அப்போது நான் நான்காம் வகுப்பில். காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் டிப்-டாப்பா கோர்ட்- சூட் எல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர் எங்கள் வகுப்புக்கு வருவார். கையில் ஒரு சின்ன சூட்கேஸும் வச்சிருப்பார். எங்களுக்கு தினமும் காலையில் கதை சொல்வது தான் அவர் வேலை. கதை கேட்பது என்றால் எல்லோருக்கும் விருப்பம் தானே. 9 வயது சிறுவன் எனக்கு புடிக்காம போகுமா. வகுப்பில் எல்லோரும் ஆவலாய் கேட்போம். சின்ன சின்ன படம் வைத்து கதை சொல்வார். கதையில் சிங்கம், கரடி, யானை என்று எல்லாம் வரும். இன்னொரு கதாபாத்திரமும் எல்லா கதையிலும் கண்டிப்பா வரும். அது இயேசு. இப்படி போகும் கதை ' குழந்தைகளா! இது தான் நம்மை நேசிக்கும் ஒரே கடவுள். நாமெல்லாம் பாவம் செய்தால் நரகத்தில் தான் போய் விழுவோம். நரகம் என்றால் அங்கே கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் தூக்கி போடுவார்கள்.இயேசு ஒருவரே நம்மை சொக்கத்துக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்ட தேவன். நீங்கள் எல்லாம் இயேசு பிள்ளைகளா?'. நாங்கள் எல்லாம் மொத்தமாக 'ஆமாம்' என்று தலை ஆட்டுவோம்.
ஒரு 9 வயது சிறுவனுக்கு 'பாவம்' என்றால் என்ன தெரியும்..'நரகம்' என்றால் என்ன தெரியும்..கொதிக்கும் எண்ணை..தீ..என்று ஏன் இந்த மிரட்டல். இவர்களுக்கு என்ன வேண்டும்?. ஒன்றும் புரியாத வயது அது. நீ கும்பிடுவது வெறும் கல். இயேசு ஒருவர் தான் தெய்வம் என்று திரும்ப திரும்ப சொல்லி அந்த பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்க அப்படி என்ன தான் அவசியம். இத்தனைக்கும் என் வகுப்பில் அத்தனை பேரும் இந்து.
இவர்களுக்கு ஒவ்வொரு மாணவனுக்கு பின்னாலும் இருக்கும் குடும்பம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு அது பற்றி தெரிய அவசியமும் இல்லை. அந்த குழந்தைக்காக தேரி காட்டில் போய் கஷ்டப்பாட்டு விறகு சுமந்து 'யய்யா! ..நல்லா படிய்யா' என்று, இருக்கும் ஒரு வேளை சோத்தையும் பிள்ளைக்கு கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கும் அந்த தாயை பற்றி இவர்களுக்கு தெரியாது. 'மாரியாத்தா! எம்புள்ளைய காப்பாத்து தாயே' அப்படின்னு ஒரு சின்ன காய்ச்சல் என்றாலும் உடம்பெல்லாம் திருநீறு அள்ளி போட்டு, இரவெல்லாம் கண் விழித்து கவனித்துக்கொள்ளும் அந்த தாயின் அன்பை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தோமா, பிஞ்சு மனச கெடுத்தோமா என்பது தான்.
'யப்பூ! செயகுமாரு அம்மங்கோயிலுக்கு போமாட்டேன்னு சொல்றான். கல்லுங்கறான்யா' என்று சொல்லி அழுத ஒரு தாயின் (எனது அத்தை) வேதனையை விட இவனுங்களுக்கு மதம் பெரிசா போனது. காட்டில் போய் ஓலை சுமந்து, இயலாமல் வீடு வந்தவுடன் அப்படியே ஒரு கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள் என் அம்மா. ஒரு மணி நேரம் அவர்களால் எதுவும் பேச கூட சக்தி இருக்காது. நான் அக்கா எல்லாரும் சுத்தி உக்காந்துக்கிட்டு இருப்போம். மூச்சு கூட விட முடியாமல் அப்படியே படுத்து கிடப்பார்கள். இது அப்போது எங்கள் வீட்டில் தொடர்கதை. அந்த கஷ்டத்திலும் எங்களை ஆளாக்கினார்கள். 'புள்ளையாரப்பா..புள்ளையாரப்பா' என்று என் தாய் எங்கள் நலனுக்காக வேண்டாத தெய்வம் கிடையாது. இப்படி என் கிராமத்தில் ஒவ்வொரு தாயின் கதையும் இது தான். இவர்களை அழவிட்டு மதம் பரப்பும் அந்த மதம் பிடித்த கிறுக்கர்களை அன்றே எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வளவே. இவர்கள் என்ன இயேசுவை நேரில் பார்த்திருக்கிறார்களா? இல்லை நான் தான் முருகனை நேரில் பார்த்திருக்கிறேனா?. பின் எதற்கு ஏதோ சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பது போல் 'பாவிகளே! மனம் திரும்புங்கள்' என்று கூச்சல். நான் இங்கு எந்த மதத்தையும் பெரிசு என்று சொல்லவில்லை. தன் தலையிலேயே தங்க காசுகளை அள்ளிக் கொட்டிக்கொண்டு தான் இறைவன் அடிமை என்று சொல்லும் பரதேசிகள் இந்து மதத்திலும் உண்டு. உன் மதத்தை, உன் நம்பிக்கைகளை உன் சமூகத்தில் மட்டும் காட்ட தெரியாதா?. மனிதனை, மனித மனங்களை நேசிக்க, புரிந்து கொள்ள தெரியாத, ஆனால் கடவுளை பற்றி பேசும் இவர்கள் தான் பாவிகள்.
என் கிராமத்தில் எல்லா மதத்தவரும் உண்டு. பொங்கலுக்கு கிருஸ்தவர்கள் வீட்டுக்கு பொங்கல் கொடுப்போம். அதே போல் கிருஸ்மஸுக்கு அங்கே இருந்து வரும். சின்ன வயசில் அந்த திராச்சை ரசத்திற்கும், அப்பத்திற்கும் ஆசை பட்டு நானும் சர்ச்சில் போய் நின்றிருக்கிறேன். ஆர்.சி கோவில் (மாதா கோவில்) திருவிழா என்றால் தவறாமல் "உப்பு-மிளகு (மாதாவுக்கு வேண்டி படைப்பார்கள்) வாங்கி போட்டுட்டு வந்துருய்யா" என்று என் அம்மா தவறாமல் 25 பைசா கொடுத்து அனுப்புவார்கள். நான் காதலிப்பது ஒரு கிருஸ்தவ பெண் என்று தெரிந்ததும் அம்மா சொன்ன ஒரே வார்த்தை 'அடப்பாவி! நல்லா பழகிக்கிட்டு இருக்கிற குடுப்பத்துல இப்படி பண்ணிட்டியே' என்று மட்டுமே. ஒரு வார்த்தை கூட மதம் பற்றி பேசவில்லை. என் திருமணம், திருநீறு, அதன் மேல் சிலுவை, அதன் மேல் திருநீறு என்று (நெத்தியில போட்டு நெத்திய ஒரு வழி ஆக்கிட்டாங்க) அத்தனை பேர் ஆசீர்வாதத்துடன் நடந்தது. இன்று என் வீட்டில் தீபாவளியும் உண்டு. கிருஸ்மஸும் உண்டு. மருதமலைக்கு என்னை கூட்டிச்சென்று, கோவில் கற்பகிரகம் வரை வந்து, ஐயர் கொடுத்த திருநீறை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொண்ட என் மச்சான் (மனைவியின் அண்ணன்) ஒரு கிருஸ்தவர் தான். நானும் அவருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு போயிருக்கிறேன். இப்படி மதம் என்பது நம் உறவுகளில், பாசங்களில் பினைத்து கிடப்பது உண்மை தான்.நம் யாருக்கும் யார் தெய்வமும் பெரிசா தெரிவதில்லை. அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரிந்திருக்கிறது. இதில் 'இயேசு..இயேசு' என்று தெரு தெருவாக அவரை இழுத்துக்கொண்டு அலையும் இவர்கள், சிறு குழந்தைகளிடம் நஞ்சை விதைப்பதை தான் என்னால் பொருத்துக்கொள்ளவே முடிவதில்லை.
எங்க ஊர் சுடலைமாடன் கோவில் கொடையில் எப்பவுமே முன்னால் நிற்கும் சுப்ரமணி அண்ணனை இந்த தடவை பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் கிருஸ்தனாக மாறி விட்டாராம். என் உறவினர் ஒருவார் எப்பவுமே தண்ணி. அவர் மனைவி ஏதோ பிரச்சினையில் தீக்குளிக்க, அங்கே ஆஸ்பத்திரியிலேயே இவர்கள் ஆஜர். இவர்கள் தீக்குளித்தால் கடவுள் என்ன செய்வார். இப்போது அவர்கள் கிருஸ்தவர்கள். இதில் கொடுமை என்னவென்றால் உடனே அவர்கள் பெயரும் மாற்றப்பட்டு விடுகிறது. அவர் பையன்கள் இப்போது இலவசமாக கிருஸ்தவ பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். இப்படி நான் பார்த்த மதமாற்றம் ஏராளம். எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பணம், வேலை, படிப்பு. ஏன் யாருமே முஸ்லீமாகவோ, இல்லை ஒரு முஸ்லீம் இந்துவாகவோ மாறுவதில்லை. இவர்கள் மட்டும் என்ன இயேசுவை நேரில் பார்த்துவிட்டார்களா..என்ன?. 'பாரதி' படத்தில் கிருஸ்தவனாக மாறிவிட்ட தன் நண்பனை (நிழல்கள் ரவி) பார்த்து 'நம் சமூகத்தில் இப்படி ஒரு அமைப்பு இல்லாமல் போய்விட்டதே..மகாசக்தி' என்று புலம்புவார். உண்மை அது தான். மொத்த முடிச்சியையும் பார்த்தால் கடைசியில் அது முடியும் இடம் 'பணம்'. இதற்கு விபசாரம் பண்ணலாமே. இந்த பாவங்களை இவர்கள் சொல்லும் இயேசுவே மன்னிக்க மாட்டார்.
என்னிடம் திட்டு வாங்கி கொண்டு போகும் கூட்டம் ஏராளம். நெல்லை இரயில் நிலையத்தில் ஒரு பெரியவர். ஆசிரியர் போல இருந்தார். எங்கே போனாலும் ஒரு கட்டு நோட்டிஸ், பிட் புத்தகங்களோடு தான் போவார் போல. 'தம்பி! நீ ஏசுவை விசுவாசி. அவர் வரும் காலம் சீக்கிரம் வருகிறது' என்று சில நோட்டிஸ்களை என் கையில் திணித்தார் (இது போல 100 சம்பவங்கள் சந்தித்து இருக்கிறேன்). அங்கேயே அவர் மூஞ்சியில் கிழித்து எறிந்தேன். ஒரு பிச்சைக்காரன் பேசினால் கூட நின்று பேசுவேன். அவனும் மனிதன் தானே. ஆனால் அன்று தெரிந்தே அவரை காயப்படுத்தினேன். அவர் காயப்பட்டது அவர் மூஞ்சியிலேயே தெரிந்தது. ஆனால் இவர்கள் செய்யும் காயங்கள் அவருக்கு தெரியாதா என்ன?. நான் பழனி முருகன் திருநீறு என்று கொடுத்தல் பூசுவாரா?. என் மதத்தை பற்றி கேட்க கூட பிடிக்காத இவனுங்க நாம மட்டும் கை கட்டி 'நீ பாவி' என்று சொன்னால் தலையாட்டி கேக்கணுமாம். 'இந்த நோட்டிஸ் அடிக்கும் காசுக்கு வெளியில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரு பொட்டலும் இட்லி வாங்கி கொடுக்கலாமே.அதை உங்களை கடவுள் ஆசீர்வதிக்க மாட்டாரா! என்ன?' என்று கேட்க நினைத்தேன். அவரின் வயது கருதி கேட்கவில்லை. இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் இவர்களை பார்த்தது எனக்கு ஆச்சரியமே. நம்ம நெத்தியில தான் எழுதி ஒட்டி இருக்குமே இந்து என்று (திருநீறு). 'Hi! Are you from India?. Are you Hindu?. Do you know about Jesus Christ' அப்படின்னு ஆரம்பிப்பானுங்க. ஏன் இந்தியனா இருக்க கூடாதா...இந்துவா இருக்க கூடாதா..அது பாவமா என்ன?..இவர்கள் மனதில் இருப்பது தான் என்ன. இங்கே இருந்து மதம் பரப்புகிறேன் என்று வரும், பணம் அனுப்பும் இவர்கள் யார் கேட்க போகிறார்கள்?. தெரியவில்லை.
இப்போதெல்லாம் இவர்கள் பார்க்கும் போதெல்லாம் நான் மெதுவாக மிருகமாக மாறி விடுகிறேன். இவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான். 'நீ சொல்லும் இறைவன் உண்மையிலேயே இருந்தால், அவன் மதம் பிடித்து அலையும் உன்னை சொர்க்கத்திலும், அவனை நான் அறிந்து கொள்ளவில்லை என்று ஒரே காரணத்திற்காக என்னை நரகத்திலும் தள்ளினால், நீ தேவன் என்று கொண்டாடும் அவனிடம் ஒன்று சொல்வேன் ' நீ தேவன் அல்ல..ஒரு சாத்தான் என்று'
அன்புடன்,
சிவா
88 comments:
I can understand your feelings about this, but I think calling someone "nAye" for that is in a blog is not that good, Siva.
Even those who agree with you may not like you calling them that. Please edit that word out.
சிவா நானும் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்ததால் நிறைய இது போல பார்த்திருக்கிறேன். குறிப்பாகப் பள்ளிகளில் நான் பட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. செ.சேவியர்ஸ் பள்ளியில் படித்தேன். ஆனால் அங்கும் பாரபட்சம் உண்டு. எனக்கு முட்டை தின்னி என்ற பெயர் கிடைத்ததும் அங்குதான். அதே போல நான் பெரியார் பள்ளிக்கூடத்திலும் படித்திருக்கிறேன். திகவினர் நடத்தும் பள்ளிக்கூடம். அங்கு அந்தத் திக காரர் வந்து யாராவது கையில் கயறு கட்டியிருக்கிறார்களா என்று பார்த்து வெட்டுவார். பலர் பேசாமல் இருப்பார்கள். நான் என்றைக்கும் ஒத்துக் கொண்டத்தில்லை. திருநீறு பூசுவது சிறு வயதுப் பழக்கம். அதையும் அழிக்கச் சொல்வார். நான் ஒப்புக்கொள்ளாமல் இருந்திருக்கிறேன். இராமகிருஷ்ண மிஷன் பள்ளியிலும் படித்திருக்கிறேன். இஸ்லாமியப் பள்ளியிலும் படித்திருக்கிறேன். பல இடங்களிலும் மத வெறியர்கள் உண்டு.
அன்பே சிவம் (இறைவன்) என்பதை உணராதவர்களை என்ன செய்வது. கண்டு கொள்ளாமல் போவதுதான் நல்லது.
பெங்களூரில் இப்படித்தான் ஒரு பிரசகர் வீட்டுக் கதவைத் தட்டினார். வேறு எதோ பேசுவது போலப் பேசி விஷயத்திற்கு வந்தார். அதற்குப் பிறகு நான் பேசத் தொடங்கினேன். அவர் விட்டால் போதுமென்று ஓடி விட்டார். இல்லை...நான் கிளம்புகிறேன்...எனக்கு வேலை இருக்கிறது...இதுதான் அவர் கிளம்பும் முன் சொன்ன வார்த்தைகள்.
ஆண்டவரே...அவர்கள் செய்வது என்னவென்று அறியாதவர்கள். அவர்களை மன்னிப்பீராக.
அகிலாண்டேஸ்வரி அல்லா ஜீஸஸ்! சமாதானம் உண்டாகட்டும்.
