Thursday, May 11, 2006

கொட்டு கொட்டு முரசு கொட்டிப் பாடு

இந்த தேர்தலின் ஹீரோ என்று சொன்னால் அது விஜயகாந்த் தான். ஏதோ சிங்கத்தின் குகைக்குள்ள போய் சந்திக்கிறார் என்றார்கள். 'எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில்...' 'எனது 30 வருட அரசியல் வாழ்க்கையில்...' என்று 2% ஓட்டு வங்கி கணக்கு காட்டிக்கொண்டு சீட்டுக்காக கொள்கையை காற்றில் விட்டுக்கொண்டு அங்கே இருக்கிறதா..இங்கே இருக்கிறதா..'சே! அங்கேயே இருந்திருக்கலாம் போல' என்று அலையும் தலைவர்களுக்கு மத்தியில் கடைசி வரை ஒரே பிடியாக தனித்து போட்டியிட்ட விஜயகாந்தின் நம்பிக்கையையும் தைரியத்தையும் கட்சி பேதம் இன்றி பாராட்டலாம். ஒரே தேர்தலில் ஆட்சிய புடிக்கிறது சினிமாவில் மட்டும் தான் முடியும் என்று விஜயகாந்துக்கும் தெரிந்திருக்கும். பார்த்தால், நிறைய இடங்களில் 10,000 - 30,000 வோட்டு வரை அவரது கட்சி வாங்கி இருக்கிறது. இது மாற்றத்தை விரும்பும் மக்களின் ஒரு மனநிலையை தெளிவாக காட்டுகிறது.

விருதாச்சலம் தொகுதி வேட்பாளர் பட்டியலை பார்த்தால் ஒரு 4 விஜயகாந்த் இருக்கிறார்கள் ( மக்களை குழப்பறாங்களாம். அறிவாளிங்கப்பா! அப்படியே புல்லரிக்குது). அப்புறம் சும்மா கெடக்கிற சினிமா டைரக்டர்கள், துணை நடிகைகள் என்று ஒரு பெரிய பட்டாளம் பொட்டி வாங்கிக்கிட்டு பிரச்சாரம் வேற. 'என்னிடம் விஜயகாந்த் தவறாக நடக்க முயற்சித்தார்' என்று ஒரு துணை நடிகையை இறக்கி விடாதது ஒன்று தான் குறை. இவற்றை எல்லாம் மீறி அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அது அவர் வாழ்க்கையில் நடந்திருக்கிற ஒரு பெரிய சரித்திரமே.

அவரை நம்பி, இவராவது ஏதாவது செய்ய மாட்டாரா என்று ஏக்கத்துடன் ஓட்டு போட்ட அந்த மக்களுக்கு விஜயகாந்த என்ன செய்ய போகிறார்?. என்னை மற்ற இடங்களில் தோற்கடித்து விட்டார்கள் என்று (சின்னப்பிள்ளை மாதிரி) கட்சியை ஓய்த்து கட்டப் போகிறாரா?.

இரண்டு பெரும் கட்சிகளுக்கும் இப்போது விஜயகாந்த் தான் பெரிய தலைவலி. இவரை எப்படி ஓய்ப்பது என்பது தான் அவர்களின் முதல் வேலையாக இருக்கும் (வோட்டு நிலவரத்தை பார்த்தால், DMDK இல்லன்னா நிறைய தொகுதிகளில் ADMK வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் இருந்திருககும்). அதை விஜயகாந்த் எப்படி எதிர்கொள்ள போகிறார்?.

