேசாக தொட்டு வரும் இசை (அப்படியே பாடலை பிரதிபலிக்காமல்), அழகு. இசையிலேயே மனசுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க விட்டிருப்பார்.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

3. பாரதி அரண்மனையில் வேலையில் சேர வரும்போது வரும் இசை. என்ன ஒரு கம்பீரம். பாரதியின் மிடுக்கான நடையை அப்படியே இசையில் பிரதிபலிக்க வைத்திருப்பார்.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

4. இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இசை இது. பாரதி தன் வீட்டிற்க்கு வந்திருக்கும் நண்பர்களை சாப்பிட்டு விட்டு போக சொல்ல, செல்லம்மா அவர்கள் வேறு சாதிகாரர்களாக இருப்பார்கள் போல என்று தயங்க, பாரதி செல்லம்மாவை அறையும் காட்சி. பியானோவும் வயலினும் அழகாக பாரதியின் பதட்டத்தையும் (நண்பர்கள் கேட்டிருப்பார்களோ! என்று) செல்லம்மாவின் அழுகையையும் ஒரே காட்சியில் கொண்டு வரும். இங்கே..



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

5. பாரதி தன் சொந்த ஊருக்கு திருப்பி வரும் காட்சி. 'நல்லதோர் வீணை செய்தே' பாடலை தொட்டு வரும் வயலின் அழகு.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

6. பாரதி தன் அழிந்து போன வீட்டில் சென்று பழையவற்றை நினைத்து வருந்தும் காட்சி. வித்தியாசமான தொடக்க இசை எனக்கு பிடித்திருந்தது. கேட்டு பாருங்கள்.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

7. இது பாரதி படத்தின் ஆரம்ப இசை. அழகான வீணை இசை.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

4 comments:

Anonymous said...

Hello Siva, Raaja music pottiyaa oodi vandhutten unnoda blogkku!! All topics are very interesting, will visit often! Great job my friend!
Shri.Ilayaraaja's music is Ocean of Bliss!! enjoy! vinatha

Ganesh Gopalasubramanian said...

நல்ல முயற்சி சிவா....
maestromagic என்னும் யாகூ குழுமத்தில் ராஜா சார் பின்னணி இசையைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே நடப்பதாக நண்பன் சொன்னான்

Anonymous said...

Nandraaga vandhullathu

சிவா said...

கணேஷ் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

கணேஷ், maestromagic எனது நண்பர் வெங்கட் தான் நடத்துகிறார். நாங்கள் ஒரு குழுவே இருக்கிறோம். நான் கூட ரெண்டு, மூனு BGM போட்டுருக்கேன். உங்க மெயில் ID கொடுங்க. என்னோடது iirpithan@yahoo.com