அன்புடன் சிவா .பதிவை பார்க்கையில் பல நாள் ரணங்கள் இன்று பதிவில். மதங்கள் ஒருவனுக்கு அவனை நல்வழி படுத்த அமைந்த அமைப்பே! அதற்கு கொடி பிடிப்பதால் ஆண்டவனுக்கு செய்யும் பணி என்று அர்த்தமல்ல என் முயற்சியில் ஒரு கிரித்துவ ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைதுள்ளேன் ). ஆனால் வன்மையாக தினிப்பதை கன்டிக்கிறேன்.என்னிடம் யாரேனும் இது பற்றி கூறினால் என்னுடைய பதில், முதலில் உன்னுடைய இனிஷியலை மாற்றிவிட்டு வா. பின் நான் இன்னார் மகனிலிருந்து இன்றிலிருந்து இன்னார் மகனாக மாறுகின்றேன்னு அறிக்கை விடு.அப்புறம் நீ சொல்வதை ஏற்று கொள்வதை பற்றி யோசிப்போம் என்பேன்.
ஒரு பய நம்ம பக்கம் தல வச்சு படுக்க மாட்டான்.
மதத்தின் மீது இருக்கும் பற்றில் பத்தில் ஒரு பங்கு மனிதன் மீது இருப்பின் இப்பிரச்சினைகள் வராது.
//அதற்குப் பிறகு நான் பேசத் தொடங்கினேன். அவர் விட்டால் போதுமென்று ஓடி விட்டார்.//
ஹா..ஹா..என்னடா இது ..முதலுக்கே மோசமாயிடும் போலிருக்கே-ன்னு மனசுக்குள்ள நெனச்சிட்டு ஓடியிருப்பாரு.
//என்னிடம் யாரேனும் இது பற்றி கூறினால் என்னுடைய பதில், முதலில் உன்னுடைய இனிஷியலை மாற்றிவிட்டு வா. பின் நான் இன்னார் மகனிலிருந்து இன்றிலிருந்து இன்னார் மகனாக மாறுகின்றேன்னு அறிக்கை விடு.அப்புறம் நீ சொல்வதை ஏற்று கொள்வதை பற்றி யோசிப்போம் என்பேன்.//
சிங்.செயக்குமார்,
இந்த லாஜிக் நமக்கு புரியல்லியேப்பா? மதத்துக்கும் இனிஷியலுக்கும் என்னப்பா சம்பந்தம்?
நம்ம பேரெல்லாம் பதிவுல அடிபடுது .அப்பறம் வெளக்கம் கேட்டு "சிவா இதற்கு என்ன சொல்கிறார்ன்னு" பதிவு போடனுமோ?
நன்று சொன்னீர்கள் சிவா,
நான் ஆரம்பதில்[1,2,3,4 வகுப்புகள்] படித்தது அரசுப்பள்ளி என்றாலும் அந்த ஊரில் இந்துக்கள் சிறுபான்மையினர். அந்த வயதில் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை கேட்ட நான் அடித்த கூத்துக்கள்[கோயிலுக்கு வர மாட்டேன், திருநீறு அணிய மாட்டேன்....] என் அம்மாவை[மிகுந்த கடவுள் நம்பிக்கை நிறைந்தவர்] எவ்வளவு வருத்தியிருக்கும் என்று நான் பின்னாளில் யோசித்த போது மிகவும் வலித்தது. அந்த வலி அவர்களை வெறுக்கவும்[இப்பொழுது இல்லை] வைத்தது.
மத மாற்றத்திற்கு வலிய வந்து அழைக்கும் அன்பர்களுக்காக சொன்னேன் . நண்பரே ஜோ .தவறான எண்ணம் கொள்ள வேண்டாம்.
சிங்.செயக்குமார்,
என்னங்க..கதையிண்ணு சொல்லிட்டு இப்போ உண்மையிலே கல்யாணம் பண்ணி வச்சதா சொல்லுறீங்க .நீங்க ரிஜிஸ்தரர் பார்த்து ஏற்பாடு பண்ணி ,உடனடியா வேளாங்கண்ணி மாதா கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சு..ஒரே தமாசு தான் போங்க!
//மத மாற்றத்திற்கு வலிய வந்து அழைக்கும் அன்பர்களுக்காக சொன்னேன் . நண்பரே ஜோ .தவறான எண்ணம் கொள்ள வேண்டாம். //
இதுல என்னங்க எனக்கு தவறான எண்ணம் வேண்டிக்கிடக்கு..உங்க லாஜிக் பத்தி தான் கேட்டேன் .புரியாததால.
நீங்க ரொம்ப லக்கி சிவா. இப்படி ஒரு (கிறித்துவ)மச்சானும், மனைவியும் அமைய கொடுத்து வச்சிருக்கணும். (ஏன்னா, அடுத்த மதத்துக்கு மரியாதை தரணும் அப்டிங்கிற அடிப்படை நாகரீகம் கூட சில மதக்காரர்களுக்குக் கிடையாது.)
சிவா,
உங்கள் கோபத்தில் இருக்கும் நியாயம் உண்மை .ஒரு கிறிஸ்தவனான எனக்கே இந்த அவஸ்தைகள் இருந்தது ,எரிச்சல் வந்தது என்றால் ,உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .இது பற்றி என் அனுபவங்களை பதிவிட நினைத்து தள்ளிக்கொண்டே போகிறது .பார்க்கலாம்.
சிவா,
உங்கள் மச்சான் போல நான் எத்தனையோ இந்து கோவில்களுக்கு நண்பர்களோடு சென்று விபூதி வைத்திருக்கிறேன்.
தருமி சார்! நீங்கள் சொல்வது ரொம்பவே உண்மை..நான் லக்கி தான். கண்முன்னால் தெரியும் மனிதனை மதிக்க தெரியாமல், காணாத தெய்வத்துக்காக அடித்துக்கொள்ளும் மனிதர்கள் வெகு சிலரே..ஆனால் அவர்கள் செய்யும் பாவங்கள் அதிகம்.
சிவா,
நல்லா சொல்லியிருக்கீங்க. மதம் பரப்பும் இவர்க்ள் பலர் ஏழை மக்கள் போடும் காணிக்கை காசில் வாழ்கிறார்கள். கேவலமான ஒன்றுதான்.
இந்தக் கதையின் மறுபக்கம் இந்துக்கள் தங்கள் மததினை அறிந்திட இன்னும் அதிக முயற்சி எடுத்தொக்கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. இந்து மதத்தின் பொதுவான வெளிப்பாடுகளான கீதை, பாரதம், ராமாயணம் போன்றவைகளைகூட பலர் ஒழுங்காய் தெரிந்து வைத்திருக்கவில்லை.
லாஸ் ஏஞ்சல்சில் நண்பர் ஒருவர் இராமாயண மகாபாரத (இராஜாஜியின்) புத்தகங்களை வைத்திருந்தார். பார்த்து பாராட்டினேன்.
மதம் என்பது பலருக்கும் தேவையானதாயிருக்கும்போது அந்தத் தேவையை பூர்த்தி செய்ய யாராவது வரமாட்டார்களா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் அந்த சந்துல சிலர் சிலுவையை நட்டுவிடுகிறார்க்கள்.
உங்கள் குழந்தைகள் மதம் மாறாமலிருக்க அவர்களுக்கு உங்கள் மதத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்.
உங்களிடம் மதம்பற்றி கூறுபவரிடம் ஏதாவது மறுத்துச் சொல்லுங்கள் பொது இடம் என்று பார்க்கவேண்டாம்.
//அவன் மதம் பிடித்து அலையும் உன்னை சொர்க்கத்திலும், அவனை நான் அறிந்து கொள்ளவில்லை என்று ஒரே காரணத்திற்காக என்னை நரகத்திலும் தள்ளினால், நீ தேவன் என்று கொண்டாடும் அவனிடம் ஒன்று சொல்வேன் ' நீ தேவன் அல்ல..ஒரு சாத்தான் என்று'//
சிவா,
என்ன ஒரு அற்புதமான வார்த்தைகள். நல்ல பதிவு, நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்துள்ளது.
முதலில் கால்கேரி சிவாவின் பதிவென்று நினைத்து உள்ளே வந்த என்னை கட்டிப்போட்டுவிட்டது உங்களது உணர்ச்சி மிகுந்த இந்தப் பதிவு.
மேலே நீங்கள் சொல்லியுள்ளதை நானும் பலமுறை யோசித்துள்ளேன்,இஸ்லாம் விஷயத்தில்.
இப்படிப்பட்ட கிறித்துவர்களை சந்திக்காததால் கிறித்துவ மத விஷயத்தில் இந்த அளவுக்கு யோசித்ததில்லை. ஆனால், ஆபிரகாமிய மதங்கள் எல்லாவற்றிலும் இப்பிரச்சினை உண்டு என்பது மட்டும் மிகச் சிறுவயதிலேயே எனக்குத் தோன்றியதொன்று.
இப்போதுதான் டாக்டர்.கொய்ன்ராட் எல்ஸ்ட் போன்றவர்களின் ஆக்கங்களைப் படித்துப் பார்த்து இத்தகைய செய்கைகளின் பின்னால் இருக்கும் மனோதத்துவ விஷயங்களையும், இத்தகைய கோட்பாடுகள் கிளம்பிக் கிளைபரப்பிய வரலாற்றையும் படித்தறிந்து வருகிறேன்.
இன்றைய தமிழ்மணத்தில் மோயீசன் என்ற மோஸஸைப் பற்றி யாரோ எழுதியிருந்தார்(உள்ளே சென்று படித்துப் பார்க்கவில்லை இன்னும்). இந்த நபித்துவ கோட்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்த வன்முறைகள் மோசஸிடமிருந்தே ஆரம்பித்தது என்கிறார்கள். ஆபிரகாமிய மதங்கள் என்று பொதுவாய் அழைத்தாலும், யூத மதம் மோசஸுக்கு முன்பு மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்கிறது.
'சைக்காலஜி ஆஃப் ப்ராபடிஸம்' என்ற தலைப்பில் டாக்டர்.எல்ஸ்டின் புத்தகம் ஒன்று இருக்கிறது. அதில் விலாவாரியாக இவற்றை ஆய்கிறார் அவர். என்றாவது ஒருநாள் நேரம் கிடைத்தால் அதிலிருந்து எடுத்து வலைப்பதிகிறேன்.
சிறில்,
அழகாக சொன்னீர்கள்.படித்த சில இந்து நண்பர்களுக்கே எனக்கு தெரிகிற அளவு கூட இந்து மதத்தைப்பற்றி தெரியாமல் இருந்தது கண்டு வியந்திருக்கிறேன் .இன்னும் பலர் கடமைக்காக சில காரியங்களை பண்ணுவார்களே தவிர அதன் அர்த்தம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட இல்லாதிருக்கிறார்கள் .இதை அவர்கள் மாற்ற முயற்சிக்க வேண்டும்.
என் மேல் அன்பு வைத்து என் பதிவை திருத்த கூறிய ஆனானிமஸ் நண்பருக்கும், கந்தசாமி அவர்களுக்கும் என் முதல் நன்றி. சொல்ல வந்தது நல்ல கருத்தாக இருந்தாலும், சொல்லும் விதமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். உங்கள் மனதை வருத்திய 'நாய்கள்' என்பதை நீக்கி விட்டேன் நண்பர்களே. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். சின்னப் பையன் தானே..மன்னிச்சிடுங்க.
சிவா, நல்ல எழுதியிருக்கீங்க! இந்த மதங்களின் எல்லை எதுவும் தெரியாம வளர்ற அந்த விடலை பருவத்தில, விதைக்கும் நச்சுதனமான பிரசங்கம் இருக்க கூடாதுதான். நான் வளர்ந்த சூழ்நிலைய தான் உங்க பதிவு அசைபோட வச்சது. அந்தபக்கம் முஸ்லீம்ங்க தெரு, தர்கா அப்படின்னு, இந்த பக்கம் மாதா கோயிலு, சர்ச்சுன்னு, நடுவல் நம்ம வெளிகண்ட நாதர் சாமி கோயிலுன்னு அந்த காலகட்டத்தில, மாதா கோயில் மணி, மசூதி தொழுகைக்கு அழைக்கும் அந்த அல்லாஹூ அக்பர் ஒலி, இந்த பக்கம் காலயில வர அம்மன் பாட்டு அப்படின்னு, அந்த சத்த நாதங்கள்ல வளர்ந்து வந்தப்ப இந்த எல்லைகளை பத்தி யோசிச்சதேயில்லை! நான் அதிகமா மதச்சண்டைபத்தி, அதன் பிரிவினை பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சதே இந்த வட நாட்டு பக்கம் வந்தப்பறம் தான்! நல்ல பதிவு!
பதிவையும் பின்னூட்டங்களையும் படித்த பின் மதம் மனித உறவுகளை எப்படியெல்லாம் கூறுபோடுகிறது என்பது நன்கு புரிகிறது.
சிவாவின் கோபத்தில் இருக்கும் ஞாயத்தை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் குறிப்பிட்ட சமயத்தினருக்கு எதிரான எதிர் பிரச்சாரமாக இந்தப் பதிவு அமைகிறது என்பதையும் உணரவேண்டும்.
அவர்கள் செய்தது, செய்வது தவறு என்று நாம் கண்டிக்கும் அதே வேளையில் எதிர் உணர்வுகளைத் தூண்டும் இப்படிப் பட்ட பதிவுகளையும் கண்டித்தே ஆகவேண்டும்.
சிவாவின் பதிவை நான் ஒரு எதிர் வினையாகவே பார்க்கிறேன். அவர் மனதில் தனிப்பட்ட எந்த மத நம்பிக்கைகளும் இல்லை என நான் நம்புகிறேன். ஆனால் நமது செய்கைகளினால் மற்றவர்கள் மனம் புண்படாமல் காக்க வேண்டியது மிக அவசியம். இல்லையெனில் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லை என்றாகிவிடும்.
//உங்கள் குழந்தைகள் மதம் மாறாமலிருக்க அவர்களுக்கு உங்கள் மதத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்.//
சிறில் அலெக்ஸின் கருத்தை நான் ஏற்கவில்லை.
முடிந்தால் குழந்தைகளுக்கு மத நம்பிக்கைகளால் ஏற்படும் சிக்கல்களைப் புரியவையுங்கள். மதங்களற்ற உலகத்தை அவர்களாவது உருவாக்கட்டும்.
வாங்க பாரதி! நீங்க கண்டிக்காம, வேற யாரு கண்டிக்க போறா :-))
//** குறிப்பிட்ட சமயத்தினருக்கு எதிரான எதிர் பிரச்சாரமாக இந்தப் பதிவு அமைகிறது என்பதையும் உணரவேண்டும். **// நான் எந்த சமத்தினரையும் குறித்து எழுதவில்லை. நான் எதிர்கொண்ட ஒரே கூட்டம் இந்த கூட்டம் தான். இது கிருஸ்தவ பிரிவில் ஒரு சிறிய பிரிவு தான். அங்கே அவர்களின் செய்கைகளைப் பற்றி மட்டுமே என் விவாதம். அவர்களின் நம்பிக்கை பற்றி அல்ல. இராகவன் தி.கா கும்பல் பற்றி சொல்லி இருக்கிறார். அது நான் எதிர்கொள்ளாத கூட்டம். அதனால் தான் அதை பற்றி சொல்ல வில்லை.
நீங்க சொல்வது போல 'மதம் இல்லாத சமூகம்' என்பது எழுதுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும்.
நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன். இப்படி வேண்டுமானால் சொல்லலாம். மற்ற மதத்தை மதிக்க, மதம் என்பதின் உண்மையை சொல்லிக்கொடுக்க வேண்டும். இன்று என் தாயால், என் மச்சானால், ஜோவால் மற்றவர் மதத்தை மதிக்க தெரிகிறதே. அது இருந்தாலே போதும். மற்ற படி சும்மா 'மதம் இல்லாத சமூதாயம்' என்பது கவிதை, கதை எழுத வேண்டுமானால் நன்றாக இருக்கும்.