இதோ உங்களுக்கு தமிழகமே கொடுக்கப்படவில்லைய் என்றாலும் (அவ்வளவு எளிதா மொத்தமா கொடுத்திடுவோமா), ஒரு பகுதி கொடுக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காட்ட ஒரு சந்தர்ப்பம். அதை பயன்படுத்தி கட்சியை, உங்கள் கொள்கையை வலுப்படுத்தப் போகிறீர்களா? இல்லை அதே வழக்கமான அரசியலை கொடுக்கப் போகிறீர்களா? கூத்தாடி என்றும் வேஷம் போடுபவன் என்றும் நாகரீக அரசியல் நடத்தும் சில தலைவர்களுக்கு பதிலாக நல்ல அரசியலை மக்களுக்கு கொடுப்பீர்களா? விருத்தாச்சலம் மக்கள் மட்டும் அல்ல, தமிழகமே உங்கள் நடவடிக்கைகளை பார்க்கப் போகிறது. விஜயகாந்த் சாதிப்பாரா?.

இரண்டு பெரிய கட்சிக்களுக்கு இடையில், தனி ஒரு ஆளாக அவர் தொகுதிக்கு என்ன செய்ய முடியும். அப்படி செய்யத்தான் இரண்டு கட்சிகளும் விட்டு விடுமா. நாளைக்கு 'விஜயகாந்த் பாலம் கட்டுவதில் ஊழல்' 'நிவாரண நிதியில் ஊழல்' என்று நிறைய கட்டுக்கதைகளை அவிழ்த்து விடலாம். எப்படியோ இனி தான் விஜயகாந்திற்கு வேலையே ஆரம்பிக்கிறது. மொத்தத்தில் வரும் சட்ட சபை சுவாரஸ்யமாகவே இருக்கும் போல.

இந்த பாடலும் நினைவுக்கு வந்தது. 'பரதன்' படத்தில் இருந்து. இன்றைக்கு ஏற்றப் பாடல்,



15 Comments:

At 6:21 AM, Blogger சிங். செயகுமார். said...

சொந்த ஊரை விட்டு விருத்தாசலத்தில் தைரியமாக நின்று சாத்தித்த விஜயகாந்த். சினிமாவில் புள்ளி விவரங்களை நீட்டி முழங்குவதை போல சட்ட சபையிலும் விஜய டி.ஆரை போல வீர முழக்கம் போடுவார் என நினைக்கின்றேன்.வாய் சவடாலாக இல்லாமல் திறமையான எதிர்கட்சியாக இருந்தால் கட்சிக்கு அடித்தளம் போட்டு ஆயிரங்களில் ஓட்டினை பெற்று திராவிட கட்சிகளின் ஓட்டு விகிதங்களை மாற்றியமைத்த இவருக்கு அடுத்த தேர்தல் மூன்றாவது முக்கிய கட்சியாக வலம் வந்து தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்றினாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை .எளிதில் இரு கட்சிக்கும் தலை சாய்க்க மாட்டார் என்பதே என் எண்ணம்

 
At 6:27 AM, Blogger நாகு said...

கேப்டன் அம்மாவுடன் கூட்டுச்சேர்ந்து சட்டசபையில் கலக்கலாம்! பச்சோந்தி அரசியலில் சொல்லுதற்கு எதுவுமில்லை.

 
At 7:49 AM, Blogger SK said...

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

திரு. விஜய்காந்த், எம்.எல்.ஏ, அவர்களுக்கு,
வணக்கம்.
முதலில் எனது உளங்கனிந்த பாராட்டுகளைப் பிடியுங்கள்!

இந்தத் தேர்தலில் நீங்கள் சாதித்தது நிறையவே!

கட்சி ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது!

யாருடனும் கூட்டு இல்லை என மக்களிடத்தில் சொன்னது போலவெ, 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது!

தமிழகமெங்கும் 40000கி. மீ.க்கும் மேல் சுற்றி வந்து நாட்டு மக்களிடம் உங்களது புதிய அடையாளத்தை நிலை நிறுத்தியது!

இரு கழகங்களும் ஆட்சிப் பொறுப்பினின்றும் அகல வேண்டும் எனக் கூவி, கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக யாரும் சாதிக்காத ஒன்றை செய்து காட்டியது!

பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.

தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

வெற்றிக்களிப்பில் நின்றிருக்கும் இந்நேரத்தில் தங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.

1. இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்களும் நம் மண்ணில் இன்னும் இருக்கிறார்கள் என்னும் கருத்து உறுதிப்படும் நேரத்தில், இதனைத் தீவிரமாக்க, ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

2. 'மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று இரந்தழைப்பார் இங்கில்லை' என்பதற்கேற்ப, பல பேர் உங்கள் கட்சியில் சேர வரக்கூடும். கவனமாகத் தெரிவு செய்வீர்கள் என நம்பலமா? இல்லை, எல்லாரையும் சேர்த்துக்கொண்டு நீர்த்துப் போவீர்களா?

3. யார் எப்படி சொன்னாலும், உங்கள் தொகுதி மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், நல்ல முன்னுதாரணமாய் செயல்படும் உத்தேசம் உண்டா?

4. எம்.எல். ஏ. என்பது ஒரு பொறுப்பான பதவி. அதற்குத் தேவையான விதி முறைகள், நெளிவு சுளிவுகள் இவற்றை வேகமாகக் கற்றுக் கொள்வது, இபோதைக்கும், பின்னாலும் உதவும் என்றறிந்து, செயல் படுவீர்களா?

5. தனியே ஆட்சி செய்வது வேறு; கூட்டணிகட்சியாக பங்கு வகித்து, சலுகைகள் பெறுவது வேறு, ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை நடத்துவது வேறு என்பது இன்னும் சில நாட்களில் புரியப்போகும் நிலையினில், விரைவிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, கட்சியை பல்வேறு மட்டங்களிலும், மாவட்டங்களிலும் வளர்க்க ஆவன செய்வீர்களா?

6. இல்லை, மற்ற தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் தோற்ற நிலையில் துவண்டு போவீர்களா?

7. இதுவரை நடத்தி வந்த, நகர்த்தி வந்த செயல்களெல்லாம் நன்கு நடந்திருக்கும் நிலையில், சில பல அனுபவமும், அறிவும் மிக்க ஆற்றலுள்ள இளைஞர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வீர்களா?

8.ஒரு சீட்டுதான் என்றாலும், அதனை வென்ற முறையில் தனித்துவம் காட்டிய நீங்கள், இந்த வெற்றி ஃபார்முலாவை திறம்பட இன்னும் விரிவு படுத்துவீர்கள் என நம்பலாமா?

9. மீண்டும் படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?

இவையெல்லாம், மாற்றம் வேண்டுமென விரும்பும் ஒரு தமிழனின் கேள்வி!
அதுவே நான் உங்களை தனியனாக[இங்கும் தனிதான்!] இந்த இணையத்தில் ஆதரித்ததின் நோக்கம்!

உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்!

மென்மேலும்,வெற்றிக்கனிகள் குவிய எனது வாழ்த்துகள்!

நன்றி.

வணக்கம்.

 
At 2:25 PM, Blogger சிவா said...

தம்பி சிங்! //எளிதில் இரு கட்சிக்கும் தலை சாய்க்க மாட்டார் என்பதே என் எண்ணம் // எனக்கும் அப்படி ஒரு நம்பிக்கையும் ஆசையும் இருக்கு. ஆனால் சில பேர், அவர் தனியாக நின்றதே ஓட்டு % காட்டத்தான் என்றும் அதை வைத்து அடுத்த தேர்தலில் பொட்டி கணக்கு பேசத்தான் என்றும் சொல்கிறார்கள். நல்லவன் என்ன வானத்தில் இருந்தா குதிப்பான். இப்படி வந்தால் தான் உண்டு. நல்லதையே நம்புவோம். நல்லதே நடக்கும்.

 
At 2:28 PM, Blogger சிவா said...