மதங்களற்ற உலகத்தை அவர்களாவது உருவாக்கட்டும்.//-
- எவ்வளவு உன்னதமான உலகமாக இருக்கும் அது. ஆனால், நடக்கக்கூடிய காரியமா என்ன..? ஏக்கப் பெருமூச்சுதான் பதில்.
மன்னிக்க வேண்டும் சிவா. இந்த மனித சமூகம் ஆதியில் மதங்களற்ற சமூகமாகவே இருந்தது என்பதையும் மதம் என்பது இடையே வந்து தொற்றிக் கொண்டதுதான் என்பதையும் நீங்கள் மறந்து விட்டீர்கள்.
மதங்களற்ற உலகம் மீண்டும் உடனடியாக உருவாகும் என்ற கற்பனை உலகத்தில் நான் சஞ்சாரிக்கவும் இல்லை.
இதோ நீங்கள் காயப்பட்டு நிற்கிறீர்களே. நம் சந்ததியினருக்கும் இப்படியொரு இக்கட்டு ஏற்பட வேண்டாமே என்ற ஆதங்கத்தில் சொன்ன வார்த்தைகள் தான் அவை.
பரிணாம வளர்ச்சியில் மனித இனம் கடந்து வந்துள்ள பாதையில் வளர்ச்சிகள் பல வீழ்ச்சிகள் பல. அடுத்த நல்வளர்ச்சியை நோக்கி நம்பிக்கையோடு காத்திருப்போம்.
தருமி சார்,
மதங்களற்ற உலகமும் உன்னத உலகமாக இருக்கும் என்ற உத்திரவாதமில்லை. அங்கு நாமே எதிர்பாராத வேறு சிக்கல்கள் எழலாம்.
நம்புவது மட்டுமே நம்மால் முடிந்தது.
பாரதி!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வளவே. இரண்டு 100 மாடி கட்டிடத்தில் இடையே ஒரு அடி அகலத்தில் ஒரு தடுப்பு சுவர் இல்லாத பாலத்தை கட்டி ஒருவனை நடக்கச் சொன்னால், இரண்டு எட்டு வைப்பதற்குள் கீழே விழுந்து விடுவான். ஏனென்றால் உயரம் என்ற பயம், அவனை தானாகவே கீழே தள்ளி விடும். அதே பாலத்தில், இரு பக்கமும் வெறும் காகிதத்தால் கீழே தெரியாத வண்னம் சுவர் போல எழுப்பி அவனை நடக்கச் சொன்னால், அவன் ஓடி கூட கடப்பான். அவன் அந்த காகித சுவற்றை தொடாமலேயே கடப்பான். ஆனால் அதை எடுத்து விட்டால் விழுந்து விடுவான். ஏனென்றால் அந்த காகிதம் அவனுக்கு உயரத்தை மறைத்து, மனதில் தைரியம் கொடுக்கிறது. இதில் பாலம் என்று நான் சொன்னது வாழ்க்கை. காகித சுவர் என்பது மதம். ஒரு சில பேரால் அது இல்லாமலேயே கடக்க திறமை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த தைரியம் இருக்க வேண்டும் என்பது இல்லை. மதம் கொடுக்கும் சிறு நம்பிக்கையில் தான் நிறைய பேர் வாழ்க்கை ஓடுகிறது (என் தாயையும், ஏன் என்னையும் சேர்த்து). அதற்காக நான் மத வெறியன் அல்ல. மனிதனை மதிக்காத சிலரை பற்றி சொல்லப்பட்டதே இந்த பதிவு. வெறுமனே சிட்டியில் பஸ்ஸில் ஒலிப்பெருக்கியில் ஒருவன் கத்துவதை தான் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். அதற்கும் மேல் இவர்கள் சமுதாயத்தில் செய்யும் பாதிப்புகளை எத்தனை பேர் யோசிக்கிறார்கள். சும்மா போய்ட்டு இருக்கும் என்னை எத்தனை முறை எரிச்சல் படுத்தி இருப்பார்கள். ஏன்! அடுத்தன் மதத்தை பற்றி பேசினால் அவன் மனம் புண்படும் என்று தெரியாதா என்ன?, இதை கண்டும் கானாமல் போக நான் காந்தியாக பிறக்க வில்லையே. சராசரி மனிதன் தானே நான்.
அன்புடன்,
சிவா
சிவா மதத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் காகிதச் சுவர் உவமை மிக அருமை. நெஞ்சைத் தொட்டது அந்த உவமை.
ராகவன்! நம்ம ஊரு பக்கம் இருந்து வந்த எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். சென்னையில் இது குறைவு தான். நிறைய பேருக்கு இதன் பாதிப்புகள் தெரிவதில்லை. ஏதோ தெருமுனையில் ஒருவன் ஒலிப்பெருக்கி வைத்து கத்துகிறான் என்ற அளவில் தான் தெரியும். அதனால் தான் இந்த பதிவை போட்டேன். நீங்கள் சொல்வது போல தி.க ஆட்களும் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது (நான் இன்னும் எதிர்கொள்ள வில்லை). குஷ்பு சொல்லிய சொல்லுக்காக இந்தியா முழுவதும் துடப்பத்தை எடுத்து கொண்டு, மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் இது போன்ற சமுதாய புல்லுருவிகளின் செயல்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை. நாம் தனி மனிதனாகவாவது இதை தடுக்க முயற்சி செய்வோம். நம்மிடம் ஒருவன் அவன் மதத்தை பரப்ப முயற்சி செய்தால், அதை ஒத்துக்கொள் என்று கட்டாய படுத்தினால் நாமும் சரியான பதிலை அவனுக்கு கொடுக்க வேண்டும். சரி தானே.
சிவா,
உங்கள் உணர்ச்சிகளை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. 9 வயதில் நடந்த நிகழ்ச்சிகள் இன்னும் மறக்க முடியாத அளவிற்க்கு உங்களை காயபடுத்தியிருக்கிறது.
"உன் இறைவன் உனக்கு இறந்த பிறகுதான் சொர்க்கத்தை கொடுப்பான்.என் இறைவனோ என்னை மனிதாகப் படைத்து மனதில் அன்பையும் கொடுத்து சொர்க்கத்தை இங்கேயே இப்பொழுதே கொடுத்திருக்கிறான். ஆகையால் உன் சொர்க்கக்திற்க்கு நான் வர, நீ விரும்பினால், நான் இறந்தபிறகு வந்து அழைத்து போ" என்று இம்மதவாதிகளிட்ம் கத்தவேண்டும்
இன்னொரு கொடுமை தெரியுமா? அரபு நாடுகளில் ஆப்ராகாமிய மதத்தை சேராதாவர்கள் இறந்தால் அவர்களை அங்கே புதைக்க அனுமதி இல்லை. மதம் நிச்சயமாக இதைச் சொல்லியிருக்காது. இது மதவாதிகளின் வக்கிரம்தான்.
ஜொசுவா ப்ராஜெக்ட் என்று நாம் செய்யும் ப்ராஜெக்ட் மாடலில் மதமாற்ற ப்ராஜெக்டை செய்கிறார்கள். அதில் இந்தியா அதிகமாக "அறுவடை" செய்ய படவேண்டிய நாடு என டார்க்கெட் வைத்திருக்கிறார்கள்
நமக்கு இந்த மதவாதிகளிடமிருந்து நிச்சயம் விடுதலை தேவை.
ஜோ!
//** அகிலாண்டேஸ்வரி அல்லா ஜீஸஸ்! சமாதானம் உண்டாகட்டும். **//
என் விருப்பமும் அதுவே
//** ஒரு கிறிஸ்தவனான எனக்கே இந்த அவஸ்தைகள் இருந்தது ,எரிச்சல் வந்தது என்றால் ,உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது **//
புரிந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி ஜோ! உங்கள் பார்வையில் இருந்து கேட்க உங்கள் பதிவுக்கு ஆவலாய் உள்ளேன். சீக்கிரம் போடுங்க.
//** உங்கள் மச்சான் போல நான் எத்தனையோ இந்து கோவில்களுக்கு நண்பர்களோடு சென்று விபூதி வைத்திருக்கிறேன்**//
இங்கே தான் நீங்க நிக்கறீங்க ஜோ. அங்கே நமக்கு தெரிவது நட்பு. அவன் என்ன மதம் என்பதை விட, அவன் மனம் கஷ்டப்பட கூடாது என்று நினைக்கிறோம் இல்லையா. அங்கே தான் நாம் நிற்கிறோம். இது சில மனிதர்களுக்கு புரியாதது தான் பிரச்சினை ஆகி விடுகிறது.
பெருவிஜயன்!
//**மதத்தின் மீது இருக்கும் பற்றில் பத்தில் ஒரு பங்கு மனிதன் மீது இருப்பின் இப்பிரச்சினைகள் வராது. **// நீங்கள் சொல்வது 100/100 உண்மை.
கார்த்திக்!
//** அந்த வயதில் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை கேட்ட நான் அடித்த கூத்துக்கள் **// உங்கள் தாயின் மன வேதனையை இப்பவாவது உணர்ந்து கொண்டீர்களே. ஒன்றும் தெரியாத வயது. அப்போது மற்றவரை (தாயை) வருத்தியது பெரிய பாவம் இல்லை. உங்களை அப்படி செய்ய தூண்டிய சில வளர்ந்த மனிதர்களின் பாவங்களை எங்கே போய் சொல்வது. :-)). இந்த ஆக்கத்தில் கண்ணில் தெரிபவனை எல்லாம் 'நீ பாவி..நான் பாவி.' என்று டயலாக் வேறு.
தம்பி சிங்! கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு பெரியா ஆளா இருக்கீங்களே :-)) உங்க இனிஷியல் மேட்டம் ஒரு வழியாக நம் தனி மடலின் மூலம் புரிந்தது. :-).
//** ஆனால் வன்மையாக தினிப்பதை கன்டிக்கிறேன் **// இதை தான் நானும் சொல்கிறேன். நான் சொல்வதை சொல்கிறேன்..நீ கேட்பதை கேட்டுக்கோ என்று விரட்டுவது 'ஒரு தெய்வத்தை வியாபாரம் செய்வது போல அல்லவா இருக்கிறது. ஐயகோ.
வாங்க சிறில் அலெக்ஸ்! நீங்கள் சொல்லுவது ஓரளவு உண்மை தான். கடைசி காலத்தில் ஓய்ந்த பிறகு ஆன்மீகத்தின் வழி ஒதுங்குவது தான் பொதுவாக கொண்டிருக்கிறோம். சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு சிலவற்றை சொல்லி கொடுக்க வேண்டும். பக்தி என்பது ஒருவன் மனதை நல்வழி படுத்தும். இப்போ அவன் அவனுக்கு டி.வியில சீரியல் பார்க்கவே நேரம் இருக்க மாட்டேங்குது. இதுல கீதை எல்லாம் கொடுத்தா படிப்பார்களா? தெரியவில்லை. முடிந்த அளவு நமக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
//** மதம் என்பது பலருக்கும் தேவையானதாயிருக்கும்போது அந்தத் தேவையை பூர்த்தி செய்ய யாராவது வரமாட்டார்களா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் அந்த சந்துல சிலர் சிலுவையை நட்டுவிடுகிறார்க்கள் **// எனக்கென்னமோ இங்கே தேவை என்பது வெறும் மதம் மாதிரி தெரியவில்லை. தேவைகள் பலவிதமாக பூர்த்தி செய்யப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அன்றாடம் உழைக்கும் ஒருவனுக்கு இறைவனை தேடும் அளவுக்கு தேடல் வருவதில்லையே. அவனது தேவைகள் பல. அவை சிலரால் பூர்த்தி செய்யப்படும் போது நேரும் மதமாற்றங்கள் நிறைய. சில நேரங்கள் அந்த தேவைகள் ஆறுதல் சொல்களாக இருக்கலாம், பணமாக இருக்கலாம். சரி தானே.
//** உங்கள் குழந்தைகள் மதம் மாறாமலிருக்க அவர்களுக்கு உங்கள் மதத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். **// நீங்கள் சொல்ல வந்தது சரி தான். ஆனால் வேறு மாதிரி சொல்லியிருக்கலாம். என் குழந்தைக்கு மதம் பற்றி தெரியும், புரியும் வயது வரும் போது கற்றுக்கொடுப்பேன். மற்ற மதத்தவரை மதிக்கவும் சேர்த்து தான். நீங்கள் 'மதம் மாறாமலிருக்க' என்பது சிலரது பார்வையில் ஒரு பிரச்சினைக்குறிய விதயமாக தோன்றும் :-).
வாங்க நேசகுமார்! பாராட்டுக்கு நன்றி. உள்ளதை எழுதும் போது கொஞ்சம் உயிரோட்டம் இருக்கத்தானே செய்யும்.
//** இப்படிப்பட்ட கிறித்துவர்களை சந்திக்காததால் கிறித்துவ மத விஷயத்தில் இந்த அளவுக்கு யோசித்ததில்லை **// இது தென் மாவட்டங்களில் தான் அதிகம். நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
//** ஆபிரகாமிய மதங்கள் எல்லாவற்றிலும் இப்பிரச்சினை உண்டு என்பது மட்டும் மிகச் சிறுவயதிலேயே எனக்குத் தோன்றியதொன்று. ஆபிரகாமிய மதங்கள் என்று பொதுவாய் அழைத்தாலும், யூத மதம் மோசஸுக்கு முன்பு மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்கிறது. **//
நீங்க வேற பிரச்சினைய கெளப்பிடுவீங்க போல :-)). நான் ஒரு குறிப்பிட்ட இனம் என்று சொல்லவில்லை. எல்லா மதத்திலும் எல்லா வித மக்களும் இருக்கிறார்கள். இது மதம் சம்பந்த பட்டு, அந்த இனத்தில் எல்லோரும் என்று நான் சொல்லவில்லை. சிலர் மட்டுமே.
நீங்கள் நிறைய புத்தகங்கள். மனோதத்துவம் எல்லாம் சொல்றீங்க. நானோ ஒரு கிராமத்தான். நீங்க படிச்சி நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள். நானும் தெரிஞ்சிக்கிறேன்.
//உங்க இனிஷியல் மேட்டம் ஒரு வழியாக நம் தனி மடலின் மூலம் புரிந்தது. :-). //
ஓகோ! விளக்கம் கேட்டது நான் .ஆனால் விளக்கம் மற்றவருக்கு மட்டும் தனிமடலில் .செயக்குமார் வாழ்க உங்கள் நேர்மை!
பாரதி!
//** மதம் என்பது இடையே வந்து தொற்றிக் கொண்டதுதான் என்பதையும் நீங்கள் மறந்து விட்டீர்கள் **//
மறக்கவில்லை பாரதி. நான் இப்போதைக்கு இருக்கும் நிலைமையை பற்றி சொல்கிறேன். மற்றபடி எனக்கு மட்டும் மதம், ஜாதி இல்லாத ஒரு புதுவுலகுக்கு ஆசை இருக்காதா. நம்மால் ஜாதியையே ஒழிக்க முடியவில்லை. நம் வாழ்வின் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்ட மதம் பற்றி ஒழிக்க வேண்டும் என்பதை பற்றி சொல்வதை விட, அதை நல்வழி படுத்துவதை பற்றி பேசினால் கொஞ்சம் ப்ராக்டிகலாக இருக்கும் என்பதே என் கருத்து. 'நம் வாழ்வில் ஒன்றோடு ஒன்றாக' என்று நான் சொல்வது நம் பண்டிகைகள் மற்றும் பழக்க வழக்கங்களை சொல்கிறேன்.
//** இதோ நீங்கள் காயப்பட்டு நிற்கிறீர்களே. நம் சந்ததியினருக்கும் இப்படியொரு இக்கட்டு ஏற்பட வேண்டாமே என்ற ஆதங்கத்தில் சொன்ன வார்த்தைகள் தான் அவை. **// புரிகிறது பாரதி.
//** அடுத்த நல்வளர்ச்சியை நோக்கி நம்பிக்கையோடு காத்திருப்போம். **// கண்டிப்பாக.
//* அங்கு நாமே எதிர்பாராத வேறு சிக்கல்கள் எழலாம். நம்புவது மட்டுமே நம்மால் முடிந்தது.**// உண்மை. மதம் மட்டுமா இப்போது பிரச்சினை. இன்னும் நிறைய இருக்கிறது. இன்னும் ஒன்று புதிதாக வராது என்றும் சொல்ல முடியாது. நல்லதை நினைப்போம். நல்லதை செய்வோம்.
வெளிகண்ட நாதர்.
//** இந்த மதங்களின் எல்லை எதுவும் தெரியாம வளர்ற அந்த விடலை பருவத்தில, விதைக்கும் நச்சுதனமான பிரசங்கம் இருக்க கூடாதுதான். **// இதை தான் நானும் சொல்கிறேன். இவர்களுக்கு தெரிய மாட்டேங்குதே. ரொம்ப நல்ல சூழ்நிலையில் வளர்ந்திருக்கிறீர்கள். நானும் அப்படித்தான். நான் சொல்வது போல, நம்மை சுற்றி இருக்கும் சமூகம் நன்றாக தான் இருக்கிறது. இந்த வேற்று மனிதர்கள் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாதகம் செய்கிறார்கள்.
பாராட்டுக்கு நன்றி.
குமரன்! இன்னும் கூட ஒன்று சொல்லலாம். சிலர் பாலம் என்ற வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து உறுதியாக வைத்து, மதம் என்ற ஒன்றை மனதளவில் வைத்து கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை கடக்கிறார்கள். ஒரு சிலரோ, கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை (பாலத்தை) அமைக்க தெரியாமல், பாலத்திற்கு வெளியே அந்த காகித சுவரை பற்றி தொங்கிய படி, கீழே உயரத்தை (தீயதை) பார்த்த படி 'ஐயோ! கடவுளே! என்னை காப்பாத்து. நீ தான் என் ஒரே பிடிப்பு' என்று அலறிக்கொண்டிருக்கிறார்கள். நம்மையும் தொங்கிக்கொண்டு கத்த சொல்கிறார்கள். என்ன செய்வது.?
கால்கரி சிவா!
//** "உன் இறைவன் உனக்கு இறந்த பிறகுதான் சொர்க்கத்தை கொடுப்பான்.என் இறைவனோ என்னை மனிதாகப் படைத்து மனதில் அன்பையும் கொடுத்து சொர்க்கத்தை இங்கேயே இப்பொழுதே கொடுத்திருக்கிறான். ஆகையால் உன் சொர்க்கக்திற்க்கு நான் வர, நீ விரும்பினால், நான் இறந்தபிறகு வந்து அழைத்து போ" என்று இம்மதவாதிகளிட்ம் கத்தவேண்டும் **//
நச்சென்று சொல்லி இருக்கீங்க.
//** அரபு நாடுகளில் ஆப்ராகாமிய மதத்தை சேராதாவர்கள் இறந்தால் அவர்களை அங்கே புதைக்க அனுமதி இல்லை. **// இது பற்றி தெரியலீங்க. ஆப்ராகாமிய மதம் என்றால் என்ன. எனக்கு ஒன்றும் தெரியாதுங்க..விளக்கிடுங்க :-))
//** ஜொசுவா ப்ராஜெக்ட் என்று நாம் செய்யும் ப்ராஜெக்ட் மாடலில் மதமாற்ற ப்ராஜெக்டை செய்கிறார்கள். **// இது மாதிரி ஒன்று ஒரு பெரிய சக்தி போல செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் விவரம் இல்லாமல் நான் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
ஜோ! சிங்கு இன்னைக்கு மடல் அனுப்பி பேசிக்கிட்டு இருந்தாரு. அப்போது சொன்னாரு..புரிஞ்ச மாதிரி தான் இருந்தது. இருந்தாலும் தம்பி சிங்கு உங்களுக்கும் தனி மடலாகவோ, பதிவாகவோ, பதிவிலோ விளக்குவார் :-))
En mathamae uyarvendru pesukireer
Emmathathil illai ezhmai pancha ma padhagam? Madham enbathu manithan manithnaga vazha vazhi kattavum. ERAIVAN endra oru maa perum sakthi undu. Athai nam UNARNDHU (not able to see, hear, smell, touch,or by suvai ERAIVAN. By your concisiousness only you can enjoy. This was revelated by Saint THAYUMANAVAR, VALLALAR, THRUVALLUVAR, THIRUMOOLAR AND SO MANY SIDHARS OF TAMILNADU. For this you must reduce your mental frequency from Beta wave ti Aloha Wave. To attain this your mind should be focussed on your Life Force. thangam.
தங்கம்!
நான் குறிப்பிட்ட சில மனிதர்களை பற்றி மட்டுமே இங்கே சொல்கிறேன்.
//** For this you must reduce your mental frequency from Beta wave ti Aloha Wave. To attain this your mind should be focussed on your Life Force. **// இந்த மாதிரி நான் எதுவும் யோசிச்சதில்லைங்க..நீங்க நிறைய விசயம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க. :-)
சூப்பரா உணர்ச்சியக் கொட்டிருக்கீங்க சிவா அண்ணே. கொஞ்சநாள் முன்னால இதயெதான் நான் ஜோஸப் சாரோட என் பைபிள் பதிவுல எழுதிருந்தன். அதிலருந்து சிலது மட்டும் கீழ பாருங்க.
http://vedhagamam.blogspot.com/2006/01/blog-post_19.html
முதல்ல ஒண்ணைத் தெளிவு படுத்தணும். நான் ஒட்டுமொத்தமா எல்லா கிறித்துவங்களயும் தாக்க வரலை. நான் திட்றது கிறித்துவன்ற பேர்ல உலகம் முழுக்க நம்ம தமிழ்க்கலாசாரம் போல பரவியிருந்த பாகன் இனத்தயெல்லாம் அழித்தொழிப்பு செஞ்சுவர வெறிபிடித்த ஆளுங்களைத்தான்.
உங்கள மாதிரி, தம்பி ஜோவை மாதிரி கிறித்துவத்தைச் சரியா புரிஞ்சுக்காத நல்லவங்க பலர் இருக்கத்தான் இருக்கீங்க. நீங்க இந்த மண்ணின் மைந்தருங்க. என்னதான் மதம் மாறியிருந்தாலும் சூழலோட பாதிப்பு இருக்கத்தான செய்யும். ஆனா சொர்க்கம் எல்லாருக்கும் பொது, அதில தனிப்பட்ட குத்தகைன்னு எதுவும் யாருக்கும் கிடையாது, கிறித்துவத்தை ஏத்துக்காத தமிழ்சனங்க நரகத்தீயில வேவமாட்டாங்கன்னு உங்களால உங்க சர்ச்சுலய போய் சொல்ல முடியாது. வெணுமின்னா சொல்லிப்பாருங்க, அப்புறம் உங்கள சாத்தானோட கையாளுன்னு உங்க பங்குச்சாமியாரே முத்திரை குத்திடுவாரு.
பஸ்ஸில ஏதோ ஒரு பைத்தியக்காரனைப் பாத்ததைச் சொன்னீங்க. அது மாதிரி ஆயிரக்கணக்கில நான் பாத்திட்டுருக்கன். சந்துக்குச் சந்து கையில ஒரு மைக்க வச்சுகிட்டு போறவன் வரவன எல்லாம் பாவிகளே பாவிகளேன்னு கூப்பிட்டிக்கிட்டிருவங்களக் கண்டாலே எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வரும். சட்டையப்பிடிச்சு யாரடா பாவிங்கற, மானிடராய்ப் பிறப்பதரிதுன்னு பாடின மண்ணுல, தீதும் நன்றும் பிறர்தர வாரான்னும், அவரவர் கருமமே பெருமைக்கோ சிறுமைக்கோ கட்டளைக்கல்னும் ஆயிரம் ஆயிரம் வருசமா வாழ்ந்துக்கிட்டிருக்கிற மண்ணில, ஏண்டா இந்த மாதிரி பொய்யைப் பரப்பறீங்கன்னு செவுள்லய ரெண்டு அறை விடணுமின்னு தோணும். வன்முறைல எனக்கு நம்பிக்கை கிடையாததால போங்கடான்னு போயிருவன்.
அப்புறம் அந்த பஸ்ஸில யாரும் அந்தப் பைத்தியக்காரன கண்டுக்கலன்னு சொன்னீங்களே அதுக்கு திராவிட இயக்கங்களுக்குதான் நன்றி சொல்லோணும். எங்க அப்பா தீவிரமான திமுக அனுதாபி.ஆனா நாத்திகர் கிடையாது. முருகபக்தரு. அம்மா மட்டும் நைஸா அதிமுகவுக்கு வோட்டுப் போடுவாங்க. அத விடுங்க. எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. வேலா, திமுககாரனுங்க கிறுத்துவனையோ முசுலீமையோ பிறமதத்துக்காரனையோ திட்டமாட்டாங்க. ஆனா என்னிக்கும் மதம் மாறமாட்டாங்க. நம்ம தமிழினப் பெருமைய விட்டுக் கொடுக்க மாட்டாங்க. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஏதோ இந்துக்களுக்குத் துரோகம் பண்ணிட்டதா இந்துமுன்னணிக்காரங்க சொல்றாங்களே, ஆனா அதே பெரியாராலத்தாண்டா இன்னிக்கு தமிழ்நாட்டில பெரும்பான்மையா மதம் மாறாம இந்துக்களா இருக்காங்கன்னு. இது எனக்கே புரிய ரொம்ப நாளாச்சு.
திரும்பச் சொல்றன். நான் இங்க ஜோஸப்சார், ஜோ தம்பி இவங்களோட நம்பிக்கைய மதிக்கறன். அதில எந்த விதத்திலயும் யாரும் தப்பு சொல்ல முடியாது. அவரோட நம்பிக்கையை அவரோட வலைப்பதிவுல எழுதறாரு. அவர் ஏசுவைப் பத்தி, அவர் பிரார்த்தனையினால பலனடைஞ்சதைப்பத்தின்னு எழுதட்டும். அதில நான் சொல்ல ஒண்ணும் கிடையாது. ஆனா இதுக்கு பைபிளை ஆதாரமா வெச்சுக்கிட்டு அதுக்கு வேதாகமம்னு ராபர்ட் டிநொபிலி மாதிரி விளக்க வந்தாருன்னா அதுக்கு மறுப்பக்கத்தோட பதிவையும் நான் இங்க போடறது ஒரு பாகன்ற முறைல என் கடமை. இல்லாக்காட்டி இன்னிக்கு ஆப்பிரிக்காவுல பழங்குடிங்க சொல்ற மாதிரி அவங்க பைபிளோட வந்தாங்க. இன்னிக்கு பைபிள் எங்க கையில, நாடு அவங்க கையிலன்னு ஒரு நிலம கண்டிப்பா வரும். அது எப்பவோ எங்கயோ நடந்ததுன்னு இராமநாதன் சொல்றாப்பல ரெண்டாயிரம் வருசம் முன்னாடி அப்படி, இப்ப மாறிப்போச்சுன்னுல்லாம் சொல்றது கண்ணி மூடிக்கிட்டி இருட்டு வந்திரிச்சுன்னு சொல்றாப்பலதான். ஆஸ்திரேலியாவிலேயும், நியுசிலாந்துலும், அமெரிக்காலயம் குருவி சுடுறாப்பல பழங்குடி மக்களைச் சுட்டுத் தள்ளிப்புட்டு இன்னிக்கு வெள்ளைக்காரக் கிறித்துவநாடாக்கிப்புட்டது நடந்து நாளாகலை. இப்பத்தான். இதப்பத்திதான் டான்பிரௌனோட அடுத்த புத்தகம் வரப்போவுது. தவறாம படிங்க. சரி மிச்சம் இருக்கற பிரதேசம் இவங்க கட்டம் போட்டு தாக்குதல் நடத்திகிட்டிருக்கற பிரதேசம் எதுன்னு தெரியுமா? பத்துநாற்பது பலகணின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? பாத்துக்குங்க.
http://en.wikipedia.org/wiki/10/40_Window
http://www.ad2000.org/1040broc.htm
http://www.1040window.org/
Of the world's 50 least evangelized countries, 37 are within The 10/40 Window. Yet those 37 countries comprise 97% of the total population of the 50 least evangelized countries! Such a fact leaves no doubt that our challenge in reaching the unreached must center on the core -- The 10/40 Window.
If we take seriously the mandate to preach the gospel to every person, to make disciples of all peoples, and to be Christ's witnesses to the uttermost part of the earth, we must recognize the priority of concentrating our efforts on The 10/40 Window. No other area is so blatantly in need of the truth that salvation is only in Jesus Christ.
A third reason we must focus on The 10/40 Window is evident in the fact that it contains three of the world's dominant religious blocs. The majority of those enslaved by Islam, Hinduism, and Buddhism live within The 10/40 Window.
Viewing the map on page three from left<> to right, the Muslim world can be seen most prominently in a wide band across the north of Africa into the Middle East, a bloc representing over 700 million. On the right side of the map is the Buddhist world, encompassing the whole of China.
From its center in The 10/40 Window, Islam is reaching out energetically to all parts of the globe; in similar strategy, we must penetrate the heart of Islam with the liberating truth of the gospel. We must do all in our power to show Muslims that the highest prophet described in the Koran is not Mohammed, but Jesus Christ. And that He is not only the greatest prophet, but the Son of God Himself who died and resurrected in order that millions of Muslims may be saved.
10/40 Window Facts: Projected populations by the year 2000 AD: 1.1 billion Muslims; 1.0 billion Hindus; and 600 million Buddhists.
Overwhelmed with poverty and ravaged by disease, India is victimized even more severely by the spiritual blindness of Hinduism. To a nation in which fattened cows roam freely among emaciated humans, we must proclaim the truth that Jesus came to give us life, and give it abundantly.
Although officially an atheistic country since the Marxist revolution of the late 1940s, China is nevertheless influenced deeply by its Buddhist roots. Some scholars, in fact, consider China's true religion to be combination of atheism and Buddhism. In actuality, religion in China is a hodgepodge which includes folklore, mysticism, animism, and occult practices. Regardless of how one may assess the situation, the fact remains that 1.2 billion Chinese are in desperate need of Jesus Christ. They represent the largest identifiable bloc within The 10/40 Window.
A fourth reason we must focus on The 10/40 Window is because the poor are there. Of the poorest of the poor, more than eight out of ten live in The 10/40 Window. On average, they exist on less than $500 per person per year. Although 2.4 billion of these people live within The 10/40 Window, only 8% of all missionaries work among them.
சிவா,
நல்லதொரு பதிவு. நானும் சின்னவயதில் இது போன்ற நிகழ்ச்சிகளை அனுபவித்திருக்கிறேன்.
அன்னை பூசும் விபூதியை, கிறிஸ்துவ நண்பர்களுக்கு சங்கடமாக இருக்குமே என்று தெரு முனை சென்றதும் அழித்து விட்டு செல்வேன்.
எங்க அம்மா தினமும் சாமி கும்பிடும் போது இயேசுவை கும்பிடுவார்கள், தூங்கும் போது சிலுவை போட்டு இயேசுவின் இரத்தமே ஜெயம் என்று சொல்லுவாங்க, இன்று இத்தனை தூரத்தில் இருந்தாலும் அம்மா நான் இருக்கும் திசை நோக்கி சிலுவை போட்டே தூங்குவாங்க. அதே மாதிரி என்னுயிர் நண்பர் தேவகுமார் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தால் சட்டையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு, பூசாரி கொடுக்கும் விபூதியையும் பூசிக் கொள்வான்.
இப்படி தான் நம்ம பக்கத்தில் பழகி வருகிறோம், உறவினராக இருக்கிறோம், எங்க அத்தை கிறிஸ்தவர், ஒரு நாள் கூட எங்களை மதம் மாறச் சொன்னது இல்லை.
பள்ளியில் நீங்க சொன்னமாதிரியே ஒரு ஆள் வாரந்தோறும் வந்து கதை சொல்லுவார் அதில் பார்த்தீங்கன்னா, முருகன், கந்தன், இசக்கி, மாரிமுத்து போன்ற பெயரில் வரும் கதாபாத்திரங்கள் குடிகாரர்களாக, மோசமானவர்களாக இருப்பாங்க, இறுதியில் இயேசுவை நம்பி, திருந்துவாங்க.