நாகு! கேப்டன் இப்போது அம்மாவிடம் சேர்ந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. அப்படி செய்யமாட்டார் என்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல எதுவும் நடக்கலாம். நல்லதாக நடக்கணும் என்பது தான் ஒவ்வொரு சாராரண குடிமகனின் ஆசையும்.

 
At 2:34 PM, Blogger சிவா said...

எஸ்.கே! நான் உங்களை தொடக்கம் முதலாகவே கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். உங்கள் நம்பிக்கை ஓரளவாவது நிறைவேறி இருக்கும் என்று நினைக்கிறேன்.

//பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.// இங்க தாங்க..சொல்லி அடிக்கிறது என்பது..நீங்க சொல்ற மாதிரியே சில பழுத்த தலைவர்களுக்கு தனியாக நின்றாலே டெபாசிட் தேறாது என்று தெரிந்து கூட்டணி வைத்து 100ல் ஒரு 5 இடத்தை பிடித்து ஏதோ உலகசாதனை மாதிரி பேசித் திரியும் தலைவர்களுக்கு இடையில் கேப்டனின் சாதனை ஒரு கின்னஸ் தான்.

//தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!// இது முற்றிலும் உண்மை. ஆனால் நம்ம கட்சிகளுக்கு தான் அடுத்தவனை பாராட்டி பழக்கம் இல்லையே..இப்போ மண்டை காய்ஞ்சி போய் கெடக்கறதோட சரி. இனி பேச மாட்டார்கள்.

உங்கள் கேள்வி எல்லோர் மனதிலும் எழும். விஜயகாந்தும் ஏதாவது யோசித்து தான் செயல் படுவார் என்று எதிர்ப்பார்க்கலாம். மொத்தத்தில் மக்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டார்கள். அதை பயன்படுத்தி கொள்வது விஜயகாந்த் கையில்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

 
At 2:50 PM, Blogger செல்வன் said...

தமிழ்நாட்டின் சராசரி வாக்காளனின் மனநிலையை நன்றாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் சிவா.பதிவும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் அதற்கு நீங்கள் தந்த விளக்கங்களும் என்னை மிகவும் கவர்ந்தன

குறிப்பாக இந்த வரிகள்
//நல்லவன் என்ன வானத்தில் இருந்தா குதிப்பான். இப்படி வந்தால் தான் உண்டு. நல்லதையே நம்புவோம். நல்லதே நடக்கும்//

வாழ்த்துக்கள்

 
At 3:10 PM, Blogger சிவா said...

நன்றி செல்வன்! மனசுக்கு என்னமோ விஜயகாந்த் ஜெயித்தவுடன் ஒரு சின்ன சந்தோசமா இருந்தது. அப்படியே மனசுல தோன்றியதை எழுதி விட்டேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

 
At 5:32 PM, Blogger Natarajan said...

Siva....Even if many people have liking towards DMK or AIADMK, all of them want someone who really cares for people. If VK stands as man they are looking for, then we can be happy that at last we have got someone. Hope he remains the same...

Anbudan,
Natarajan

 
At 6:04 PM, Blogger arunagiri said...

சிவா, நல்ல பதிவு. விஜயகாந்த் வென்றதில் எனக்கும் மகிழ்ச்சியே. மக்கள் 40 வருட மாயையிலிருந்து விடுபட்டு ஒரு மாற்றத்தை விரும்புவதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. விஜயகாந்த் நல்ல (ரமணா போன்ற) படங்கள் மூலம் தனது மெசேஜை அகலமாகவும் ஆழமாகவும் பதிய முயற்சி எடுக்க வேண்டும்.

பொதுக்கூட்டங்களையும் போஸ்டர்களையும் விட மின் ஊடகங்களே அதிகம் opinion shapers- ஆக உருவெடுத்துள்ளன. இது காலத்தின் கட்டாயம். திமுக தாண்டிய மற்ற கட்சிகளும் இதை உணர்ந்து இதனை address செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

 
At 6:19 AM, Blogger பரஞ்சோதி said...