பல நாள் பொறுமையாக இருந்த நான் பொங்கி எழுந்து ஏன் சார் "விக்டர், டேவிட் எல்லாம் குடிகாரர்கள் இல்லையா, வேண்டும் என்றால் காட்டட்டுமா என்று சொல்ல, விளையாட்டு வாத்தியார் பிரம்பால் என்னை வறுத்தெடுத்துவிட்டார். அதிலிருந்து நானும் எனது நண்பர்களும் அந்த கதை வகுப்பிற்கு செல்வதில்லை.
நான் இந்தியா செல்லும் போது எல்லாம் தவறாமல் செல்லும் இடம் அன்னை வேளாங்கண்ணி, எப்படி எனக்கு குலசேகரப்பட்டினத்து முத்தாரம்மன் தெய்வமோ அது மாதிரியே வேளாங்கண்ணி மாதாவும்.
சிவா
நாசரேத் போன்ற கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள இடங்களில் இது போன்ற `போதனை’ அவஸ்தைகளும் தவிர்க்க முடியாதது. உங்களின் முந்தைய பதிவுகளில் தெரிந்த எழுத்து நடைதான், உங்களின் இயல்பான நடை. இந்தப் பதிவில் உங்களின் கோபத்தை வெளிக்காட்ட வேண்டுமென்ற வீம்பிற்காக வலிந்து ஏற்படுத்திக்கொண்ட மூர்க்கத்துடன் பதிவைக் கையாண்டிருக்கிறீர்கள். இதுவும் ஒருவிதமான தீவிரவாதம் என்பது என் கருத்து. நமது கருத்துக்கள் வெளியிடப் படும்போது அது வேறு எங்கேயோ தீப்பற்றவைக்கும் செயலாக ஆகக் கூடாது என்பது என் தாழ்மையான விண்ணப்பம். பாரதியின் கூற்றுக் கூட இந்த அடிப்படையில்தான் எழுதப் பட்டிருக்கிறது.
மதம் என்பது தனிமனித சுதந்திரம்.
//பாலம் என்று நான் சொன்னது வாழ்க்கை. காகித சுவர் என்பது மதம். ஒரு சில பேரால் அது இல்லாமலேயே கடக்க திறமை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த தைரியம் இருக்க வேண்டும் என்பது இல்லை. மதம் கொடுக்கும் சிறு நம்பிக்கையில் தான் நிறைய பேர் வாழ்க்கை ஓடுகிறது //
இவ்வளவு அழகாக எளிமையாக மதம் பின்பற்றப் படுவது பற்றி தெளிந்த கருத்து கொண்டுள்ள உங்களுக்கு, பொருந்தாத விஷயம் மேலுள்ள பதிவின் கோப வெளிப்பாடு. உங்களை விட இந்த மத போதனைகள் போன்ற தர்மசங்கடங்களை தினசரி எதிர் கொண்டிருக்கும் ஆத்மா என்ற முறையில் இது பற்றி எழுத எனக்கு பல நூறு விஷயங்கள் உண்டு. ஆனாலும்சில அவையடக்கங்களினால் பேசுவதே இல்லை.
என்னுடைய சின்ன ஆலோசனைகலைத் தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் எழுதியுள்ளேன்
நான் கூட இது போல் 1வது படிக்கும் போது இது கல் எங்க சாமி இயேசுதான் என்று சொன்னதாக என் அம்மா இன்றும் சொல்வார்கள். என் குருநாதர் வேதாத்திரு மகரிஷி சொல்வார் பாதைகள்தான் வேறு சென்று அடைய் நாம் நினைக்கும் இடம் ஒன்றுதான். இதில் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்று. உனக்குள் இருக்கும் கடவுள்தான் அனைவருகுள்ளும் இருக்கிறார் என்று.நீங்கள் அடுத்த முறை அவர்களை பார்க்கும் போது பாவம் இவர் யார் என்று உனராத இறை துகள் என்று நினையுங்கள், உங்களுக்கு கோபம் வராது.
அவர்களை திருத்தி நமக்கு என்ன ஆக போகிறது.
அன்புடன்
சரவணன்
தாணு அக்கா!
//** இது போன்ற `போதனை’ அவஸ்தைகளும் தவிர்க்க முடியாதது. **// தவிர்க்க முடியாது என்று சும்மா போவதில் அர்த்தம் இல்லை என்று நினைக்கிறேன் தாணு அக்கா. நம் வாழ்க்கையை பாதிக்காத நிறைய விசயங்களை நிறைய பேசித்தீர்க்கிறோம். 'ஐயோ! ஜெயலலிதா அந்த கல்லூரிய இடிக்க பார்க்கிறாளாமே' 'டீம்ல கங்குலி இல்லியாமே' 'குஷ்பு அப்படி சொல்லிட்டாளாமே' 'வைகோ அ.தி.மு.க வுல சேர்ந்துட்டாராமே' அப்படின்னு பக்கம் பக்கமா பேசிக்கிட்டு, விவாதித்துக்கொண்டு இருக்கிறோம். நான் பாதிக்காத என்பது, நேரடியாக என்பதின் அர்த்தத்தில் மட்டுமே. ஆனால் என்னை நேரடியாக பாதித்த ஒரே விசயம் இது ஒன்று தான். எதையாவது நினைத்து போய் கொண்டிருப்போம், இவர்கள் வந்து ஏதாவது சொல்லி போன மூடையே கொடுத்து விடுவார்கள். மற்ற படி நான் பார்த்த மதமாற்றங்கள் ஏராளம். கண்டும் காணாமல் போனால் கூட நம்மை இவர்கள் விடுவதில்லையே. பேசி பாருங்கள் அப்போது தெரியும். நானும் முதலில் இவர்கள் ஏதாவது கொடுத்தால், அவர்கள் முன்னடியே குப்பையில் போட்டால் அவர்கள் மனம் புண்படும் என்று கொஞ்சம் தள்ளிப்போய் அவர்கள் மறைந்ததும் குப்பையில் போட்டுச்செல்வேன். ஆனால் கொஞ்சம் ஓவராக போகும் போது என் கோவத்தை காட்ட என்னை கட்டாயத்தில் தள்ளி விடுகிறார்கள்.
எல்லோருக்குமே தெரிகிறது, இந்த பிரச்சனையை பற்றி. இவர்களை பற்றி. பின் வெளிப்படையாக பேசுவதில் என்ன தப்பு?. வெளிப்படையாக எதிர்ப்பதில் என்ன தப்பு. எதிர்க்க வேண்டிய ஒன்றை ஏன் அமைதியாக தாங்கி கொள்ள வேண்டும். நம் கண் முன்னாடியே நடக்கும் அட்டூழியம் என்று தெரிந்தும் ஏன் நம் எதிர்ப்பை காட்டக் கூடாது?. அட்டூழியம் என்பது பெரிய வார்த்தை என்று நினைத்தீர்களானால், உங்களுக்கு நடப்பது தெரியவில்லை.இல்லை நடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எனக்கு இப்படி விவாத பதிவுகள் எழுதுவதில் விருப்பம் இல்லை தான். நான் எழுதிய ஒரே பதிவு 'இவர்கள் இந்தியர்கள்' தான்..இப்போ எழுதி இருப்பது கடைசி பதிவு. யோசித்து எழுதிய பதிவு அல்ல இது. தோன்றியதை, பார்ததை சொல்லவேண்டும் என்றே எழுதியதே.
இதில் எந்த உண்மையான கிருஸ்தவருக்கும் காயம் ஏற்படாது என்றே என் கருத்து. நீங்கள் இன்று என்னை சர்ச்க்கு வறீங்களான்னு கூப்பிட்டால், நான் தாராளமாக வந்து முட்டங்காலில் நின்று ஜெபம் செய்ய தயார் (மனதுக்குள் முருகனை கும்பிட்டாலும்). அதற்காக, இந்த கூட்டத்தை கண்டும் காணாமல் போக என்னால் முடியவில்லை. இது வேற...அது வேற... :-))
என் நடை என்று சொல்லும் அளவுக்கு என் எழுத்துக்களை நீங்கள் ரசிப்பதை பார்க்க எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் அக்கா :-).
என் நடையில் ஒரு சுவாரசியம் இருக்கும் படி பார்த்துப்பேன். ஆனால் இது சுவாரசியத்துக்கக எழுதியது இல்லை. அதனால் நீங்கள் சொல்வது போல கோபத்தில் எழுதியது தான். ஒத்துக்கொள்கிறேன். உங்களை எங்காவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கனும்.
//** மதம் என்பது தனிமனித சுதந்திரம். **// இது சில பேருக்கு புரிவதில்லையே..வீடு வீடாக தேடி போய் உக்கார்ந்து பரப்பும் அவசியம் என்ன..
//**இவ்வளவு அழகாக எளிமையாக மதம் பின்பற்றப் படுவது பற்றி தெளிந்த கருத்து கொண்டுள்ள உங்களுக்கு, பொருந்தாத விஷயம் மேலுள்ள பதிவின் கோப வெளிப்பாடு **// :-)). இதுவே இது போல வரும் என் கடைசி பதிவு..சத்தியமா..இனி இப்படி ஒரு விதயம் என்னிடம் என் மனசுக்குள் இல்லை.
//** உங்களை விட இந்த மத போதனைகள் போன்ற தர்மசங்கடங்களை தினசரி எதிர் கொண்டிருக்கும் ஆத்மா என்ற முறையில் இது பற்றி எழுத எனக்கு பல நூறு விஷயங்கள் உண்டு. **// ஒரு தனிமடலாவது போட்டு கூறினால் சந்தோசப்படுவேன்.
//**என்னுடைய சின்ன ஆலோசனைகலைத் தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் எழுதியுள்ளேன் **// ஐயோ! நீங்க வேற..என்னைய திட்டாம விட்டீங்களே..அது போதும் அக்கா
:-))
( நெறைய பட்டிருக்கிறேன்..பார்த்திருக்கிறேன்..
நாசரேத்தில் வளர்ந்ததனால்..அதையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்).
அன்பு தம்பி,
சிவா
// ராகவன்! நம்ம ஊரு பக்கம் இருந்து வந்த எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். //
எனக்கு இன்னொரு அனுபவமும் இருக்கிறது. இதுவும் செயி.சேவியர்சில் படிக்கும் பொழுதுதான். அங்கு சின்னச் சின்னதாக அழகான படக்கதைப் புத்தகங்கள் குடுப்பார்கள். எனக்கு படிக்க ஏதாவது எப்பொழுதும் வேண்டும். இதற்காகவே புத்தகம் படிக்கும் வசதியுள்ள நண்பர்கள் வீட்டிற்குப் போகிறவன். அப்படியிருக்க என்னை அந்தப் புத்தகங்கள் கவர்ந்ததில் வியப்பில்லை. வண்ண வண்ணப் படங்களும் சின்னச் சின்னக் கதைகளும் ஈர்த்தன. ஆனால் இந்தப் புத்தகங்கள் இலவசம். ஆனால் பாருங்கள் ஒரு கட்டாயம் சொன்னார்கள். அதாவது நான் வீட்டில் இருந்து கையெழுத்து வாங்கி வந்தால் மட்டுமே புத்தகத்தை என்னால் வீட்டிற்கே எடுத்துக் கொண்டு போக முடியும். வீட்டிற்குப் போய் அத்தையிடம் விஷயத்தைச் சொல்லி கையெழுத்து கேட்டேன். அத்தை மறுத்து விட்டார்கள். வேறென்ன செய்வது. அங்கேயே படித்து வைப்பேன். :-) அதென்னவோ அப்படி ஒரு வாசிப்புக் கிறுக்கு அந்த வயசுல.
// சென்னையில் இது குறைவு தான். நிறைய பேருக்கு இதன் பாதிப்புகள் தெரிவதில்லை. ஏதோ தெருமுனையில் ஒருவன் ஒலிப்பெருக்கி வைத்து கத்துகிறான் என்ற அளவில் தான் தெரியும். அதனால் தான் இந்த பதிவை போட்டேன். //
சென்னையிலும் நான் பட்டிருக்கிறேன். நம்ம கோயில்களில் ஆடி மாதம் வந்தால் ஸ்பீக்கர் போடுவது போல, திருவான்மியூரில் இருக்கும் ஒரு சர்ச்...(என்ன சர்ச் என்று தெரியவில்லை). மாமல்லபுரம் ரோட்டின் மேலேயே இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் காலையில் ஆறு மணிக்கெல்லாம் பாட்டுப் போடுவார்கள். அப்பொழுது என்னுடைய மச்சான் வீடு அங்கு இருந்தது. அலறலோ அலறல். மதியம் வரைக்கும். ஒவ்வொரு வார ஞாயிறும். எடுத்துச் சொன்னால் பயனில்லை. ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டுமே என்ற பாடல் வரிகள். இன்றைக்கும் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை.
// நீங்கள் சொல்வது போல தி.க ஆட்களும் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது (நான் இன்னும் எதிர்கொள்ள வில்லை). குஷ்பு சொல்லிய சொல்லுக்காக இந்தியா முழுவதும் துடப்பத்தை எடுத்து கொண்டு, மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் இது போன்ற சமுதாய புல்லுருவிகளின் செயல்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை. நாம் தனி மனிதனாகவாவது இதை தடுக்க முயற்சி செய்வோம். நம்மிடம் ஒருவன் அவன் மதத்தை பரப்ப முயற்சி செய்தால், அதை ஒத்துக்கொள் என்று கட்டாய படுத்தினால் நாமும் சரியான பதிலை அவனுக்கு கொடுக்க வேண்டும். சரி தானே. //
நிச்சயமாக. ஆனால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. இந்த உலகத்தில் எது எதிர்க்கப்படுகிறதோ....அது சிறந்து வளரும். For every action there is an equal and opposite reaction. ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது என்று தோன்றுகிறது. தாவரங்கள் கூட பெரும் வறட்சி என்னும் எதிர்ப்பு உண்டானால் கடின விதையுள்ள வீரிய விதைகளை விட்டுச் செல்லும். அப்படியிருக்க...எதையுமே எதிர்ப்பது என்பது நல்ல பயன் தரும் என்று சொல்ல முடியாது. குஷ்பூ விஷயத்தில் கூட...கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அவர் பேசியதே தெரிந்திருக்காது. எதிர்ப்பாளர்களின் புண்ணியம்...எல்லாருக்கும் தெரிந்தது.
// இந்தக் கதையின் மறுபக்கம் இந்துக்கள் தங்கள் மததினை அறிந்திட இன்னும் அதிக முயற்சி எடுத்தொக்கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. இந்து மதத்தின் பொதுவான வெளிப்பாடுகளான கீதை, பாரதம், ராமாயணம் போன்றவைகளைகூட பலர் ஒழுங்காய் தெரிந்து வைத்திருக்கவில்லை. //
சிறில் சரியாகச் சொன்னீர்கள். இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல. பல மதங்களின் கூட்டம். தலாய் லாமா சென்னை வந்திருந்த பொழுது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். "நீங்கள் மக்களை மதம் மாறச் சொல்வீர்களா?" என்று. அவருடைய பதில் இல்லை என்பதே. காரணம் சொல்கிறார். "நிச்சயமாக இல்லை. இங்குள்ள மக்கள் கோயிலைப் பார்த்தாலும் வணக்கம் சொல்கிறார்கள். சர்ச்சைப் பார்த்தாலும் சரி....அல்லது வேறெந்த மதக் கோயிலானும் வணக்கம் போடுகிறார்கள். அவர்களை ஒரே ஒரு கோயிலுக்கு மட்டும் வணக்கம் போடச் சொல்லி பாவியாக மாட்டேன்."
அவர் சொல்வது போல எல்லாரும் நடந்து கொள்வதில்லையானும்....முடிந்த வரையில் பெரும்பாலானார்கள் மற்ற கோயில்களையும் மதிக்கத்தான் சொல்கிறார்கள். ஆனால் தவறு செய்கிறவர்களே மற்றவர்களுக்குத் தெரிகிறார்கள்.
இந்து மதத்தினரும் கோயிலுக்குப் போய் கற்பூரம் தொட்டு வணங்கினால் ஆயிற்று என்று நினைத்துக் கொள்வதுதான் வேதனை. ஆனால் உண்மை அதுவல்ல. நான் எல்லாத் தமிழர்களையும் திரும்பத் திரும்ப வேண்டிக் கொள்வது இதுதான். பழைய தமிழ் நூல்களைப் படியுங்கள். திருமுருகாற்றுப் படையோ....தேவார திருவாசகமோ....திருமூலரின் திருமந்திரமோ....சைவ சித்தாந்த நூல்களோ...அருணகிரியார், தாயுமானவர், வள்ளலார் போன்ற மாமணிகளின் நூல்களையோ படியுங்கள். உலகத்தில் எங்கும் சொன்ன நல்ல கருத்துகள் இங்கு நிறையவே உண்டு. இந்த நூல்களில் சாதி, வருண, மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லை. வாழ்க்கை நலனுக்கு நல்ல செய்திகளும் நிரம்ப உண்டு. முருகக் கடவுளைக் குறிக்க மயிலேறும் ராவுத்தனே என்று சொல்லும் உண்மையான மதச்சார்பின்மையும் உண்டு. இன்னும் நிறைய உண்டு. நீங்கள் இப்படித்தான் செய்ய வேண்டும். வணங்க வேண்டும். வாழ வேண்டும் என்று யாரையும் கைகாட்டாமையும் உண்டு. ஆனால் யார் படிக்கிறார்கள்? ஆகையால்தான் அந்தப் பாக்களுக்கு முடிந்த வரை விளக்கம் சொல்ல முயல்கிறேன்.
என்றைக்குமே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு. நல்லதை அடைய நல்ல வழிமுறைகள் மட்டுமே உதவும்.
வெற்றிவேல்! ரொம்ப நேரம் செலவழித்து உங்கள் கருத்துக்களை தெளிவாக, விரிவாக சொல்லியதற்கு என் முதல் நன்றி.
(அண்ணே என்று சொல்லிட்டீங்க. நீங்க ரொம்ப சின்னப் பையனோ :-)
நானும் ஜோசப் சாரோட பதிவை பார்த்தேன்.
//** பரவியிருந்த பாகன் இனத்தயெல்லாம் அழித்தொழிப்பு செஞ்சுவர வெறிபிடித்த ஆளுங்களைத்தான். **// எனக்கு பாகன் என்றால் என்ன என்று தெரியலையே தம்பி. தப்பா எடுத்துக்காதீங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கறேன்.
ஜோ மாதிரி நிறைய பேர், அதே போல் இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். எனக்குத் தெரிந்து நாம் பழகும் சுற்றத்தில் இந்த பிரச்சினைகள் ரொம்பவே குறைவு என்றே நான் சொல்வேன்.
நான் சென்னையில் இருந்த போது, எனது பக்கத்து வீடு ஒரு முஸ்லீம் குடும்பம். ரம்ஜான் நோன்பு போது தவறாமல் எங்களுக்கு மசூதியில் இருந்து வரும் நோன்பு கஞ்சி கொடுத்து விடுவார். என்றுமே நானும் தப்பாக எடுத்தது கிடையாது. அவர்களும் 'இவனெல்லாம் அதை குடிக்கலாமா?' என்று யோசித்தது கிடையாது. என் குழந்தை கொஞ்சம் அழுதுக்கிட்டே இருந்த போது 'மசூதியில் ஓதுவதற்கு ஆள் இருப்பார்கள். அவர்க்ளிடம் கூட்டிச்செல்லலாம்.ஓதினால் சரி ஆகிடும்' என்று கூறியபோது அங்கே மதம் என்பது தெரியவில்லையே. மனிதன் மட்டும் தானே தெரிகிறான். இது ரொம்ப சிலருக்கு புரியவில்லையே..அதுவும் தங்களை அன்பின் உருவமாக காட்டி கொள்பவர்களிடம்..ம்ம்ம்ம்
//** மானிடராய்ப் பிறப்பதரிதுன்னு பாடின மண்ணுல, தீதும் நன்றும் பிறர்தர வாரான்னும், அவரவர் கருமமே பெருமைக்கோ சிறுமைக்கோ கட்டளைக்கல்னும் **// சரியா சொன்னீங்க வெற்றிவேல்.
//** வன்முறைல எனக்கு நம்பிக்கை கிடையாததால போங்கடான்னு போயிருவன். **//
உண்மை தான். ராகவன் சொல்ற மாதிரி நாம் எதிர்வினை காட்டினால், வளர தான் வாய்ப்பு உண்டு போல.
//* அம்மா மட்டும் நைஸா அதிமுகவுக்கு வோட்டுப் போடுவாங்க **// :-)) இது எங்க வீட்டுலயும் நடக்குறது தான்.
//** திமுககாரனுங்க கிறுத்துவனையோ முசுலீமையோ பிறமதத்துக்காரனையோ திட்டமாட்டாங்க. **// இதுக்கு நான் ஒன்றும் சொல்லலைங்க..அப்புறம் அரசியல் ஆயிடும் வெற்றிவேல் :-)
நீங்க பாகன்னு சொல்றீங்க. என்னைய விட ரொம்ப கோவமா சொல்றீங்க. நீங்கள் என்னை விட ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பீர்கள் போல வெற்றிவேல்.
நான் போட்டதே பெரிய சத்தம் போல ஆகிட்டு :-)). நீங்க என்னை விட பெரிய சத்தமா போடுறீங்க :-)
உங்கள் ஆங்கில விளக்கங்களை படித்து மறுபடி பதில் இடுகிறேன் வெற்றி வேல்.
இவ்வளவு நேரம் செலவழித்து நீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால் உங்களில் வலியை என்னால் உணர முடிகிறது. என்னிடம் அவற்றை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
பரஞ்சோதி!
//** எங்க அத்தை கிறிஸ்தவர், ஒரு நாள் கூட எங்களை மதம் மாறச் சொன்னது இல்லை. **// நீங்க வேற..ஏன்யா எரியிற தீயில எண்ணைய ஊத்தறீங்க..நம் சுற்றம் எப்போதும் நன்றாக தான் இருக்கிறது. இவங்க வேற கோஷ்டி..எங்கே இருந்து கெளம்புறாங்களோ.. கெளப்பறாங்களோ..ஆண்டவனுக்கே வெளிச்சம் :-)
//** முருகன், கந்தன், இசக்கி, மாரிமுத்து போன்ற பெயரில் வரும் கதாபாத்திரங்கள் குடிகாரர்களாக, மோசமானவர்களாக இருப்பாங்க, இறுதியில் இயேசுவை நம்பி, திருந்துவாங்க.**// இவங்க இப்போ டி.விலயும் இதை ஆரம்பிச்சுட்டாங்க பரஞ்சோதி..ராஜ் டி.வின்னு நெனைக்கிறேன்..காலைலயே நாடகம் மாதிரி போடுகிறானுங்க (நான் சென்னையில் இருக்கும் போது அந்த கூத்தை பார்த்திருக்கிறேன்)..நீங்க சொல்றது மாதிரி தான்..ஒரு குடிகாரன் இருப்பான்..அவன் வேற்று மதத்தவனாக இருப்பான். குடிச்சிட்டு பொண்டாட்டிய அடிப்பான்..அப்புறம் ஒரு பாதிரியார் அவனை நல்வழி படுத்த...இயேசுவை ஏற்றுக்கொண்டு திருந்தி விடுவான்..அப்புறம் ஒரு பாட்டு.. :-))..கடவுளே..கடவுளே..
//** விளையாட்டு வாத்தியார் பிரம்பால் என்னை வறுத்தெடுத்துவிட்டார். **// இதை நான் ஒரு முறை ஐந்தில் பட்டு இருக்கிறேன்..ஏதோ ஒன்றில் மாட்ட ஒரு கிருஸ்தவ வாத்தியார்...நீ சிவராஜான்னா...என்ன சிவனுக்கே ராஜாவா..அப்ப்டின்னு என் நெத்தியில இருக்கிற திருநீரை காட்டிக்கிட்டே அடிச்ச நினைவு இன்றும் இருக்கிறது..இப்படி நிறைய..கடவுளே..கடவுளே..:-))
//** எப்படி எனக்கு குலசேகரப்பட்டினத்து முத்தாரம்மன் தெய்வமோ அது மாதிரியே வேளாங்கண்ணி மாதாவும். **// வேளாங்கன்னிக்கு செல்பவர்களில் பாதி பேர் வேற்று மதத்தவர்களாக தான் இருப்பார்கள்.
சரவணன்! பாருங்க.. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கு.
//** இதில் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்று.உனக்குள் இருக்கும் கடவுள்தான் அனைவருகுள்ளும் இருக்கிறார் என்று **// ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சரவணன்.
//** நீங்கள் அடுத்த முறை அவர்களை பார்க்கும் போது பாவம் இவர் யார் என்று உனராத இறை துகள் என்று நினையுங்கள், உங்களுக்கு கோபம் வராது. **// பாரதி, தாணு அக்கா, நீங்க எல்லோரும் இதை தான் சொல்றீங்க..அடுத்த முறை முயற்சி செய்கிறேன் நண்பரே.
ராகவன் ஐயா! இப்படி மழையா கொட்டிட்டீங்களே..
நம்ம ஊருல ஓசில கெடைக்கிற ஒரே பொருள் பைபிள் தான். எங்க வீட்டுலயே ஒரு பத்து போல கிடக்கும் (இப்பவும் கெடக்குது)..நான், அண்ணன், அக்கா எல்லோரும் கிருஸ்தவ பள்ளிக்கூடத்துல படிச்சதுக்கு நினைவா வருசம் ஒன்னு ஓசில கட்டாயமா தலைல கட்டிருவாங்க..அது ஒரு புனித நூல், அதை தூர எறிய முடியுமா..எல்லாம் வீட்டுல விட்டத்துல தூங்குது..அதுல 'பழைய ஏற்பாடு' நல்ல கதையா இருக்கும்..நானும் கொஞ்சம் படிச்சிருக்கிறேன் :-)).. கதைன்னா உங்களை மாதிரியே எனக்கும் படிக்கா ஆசை தான்.
பாட்டு போட்டு டார்ச்சர் பண்ணுறது நம்ம இந்து மதத்தில் தான் ரொம்ப இருக்குது ராகவன் (அதுவும் சென்னைல ரொம்பவே ஓவர்)..அதுவும் அந்த குழாய் ஸ்பீக்கர்ல வீட்டு பக்கத்துலயே கட்டி, ரெண்டு நாளா கத்தி பேசி பேசி நம்ம காலி..இவ்வளவுக்கும் அந்த குழாய் ஸ்பீக்கர் போடக்கூடாதுன்னு சட்டம் வேற இருக்குதாம்..பாவம்..படிக்கிற குழந்தைகள், வயதானவர்கள் (அப்புறம் கோலங்கள் பார்க்கிற மக்கள் :-))...சின்ன சின்ன கைக்குழந்தைகள்...கொடுமை ராகவன்..
//** For every action there is an equal and opposite reaction **// ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகமா சொல்லி இருக்கீங்க ராகவன்..சும்மா பூனை என்றாலே..யானை ஆக்குகிற மக்கள், மீடியாக்கள்..அப்புறம் இதை மதகலவரம் கூட ஆக்கி விடுவார்கள்..அது நடக்க கூடாது..ஜெயலலிதா மதமாற்ற தடை சட்டம் போட்ட போது. சாத்தான்-குளம் தேர்தலின் போது சில கிருஸ்தவ நண்பர்கள் 'அதான் மதமாற்ற தடை சட்டம் போட்டுட்டால்லா..அவ தோத்துவிடுவாள்' என்று சொன்னார்கள்..நான் அசந்து போய்ட்டேன்..என்னடா இது அதுக்கும், இவனுங்களுக்கும் என்னடா சம்பந்தம் என்று..உலகம் அப்படி இருக்குதுய்யா..நீங்க சொல்றது சரி தான்..அட்வைசுக்கு நன்றி.. :-))
ராகவன்!
//** இந்து மதத்தினரும் கோயிலுக்குப் போய் கற்பூரம் தொட்டு வணங்கினால் ஆயிற்று என்று நினைத்துக் கொள்வதுதான் வேதனை **//
ராகவன்! இதை அன்றைய வாழ்க்கை கண்ணோட்டத்தில் பார்தால் சரி என்றே தோன்றுகிறது. பகவத்கீதையையோ, திருவாசகத்தையோ தெரிந்து வைத்திருந்தால் தான் பக்தி இருந்திருக்கும் என்றும் சொல்ல முடியாது (குறிப்பாக கிராமம்) . கீழ்தட்டு மக்கள் வரை பைபிள் தொட்டிருப்பது அந்த மதத்தின் சக்தியே..ஏனோ நாம் அப்படி ஒனறை பின்பற்ற வில்லை. இப்போது இருக்கும் நிலமையிலேயே பார்த்தால், நாம் சிறுவர்களாக இருக்கும் போது வில்லுப்பாட்டு, பாவைகூத்து, சினிமா (பழைய படங்களை சொல்கிறேன்..இராமநாராயணன் படங்களை அல்ல) போன்றவை பக்தியை ஓரளவுக்காவது கற்றுக்கொடுத்தது..கோவிலில் சுடலை மாடன் கதை வில்லுப்பாட்டு என்றாலோ, முத்தாரம்மன் கதை என்றாலோ மக்கள் எல்லாரும் அப்படி பக்தியோடு கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதுவே அன்றைய நிலமைக்கு போதும் என்றே இருந்தது. அதனால் நான் திருவாசகமோ, தேவாரமோ தேவை இல்லை என்று சொல்லவில்லை. அதை நாம் முறமை படுத்தவிடிலும், ஓரளவு பக்தி நல்ல நிலமையிலேயே இருந்து வந்தது என்றே சொல்கிறேன். T.M.S-ம் சீர்காழியும் பாடிய பக்தி பாடல்கள் அப்படி ஒரு அருமையான பக்திய கொடுக்கும்.
இன்று நிலமை வேறு, பாருங்க..சென்னைல ஐய்யப்பன் கோவிலுக்கு போறது பேஷன் ஷோ மாதிரி ஆகி போச்சு. ஐய்யப்பன் பக்தி பாடலே 'அப்படி போடு..போடு' மெட்டுல வந்தா தான் கேக்குறாங்க..அந்த பாடல்களில் பக்தி எங்கே இருக்கு..யாருக்கும் பக்தி படங்களோ, வில்லுப்பாட்டோ ரசிக்கும் நிலமையில் இல்லை. எல்லாம் அழிந்து வருகிறது (விட்டது!!). பெருகி வரும் வாஸ்து, ஜோசியங்களை பார்க்கும் போது, மனிதன் கடவுளை நம்பாமல், கண்டதை நம்ப ஆரம்பித்து விட்டானோ என்று தோன்றுகிறது. பேராசை தான் காரணம்.
இப்போது இருக்கும் நிலைக்கு, நீங்கள் சொல்ற மாதிரி தேவாரமோ, திருவாசகமோ நம்மிடையே பழக்கமாக (கிருஸ்தவர்களுக்கு பைபிள் மாதிரி) இருந்திருந்தால் கொஞ்சமாவது காப்பாற்றலாம். என்ன செய்ய இப்போது..நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
உங்களை பார்க்கையில் ரொம்ப சந்தோசமா இருக்கு ராகவன். உங்களிடம் இருந்து நான் கற்று, முடிந்த அளவு என் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறேன் (சும்மா சொல்லவில்லை. நிஜமாகவே. அவள் கற்றுக்கொள்ளும் வயது வரும் போது). உங்கள் 'இனியது கேட்கின்' ரொம்ப நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
சிவா,
உங்க கோபம் புரியுது. இதுபோல ஒரு அனுபவம் அநேகமா எல்லாருக்கும் இருக்குதுதான்.