விஜயகாந்த் அவர்களின் வெற்றிக்கு என் வாழ்த்துகள்.

சினிமாக்காரர் என்ற ஒரே ஒரு குறை மட்டுமே கொண்டவர், இனிமேல் முழு நேர அரசியலிலும் ஈடுபட வேண்டும். கட்சித்தலைவர் என்பதற்காக நரசிம்மா மாதிரி படங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தோல்வி கண்ட மற்ற தொகுதி வேட்பாளர்களையும் மீண்டும் தொகுதியில் இறங்கி மக்களின் பிரச்சனைகள் தீர்க்க சொல்ல வேண்டும்.

எப்படியோ இவரால் கூட நல்ல மாற்றம் வந்தால் ஏற்க வேண்டியது தான்.

 
At 8:20 PM, Blogger சிவா said...

நடா! ரொம்ப நாள் கழித்து ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க. நன்றி.
நீங்க சொல்வது சரி தான். எல்லோருக்குமே ஒருவன் வரமாட்டானா என்று தான் இருக்கிறது. அது விஜயகாந்த் தான் என்று இப்பவே சொல்வதற்கில்லை. இருந்தாலும் அவரின் முதல் முயற்சியை பாரட்டி ஊக்குவித்தால், நாளை நல்லது நடக்கலாம் என்று ஒரு நம்பிக்கை தான். பார்க்கலாம்.

 
At 8:24 PM, Blogger சிவா said...

அருணகிரி! வருகைக்கு நன்றி. ஆமாம் மாற்றத்தை விரும்பிகிறார்கள். இது 100% உண்மை. ஆனால் அதை விஜயகாந்த் எப்படி பயன்படுத்திக்கொண்டு இன்னும் 5 வருடம் தாக்குப்பிடித்து வரப்போகிறார் என்பதில் தான் அவரின் திறமை இருக்கிறது. பத்திரிகைகளோ, டி.விக்களோ இப்போது இருக்கும் இரண்டு கட்சிகளுக்கு ஜால்ரா தான் அடிக்கிறது. அவைகள் கண்டிப்பாக விஜயகாந்தை கண்டுகொள்ளாதது போல நடிக்கும். அதையும் மீறி, விஜயகாந்த் தன்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறார் என்று பார்க்கலாம். சட்ட சபையிலும் அவர் ஒருவரை பேச விட்டு விடுவார்களா என்ன..விஜயகாந்த் என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம்.

அன்புடன்,
சிவா

 
At 8:27 PM, Blogger சிவா said...

வாங்க பரஞ்சோதி! நரசிம்மா நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் கொடுமையின் உச்சக் கட்டம் என்று நண்பர்கள் மூலம் கேள்வி பட்டிருக்கிறேன். இனியும் அவர் படம் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், நீங்கள் சொல்வது போல் பார்த்து கவனமாக நடிக்க வேண்டும். பிரச்சார படம் மாதிரி தயாரிப்பாளர் தலையில் மொளகா அரைக்கிற மாதிரி பண்ணக் கூடாது..

இனி அவர் தொகுதியையும் பார்க்க வேண்டும், மற்ற தொண்டர்களையும் உற்சாகமூட்டி கட்சியை வளர்க்க வேண்டும். பார்க்கலாம்.

 
At 8:39 AM, Blogger குமரன் (Kumaran) said...

//'என்னிடம் விஜயகாந்த் தவறாக நடக்க முயற்சித்தார்' என்று ஒரு துணை நடிகையை இறக்கி விடாதது ஒன்று தான் குறை.//

விட்டா சொல்லி கொடுப்பீங்க போல இருக்கே. எத்தனை பேரு கண்ணுல பட்டதோ? அடுத்த முறை செஞ்சுடலாம்ன்னு இருப்பாங்க. :-)

 

Post a Comment

<< Home