ஆனாலும் மதங்களைவிட மனிதம் பெருசுன்னு இருக்கறவங்களும், அவரவர் சுதந்திரத்தில் தலையிடாம
இருக்கற அன்புள்ளங்களும் இருக்குதானே?
என்னுடைய மலேசியத்தோழி( கிறிஸ்துவமதம்) என்னோடு கோயிலுக்கு வருவது, எங்கள் வீட்டுப்
பூஜையில் கலந்து கொள்றது எல்லாம் பலகாலமாவே நடந்துக்கிட்டு வருது.
நானும், மதவேறுபாடு இல்லாமல் சர்ச்சுக்குப் போவேன். என் மனசிலே இருக்குற 'சாமி'யை என்னாலே
எங்கேவேணுமுன்னாலும் கும்பிடமுடியும்.
ச்சின்னவயசுலே இருந்தே இப்படித்தான் இருந்துருக்கேன். படிச்சதும் கிறிஸ்த்துவப் பள்ளிதான்.
http://www.maraththadi.com/article.asp?id=2134
நேரம் கிடைக்கிறப்பப் படிங்க.
வாங்க துளசி அக்கா!
//** அவரவர் சுதந்திரத்தில் தலையிடாம
இருக்கற அன்புள்ளங்களும் இருக்குதானே? **// அதனால தான் இன்னும் உலகம் அழியாம இருக்கு போல :-)
நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க..அப்படி ஒரு தோழி கிடைக்க.
//** என் மனசிலே இருக்குற 'சாமி'யை என்னாலே
எங்கேவேணுமுன்னாலும் கும்பிடமுடியும். **// உண்மையை அழகா சொல்லிட்டீங்க. நானும் அப்படித்தான். ஏன்! என் மனைவி கோவிலில் வந்து எனக்காக சாமி கும்பிட்டாலும், ஏதாவது ஒன்னுன்னா 'ஏசுவே' அப்படின்னு ஒரு குரல் தானா வரும் :-) மனசுக்குள்ள நம்ம சாமி இருந்தா போதும். எந்த கோவிலிலும் போய் கும்பிடலாம். சரியா சொன்னீங்க.
உங்கள் கதையை கொடுத்த லிங்கில் பார்த்தேன். மெதுவா முழுசும் படிச்சிட்டு சொல்றேன்.
அன்புடன்,
சிவா
«ýÒûÇ º¢Å¡
¦º¡øÄ Åó¾ ¸Õò¨¾ «Õ¨Á¡¸î ¦º¡øÄ¢ÔûÇ£÷¸û. ¿¡Ûõ ¿¡ºÃò¾¢ø À¢ÈóÐ º¢È¢Ð ¸¡Äõ «íÌ ÅÇ÷ó¾Åý ¾¡ý. ¸Ä¢·§À¡÷ɢ¡ùÖõ ±ý¨É ¨ÀÀ¢û¸¡Ã÷¸û Å¢ð¼À¡Êø¨Ä. «Å÷¸Ù¼É¡É §À¡Ã¡ð¼õ ¦¾¡¼÷óÐ ¿¼ì¸¢ÈÐ. ¼¡ý ô¦Ã¡ÇÉ¢ý ¼¡Å¢ýº¢ §¸¡ð ÀÊò¾¾¢ø¨Ä ±ýÈ¡ø «Åº¢Âõ ÀÊÔí¸û, ÀÄ Å¢„Âí¸û Òâ ÅÕõ. ¯í¸û §¸¡Àõ ¿¢Â¡ÂÁ¡É§¾. ¯í¸û «Ç×ìÌ ±ýÉ¡ø þó¾ Å¢„Âò¨¾ ¦À¡Ú¨Á¡¸ «Ï¸/±Ø¾ þÂÄ¡Ð. ¯í¸û ±ñ½í¸¨Ç ¦¾¡¼÷óÐ þ§¾ ¾¡÷Á£¸ì §¸¡Àòмý ±ØÐí¸û. ¯í¸û º¢ó¾¨É¢ø ¯ûÇ ºò¾¢Âõ Å¡÷ò¨¾Â¢ø ¦¾Ã¢¸¢ÈÐ. Å¡úòÐì¸û.
«ýÒ¼ý
º.¾¢ÕÁ¨Ä
360.yahoo.com/strajan123
சிவா அண்ணே,
(அண்ணே என்று சொல்லிட்டீங்க. நீங்க ரொம்ப சின்னப் பையனோ :-)
நீங்க எழுதற விசயங்களப் பார்த்துச் சொன்னது அதுண்ணே. எனக்கு உங்கள மாதிரி இவ்வளவு அழகா எழுத வாரது. என்னவிட பெரியவராத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிரன். என்ன வயசுன்னு அப்படியே சொல்லுங்க.
(நீங்கள் என்னை விட ரொம்ப பாதிக்கப் பட்டு இருப்பீர்கள் போல வெற்றிவேல்.நான் போட்டதே பெரிய சத்தம் போல ஆகிட்டு :-)). நீங்க என்னை விட பெரிய சத்தமா போடுறீங்க :-) )
பாதிக்கப்பட்டிருப்பது நெசந்தாண்ணா. கொஞ்சநஞ்சமில்லை. மனசெல்லாம் ரெணமாக்கிடக்கு. கேட்டிப்புட்டீங்க. அந்தக்கதையையும் சொல்றேன். என்கூட ஸ்கூல்காலத்திலேர்ந்து இன்னிவரைக்கும் ஒண்ணாப்படிச்ச ரெண்டு நண்பனுங்களோட வாழ்க்க இந்த வெறியனுங்களால எப்படி மாறிப்போய் மீண்டு வந்தாங்கன்றத்த சொல்றன்.
வேலூர்ல எங்க ஸ்கூல்ல அப்போலோஸு டேவிட்டுன்னு ஒரு வெறியன் மாரல் இன்ஸ்ட்ரக்ஸன்னு க்ளாஸ் எடுக்கற வாத்தியானா இருந்தான். ஆனா இவன் தொழிலே கிறித்துவத்தைப் பரப்பறது. அப்ப சின்னவயசில எங்களுக்கு இதெல்லாம் புரியாத வயசு. வீட்டுக்கு பசங்கள வரச்சொல்லி பிரீயா கிட்டார் கிளாஸ் எடுக்கறேன்ன்னு சொல்லுவான். எங்க வீட்டுல அனுப்பி வைக்கல. ஆனா எங்கூடப் படிச்ச இந்த நண்பனுங்க விஜயன், ரவீந்திரன்ன்னு ரெண்டு பேரும் போனானுங்க. போன சில மாசத்துலய வேடிக்கையா பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஏசுவை மட்டுந்தான் கும்பிடனுன்னு என்கிட்டய சொல்வானுங்க. இது வெளிய தெரியாம இருந்தது. ஒருநா நான் காலை முறிச்க்க்கிட்டு ஆஸ்பத்திரில இருக்கச் சொல்ல என்னப் பாக்க வந்த இவனுங்க ஏசு கிட்ட பிரேயர் பண்னப்போறொம்னு சொல்லி கண்ண மூடிக்கிட்டு உக்காந்திருக்காங்க. எங்க அப்பா பாத்திட்டாரு. என்னாடா திடீர்னு கிறித்துவனா ஆயீட்டீங்களா, உங்க வீட்டில சொல்லிட்டீங்களான்னு ச்த்தம் போட்டாரு. அப்படியே ஓஇப்போய்ட்டானுங்க. அப்பறம் எங்க அப்பாதான் அவங்க வீட்டில சொல்லி அவங்க அப்பா அம்மவெல்லாம் அழுத அழையெல்லம் என்னால் சென்மத்துக்கு மறக்க முடியாதண்ணே. உங்க பதிவப் படிச்சதும் பழசசெல்லாம் கிளரிவிட்டாப்பல ஆயிருச்சு. இவனுங்க அப்பறம் இந்துவாய்ட்டாங்கன்னு வெச்சுக்குங்க. இருந்தாலும் அவங்க அப்பா அம்மா சிந்தின கண்ணீரும் பட்டபாடும் கொடுமையில்ல்யா? இப்படி ஏகப்பட்ட கொடுமைங்கள பாத்துப்பாத்து வந்த கோவண்ணே இது.
பாகன்னா என்னானு கேட்டிங்க. அது உரோமானிய கிறித்துவத்த ஏத்துக்காத சனங்கள பட்டிக்காட்டான், நாட்டுப்புறத்தான்னு ஆரம்பத்துல வெயறுதுக்காக சொன்ன வார்த்தை. இப்ப அதையே தங்களுக்க்கு இந்து மாதிரி பொதுப்பேரா பழங்குடி மக்களுங்க திரும்ப வெச்ச்சுக்கிட்டு திருப்பி அடிக்கறாங்க. வில்லன்னாலும் அப்படித்தான். கிராமங்கள்ல கிறித்துவத்தை ஏத்துக்காத சனங்களா வில்லன் வில்லன்னு சொல்லி இன்னிக்கு கெட்டவனயெல்லாம் வில்ல்ன்னு சொல்றாப்பல ஆயிப்போச்சு.
Dear Siva,
Ungaludaiya post parthen.
Ungaluku vandha alavirkae enakum kobam vandhadhu.Vandhu kondum irukiradhu!!
Madhathai podhipadhu Thavara? ILlai!!
Madhathai parapuvadhu thavara? Illai!!
Eppodhu thavaraga agiradhu?
1.Nammudiaya povertyai use panni,. Yes.Panathirkaga matumae madham matram adhigamaga nigazgiradhu.
Adhanal dhan village il ellam anniya madhangal easyaga nuzhindhu vasam seigiradhu!!!
2.Nammudaiya innocents - Idahiyum misuse pannugirargal!!!
Idhanal dhan madham podhipadho, madham mara seivadho thavaraga agiradhu!!
nam Hindu madhathin thathuvam enru thaniyaga onru illai.Ippadi madham matra seivadhai accept panni kolgirargalae - angae irukiradhu nam Hindu madhathin dharmam!!
Naan madhavadhi kedaiyadhu!!
Anal pira madhangaluku enru oru kotpadu irukum podhu - namum adhai unarndhu.
namai nam uyarvaga ennalamae!! Appadi enna arambithal dhan, indha madhiriyana
madha matrathai kuraika mudiyum!! Adhu nammudaiya kadamaiyaga ennugiraen!!
En son um one time solla arambithan - verum kal than idhu!! Enna seiyum nam God!! enru
Appodhu dhan naan avanuku puriya vaithen.
Nammudaiya God kallil ilai. Nam seiyum nalla kariyangalil iruku enru!!
ANbae Sivam - solli koduthen!!
With Love,
Usha Sankar.
வெற்றிவேல்!
உங்கள் காயத்தின் வலி புரிகிறது. இனியாவது நல்லது நடக்கட்டும். இவர்கள் செய்யும் பாவங்களை கடவுள் மன்னிப்பாராக என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பாகன் இனத்தை பற்றி சொன்னதுக்கு நன்றி வெற்றி வேல். வில்லன் வார்த்தை பிறந்த கதை இப்போது தான் தெரிகிறது.
( என்னோட வயசு கேட்டீங்களே..அடுத்த வருசம் வந்தா 30 :-)).
உஷா அக்கா!
//Nammudiaya povertyai use panni,. Yes.Panathirkaga matumae madham matram adhigamaga nigazgiradhu. **// இது எல்லாருக்குமே தெரிகிறது. ஆனால் ராகவன் சொல்ற மாதிரி 'எதிர்க்க போய் பெரிசா வளர்ந்து நிற்கும்'. அதனால 'அவர்கள் பாவம் அவர்களுக்கு' என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நம்மகிட்டயே வந்து படம் காட்டும் போது, நாமும் திருப்பி பெரியயயய படமா காட்டினா தப்பில்லை :-))
உங்க பையனும் சொல்லிருக்கானா..பாருங்க..எத்தனை காயங்கள்..விவஸ்தை அற்ற மனிதர்கள்..ம்ம்ம்..
எப்படியோ நாம் செய்யும் நல்ல காரியங்களில் தான் கடவுள் இருக்கிறார்னு ஒரு பெரிய விசயத்த்தை சொல்லிக் கொடுக்கிறீர்களே..கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு உஷா அக்கா.
அன்புடன்,
சிவா.
( என்னோட வயசு கேட்டீங்களே..அடுத்த வருசம் வந்தா 30 :-)).
அப்ப நீங்க கண்டிப்பா அண்ணந்தான். என் வயசு 27.
வெற்றிவேல் தம்பி :-))
சிவா அண்ணே
டைம் கிடைச்சா இதயும் படிச்சுப்பாருங்க.
How many people have been killed by Christians since Biblical times?
VICTIMS OF THE CHRISTIAN FAITH
http://www.sullivan-county.com/nf0/nov_2000/vic_chris.htm
வெற்றிவேல்! நீங்க கொடுத்த தொடுப்பை பார்த்தேன். இப்போ நீங்க சொன்ன பாகன் இனம் பற்றி புரிகிறது. உங்கள் வலியும் புடிகிறது
சிவா அண்ணே, நல்லா தெளிவா எல்லாருக்கும் புரியறமாதிரி எழுதியிருக்கீங்க. இது மாதிரி ஸ்கூல் பசங்களை ப்ரைன் வாஷ் பன்றது இன்னும் நடக்குது. நான் கூட இதப்பத்திதான் ஒரு பதிவு சுருக்கமா போட்டேன். (http://vurathasindanai.blogspot.com/2006/03/blog-post_09.html) ஆனா பாருங்க கொஞ்ச அவசரமா எழுதுனதுனால், அந்த நடையா, என்னன்னு தெரியல், ஜோ அண்ணன் தப்பா புரிஞ்சிகிட்டாரு. அப்பதான், தெளிவா, சாட்சிகளோட 'கிருத்தவ மத மாற்றத்தில் நெறிதவறிய செயல்கள்' னு ஒரு பதிவு போடலாம்னு நெனச்சிருந்தேன். உங்க பதிவு பத்தி கேள்விட்ப்பட்டு, இங்க வந்து பாத்தா அம்சமா எழுதியிருக்கீங்க.
கோவமா எழுதினது தப்பில்லைண்ணே. கோவப்படவேண்டிய விஷயத்துக்கு கோவப்பட்டாதான் மனுஷன். 'ரௌத்திரம் பழகு'னு முன்டாசு சொல்லியிருக்குல்ல...
எதிர்வினைலாம் ஒன்னும் வராதுண்ணே. அவுக செய்யுற வினைக்கு எதிர்வினைதான் இது. தற்காப்பு, தாக்குதல் ஆகாது. தேவைப்பட்டா நாமளும் மைக் புடிச்சு கூட சொல்லனும்னே. கவலைப்படாதீங்க.
10/40 பத்தி படிச்சா 'பெத்த வயிறு பத்தி எரியுது'ன்னுவாங்களே அந்த மாதிரி எரியுதுண்ணே.
நம்மதாண்ணே இளிச்சவாயங்க, ஏன் எங்கயாவது முஸ்லீம்க கிட்டபோய் கிருத்தவமதத்துக்கு மாற சொல்லவேண்டியதுதான.. ஆஃப்கானிஸ்தான்ல சண்டை முடிஞ்ச கையோட கொஞ்சபேர் மிஷினரி ஆட்கள்போய் உதவி செய்யரோம்னு போய்ட்டு அப்படியே வேலைய காமிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும்.
என்னைப்பொருத்தவரை, மூளைச்சலவை செய்து ஒருவரை மதமாற்றம் செய்வது, ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தையை கடத்துவதற்கு ஒப்பாகும். அத்தகைய ஈனச்செயலை சட்டம்போட்டுத் தடுத்தாலும் தவறில்லை. அம்மாவும், அரசியல் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சட்டத்த திரும்ப பெற்றுட்டாங்க, நம்மள முட்டாள் ஆக்கிட்டு.
பள்ளிகளில் அடிவாங்கும் அளவுக்கு பிரச்சனை இருப்பதையும் அது இந்துக்களால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும் வருத்ததிற்கு உரியது. நானாக இருந்தால் அதை எதிர்க்கும் பயங்கரவாதியாக ஆகியிருப்பேன் அல்லது அந்த அநியாயத்தை சகிக்க முடியாமல் மனநிலை பாதிக்கப்பட்டவனாக ஆகியிருப்பேன்.
புதிதாக அம்மதத்தில் சேர்ந்தவர்கள் வீரியத்துடன் மேலும் பலரைச்சேர்க்க முற்படுகிறார்கள். அரசியல் போல் கூட்டம் சேர்க்கும் உணர்வைத்தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. தேவை மக்களிடையே விழிப்புணர்வு !!
ஒரு காமெடி சொல்லி முடித்துக்கொள்கிறேன். என் வகுப்புத் தோழி, இஸ்லாமியர். அவர் ஓர், கிருத்தவ நண்பனைக் காதலித்தார். அந்த பையன் இஸ்லாமிற்கு மாறினால் பெற்றோரிடம் பேசி திருமணம் நடத்திவைக்கும் பொருப்பை ஏற்றுக்கொள்வதாக பெண்ணின் அக்காவின் கணவர் கூற, பெண் கிருத்தவறாக மாறினால்தன் திருமணம் என்று பையன் வீட்டார் கூற... ஒரே கூத்து. கடைசியில் இருவரும் வேறு வழியின்றி பிரிந்துவிட்டனர்.
வாங்க சாணக்கியன்! ரொம்ப நாள் கழிச்சி வந்து இந்த பதிவை படிச்சி பாராட்டி இருக்கீங்க. ரொம்ப நன்றி. உங்கள் பதிவையும் பாத்தேன். மற்றவர்களின் எதிர்வினைகளை இன்னும் படிக்கவில்லை. படித்து மெதுவாக சொல்கிறேன்.
நீங்க சொல்ற மாதிரி கோபப்பட வேண்டியதற்கு கோபப்படணும். இப்படி நம் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை பேசலாம். என் கருத்தை எல்லோரும் ஒத்துக்கொள்ளும் படி தான் சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் எல்லோருக்குமே இது ஒரு பிரச்சினை என்று தெரிகிறது. ஆனால் என்ன, ராகவன் சொல்ற மாதிரி ஊதி பெரிசு படுத்தினா அப்புறம் குஷ்பு கதை மாதிரி ஆகிட கூடாது. நம் அளவில் நிச்சயமாக எதிர்க்கலாம். தீவிரவாதியின் தீவிரத்தை விட அளவுக்கு அதிகமாகவே .
//** நம்மதாண்ணே இளிச்சவாயங்க **// ஹி ஹி ஹி...இது உண்மைங்க..இல்லன்னா நம்ம நெத்திய பாத்தாலே 'அடடா! ஒருத்தன் மாட்டிட்டான்யா' அப்படின்னு ஓடி வருவாங்களா. :-))
//** நானாக இருந்தால் அதை எதிர்க்கும் பயங்கரவாதியாக ஆகியிருப்பேன் அல்லது அந்த அநியாயத்தை சகிக்க முடியாமல் மனநிலை பாதிக்கப்பட்டவனாக ஆகியிருப்பேன். **// ஐயோ! அந்த அளவு எல்லாம் போக வேண்டியது இல்லை. நம் எதிர்ப்பை காட்டாமல் அமையாக போகாமல், 'ஏங்க இப்படி எல்லாம்' அப்படின்னு திருப்பி கேட்டாலே போதும்.
//** அரசியல் போல் கூட்டம் சேர்க்கும் உணர்வைத்தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. **// இது உண்மை. வாங்கின காசுக்கு உண்மையா உழைக்கறாங்க. என்ன பண்ணுறது. :-(
//** ஒரு காமெடி சொல்லி முடித்துக்கொள்கிறேன். **// என்னங்க இத போய் காமெடின்னு சொல்லிட்டீங்க..அதுவும் சரி தான். லவ் பண்ணிட்டு மதம் குறுக்கே வந்து பிரிஞ்சா என்ன சொல்ல. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும் தானே.
நல்லது தம்பி. நாளானாலும் வந்து உங்க உணர்ச்சிகளை கொட்டிட்டீங்க. ரொம்ப சந்தோசம்.
//மதம் என்பது பலருக்கும் தேவையானதாயிருக்கும்போது அந்தத் தேவையை பூர்த்தி செய்ய யாராவது வரமாட்டார்களா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் அந்த சந்துல சிலர் சிலுவையை நட்டுவிடுகிறார்க்கள்.
உங்கள் குழந்தைகள் மதம் மாறாமலிருக்க அவர்களுக்கு உங்கள் மதத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்.
உங்களிடம் மதம்பற்றி கூறுபவரிடம் ஏதாவது மறுத்துச் சொல்லுங்கள் பொது இடம் என்று பார்க்கவேண்டாம்.//
அப்படிச் செய்தால், மதவாதி, பார்பான அடிவருடி என்பார்கள். அப்படிச் செய்யாமல், bible classக்கு குழந்தையை அனுப்புவது தான் "மதச்சார்பின்மை".
//
புதிதாக அம்மதத்தில் சேர்ந்தவர்கள் வீரியத்துடன் மேலும் பலரைச்சேர்க்க முற்படுகிறார்கள். அரசியல் போல் கூட்டம் சேர்க்கும் உணர்வைத்தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.
//
வேறு ஒன்று இருக்கிறது,
அவர்கள் வீரியத்துடன் செயல்படக் காரணம், புதிதாகச் சேர்ந்த மதத்தில் அவர்கள் விசுவாசத்தைக் காட்டத் தான்.
Neurosis of the convert என்று இதைத்தான் V.S. Naipaul சொல்லியிருக்கிறார்.
//இந்த நபித்துவ கோட்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்த வன்முறைகள் மோசஸிடமிருந்தே ஆரம்பித்தது என்கிறார்கள். ஆபிரகாமிய மதங்கள் என்று பொதுவாய் அழைத்தாலும், யூத மதம் மோசஸுக்கு முன்பு மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்கிறது.//
இப்பொழுதும் யூத மதம் அதே சகிப்புத் தன்மையுடன் தான் இருக்கிறது. இது நான் கண்ணால் கண்ட உண்மை.
என்னைப் பொருத்தவரையில் ஆபிரகாமிய மதங்களில் (நபித்துவக் கோட்பாடு), Communism (நபி கார்ல் மர்க்ஸ்) மற்றும் பகுத்தறிவுத் திராவிட இயக்கங்களையும் (நபி ஈ.வே. ரா.) சேர்த்து விடலாம்.
வாங்க சங்கர்!
//** அப்படிச் செய்தால், மதவாதி, பார்பான அடிவருடி என்பார்கள். அப்படிச் செய்யாமல், பைபிள் கிளாசுக்கு குழந்தையை அனுப்புவது தான் "மதச்சார்பின்மை".**// என்னங்க நாராயணன். பார்பணீயம் இங்கே எதுக்குங்க. மதவாதியாக இருப்பதில் தப்பில்லை. அடுத்தவர் மதத்தை மதிக்க தெரியும் வரை.
//** புதிதாகச் சேர்ந்த மதத்தில் அவர்கள் விசுவாசத்தைக் காட்டத் தான். **// இது என்ன கட்சியா..விசுவாசத்தை காட்ட..என்னமோ போங்க. நடக்குறத பார்கிறதுக்கு நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கு.ம்ம்ம்..விசுவாசத்தை தப்பா காட்டறாங்க சில பேர். அங்கே தான் பிரச்சினை வருகிறது.
சிவா, என் பதிவை அனுமதித்ததற்க்கு நன்றி.
//என்னங்க நாராயணன். பார்பணீயம் இங்கே எதுக்குங்க. மதவாதியாக இருப்பதில் தப்பில்லை. அடுத்தவர் மதத்தை மதிக்க தெரியும் வரை.//
வலைப்பதிவிற்கு நான் புதிது. ஒரு சில பதிவுகளில் நான் என் கருத்தைப் பின்னூட்டமிட்டபோது, என்னை ஒரு சிலர் இப்படித்தான் "generalize" செய்தனர். அவர்களுக்கு முன் நானே முந்திக்கொண்டேன்..மன்னிக்கவும்.
//
நடக்குறத பார்கிறதுக்கு நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கு.ம்ம்ம்..விசுவாசத்தை தப்பா காட்டறாங்க சில பேர். அங்கே தான் பிரச்சினை வருகிறது.
//
அது என்னமோ தப்பான விசுவாசமா, அல்லது அது தான் சரியான விசுவாசமா என்று எனக்குத் தெரியாது. நேற்று வரை கொயிலுக்குச் சென்று விபூதி இட்டுக் கொண்டவன், மதம் மாறியவுடன், செய்யும் அட்டகாசங்கள் நான் நேராகவே பார்திருக்கிறேன்.
ஷங்கர்.
நியாயமான உணர்வுகள். எந்த சூழ் நிலையிலும் எந்த மதத்தையும் நாம் விரும்பாத வரையில் நம்மிடம் திணிக்க முற்ப்படுவது காட்டுமிராண்டித்தனமே.
//என் இறைவனோ என்னை மனிதாகப் படைத்து மனதில் அன்பையும் கொடுத்து சொர்க்கத்தை இங்கேயே இப்பொழுதே கொடுத்திருக்கிறான்.//
திரு. கால்காரி சிவாவின் இந்த வார்த்தைகளை எப்போது ஒரு தாழ்ந்த சாதிக்காறானால் பெருமையாக சொல்லமுடியுமோ அப்போது இந்த பிட் நோட்டீஸ் வாதிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும்.
//உங்கள் குழந்தைகள் மதம் மாறாமலிருக்க அவர்களுக்கு உங்கள் மதத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்//
அதேபோல தீண்டாமை மற்றும் சாதிக்கொடுமைகளுக்கு
எதிராக போரடவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்..
அவர்களுக்கும் (மத) வியாபாரம் நல்லா நடக்கணும்ல
There is no point in having a world without religion. That is the only means to attain the "Higher order" life one needs. It is our problem that we are not being able to use that in the right purpose. To talk about world without religion is like as they tell in Tamil, to burn the house fearing bedbug.
Siva....
The Uvammai you have given with the paper and religion is ultimate.
Yeen Siva.....Yenga ithellam.....Daily mail_la yenn kitta pesaravarthanna....illai :-)
Kallakunga Sir_ey
Anbudan,
natarajan
thiravidar meethu aariyargal thaakuthal result - hinduism
hindukall meethu seeluvaigal thaakuthal result - christanism
heehehehehe ithuthapa ulaagam
appanuku appan intha ulagathil irrukiran
world is for u enjoy it now
and try to think abt who u are? why u come here........
anbee sivan
-swamy red bull
Great Blog.
Even though we are secular in nature, we cannot tolerate conversion.
This forced conversion needs an IRON Hand from all secular people.
Siva, this is not something that is happening in the recent past. These missionaries are solely responsible for the collapse of India and are still responsible for hindering the development of the union. But we can not blame these people because these people do not / can not understand the values of hinduism. It is our fault that we fail to resist these people. We do not educate our people about hinduism and adding to this are our beautiful politicians who let these happen.
I have seen a lot of such people and I normally start a debate with them. Normally the result will be that they flee from me.
It is a sad fact that hindus are the only secular people and no other religion allows conversion or even thought about other religions or gods. I have seen in many a christian homes, whenever a child refuses to go to church / questions anything about the absolute absurdity of the so called bible, the first response from the parents will be "Do you dare to question the Lord?". As you said, a child is always susceptible to such kind of confrontation and for that matter, not only children, even adults fell a prey to these people. I am not blaming all christians. I am talking about the few, only the few, who indulge in such disgusting activities. In fact there are many christians who really hate these activities. This is the link of one such gentleman.
http://www.francoisgautier.com/index.htm
அனானி அவர்களே!
//நியாயமான உணர்வுகள். எந்த சூழ் நிலையிலும் எந்த மதத்தையும் நாம் விரும்பாத வரையில் நம்மிடம் திணிக்க முற்ப்படுவது காட்டுமிராண்டித்தனமே **// சில காட்டுமிராண்டிகள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் மாற்ற வேண்டும் என்று அலைவது கிடையாது. இது ஒரு தனிப்பட்ட இனம்.ம்ம்ம்ம்..'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்' பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
//எப்போது ஒரு தாழ்ந்த சாதிக்காறானால் பெருமையாக சொல்லமுடியுமோ அப்போது இந்த பிட் நோட்டீஸ் வாதிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும்.// இங்கே ஜாதி வேண்டாங்க. ப்ளீஸ்.
வாங்க நடா! ஆமாம். நானும் அதையே தான் பாரதியிடம் சொன்னேன். மதம் இல்லாத உலகம் என்று என்னுவதை விட, இருக்கும் நிலையில் சிறக்க ஏதாவது யோசிக்கலாம் என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அது தானே.
பேப்பர் சுவர் எல்லாம் தானா தோன்றுவது தான் :-)). உங்களுக்கு புடிச்சிருக்கே. சந்தோசம். என் வாழ்க்கையில் மதம் அப்படி தான்.
சிவன்! நீங்க ஏதோ தத்துவம் சொல்லிட்டு போய்ட்டீங்க. நன்றி :-))
வாங்க சிவபாலன்! ஆமாம். மதமாற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் (அது அவன் அவன் தலை எழுத்து)..ஆனால் கட்டாய மதமாற்றம் என்பது, அதுவும் விருப்பமே இல்லை என்று தெரிந்தும் விரட்டி விரட்டி மாறச் சொல்லும் மனிதர்களை கட்டாயம் தடுக்கத்தான் வேண்டும். உங்கள் வருகைக்கு நன்றி
FloraiPuyal! வாங்க நண்பரே! நீங்கள் சொல்வது அனைத்தும் உணமை தான் நண்பரே! நமக்கு நம் மதத்தின் சக்தி, அதன் அருமை தெரிய வேண்டும். அதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லோரும் சொல்வது போல, நாம் மதத்தை இன்னும் அவ்வளவாக அறிந்து கொள்ளவில்லை. அதுவும் நம் தவறு தான். நீங்கள் கொடுத்துள்ள தொடுப்பை பார்த்து சொல்கிறேன். வருகைக்கு நன்றி நண்பரே.
அன்புடன்,
சிவா
உணர்ச்சிகரமான பதிவு. நான் சொல்ல நினைத்தது. Personally இப்பொழுது நானும் பாதிக்கபட்டிருக்கிறேன். (ஆனால், சொல்ல முடியவில்லை).
இதைப் பற்றி என் பதிவு.
http://jeeno.blogspot.com/2005/07/function-convertreligion-byval.html
சமீபத்தில் என் தோழியின் குழந்தை (கிருத்துவப் பள்ளியில் படிக்கிறான்), தொலைக்காட்சியில் மேரியைப் பார்த்து, "ஹை...எங்க சாமி" என கூற, என் தோழி மிக பயந்து போய்விட்டாள். இப்பொழுது குழந்தை வேறு பள்ளியில்.
very neutral post. please avoid some hard worded remarks
வாங்க சீனு! முதல் வருகைக்கு நன்றி. எப்படி பழைய பதிவை பார்த்தீங்க.
நீங்க உங்க தோழியின் குழந்தைக்கு நேர்ந்ததை சொல்லிருக்கீங்க. கிருஸ்தவ பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் நிறைய பேருக்கு அந்த அனுபவம் இருக்கும். பெற்றோர்கள் நாம தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும். பிஞ்சு குழந்தைகளுக்கு என்ன தெரியும். அது கூட புரியாத ஜென்மங்கள், கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு திரிவது தான் கொடுமை.
//Personally இப்பொழுது நானும் பாதிக்கபட்டிருக்கிறேன். (ஆனால், சொல்ல முடியவில்லை).// ரொம்ப பாதிக்கப் பட்டு இருக்கிறீர்கள் போல.
உங்கள் பதிவை பார்த்து என் கருத்தையும் சொல்கிறேன்.
வாங்க Smooth Talk, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வரும் பதிவுகளில் கண்டிப்பாக கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.
Post a Comment