Friday, December 23, 2005

ஓணானும் ராமாயணமும்


பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம்.

ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்!

ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. ஓடி ஓடி ஓய்ச்சி போய்ட்டோம் சாமி. அதான் ஒங்கள பாத்து ஒரு நியாயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.

ராமர்: அடடா! என்ன கொடுமை இது! பூலோகத்தில் மானிடர்கள் இப்படி எல்லாமா கொடுமை செய்கிறார்கள்.

ஓணான்: மரத்துல நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாலும் தொல்ல பண்ணுறானுங்க! காலார ஒரு வாக்கிங் போனாலும் தொல்ல பண்ணுறானுங்க! நிம்மதியா பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்தாலும், வெவஸ்தை இல்லாம அப்பவும் தொல்ல பண்ணுறானுங்க! வெறுத்துப்போயி தான் ஒங்க கிட்ட வந்தேன் சாமி!

ராமர்: தொல்லை! தொல்லை! என்கிறாயே! அப்படி என்ன பண்ணுகிறார்கள்

ஓணான்: வெளக்க வேற செய்யணுமா! சாமி! நேத்து அப்படி தான், பக்கத்து காட்டுல என் மச்சினன பாத்துட்டு வரலாம்னு மரத்தவுட்டு இறங்கினேன். பக்கத்து வீட்டு கொரங்கு நா எறங்குறத பாத்துட்டு. அவ்வளவு தான் சாமி! எல்லா பயலுவலும் சேர்ந்து்க்கிட்டு ஊர்ல கெடக்குற மொத்த கல்லையும் அள்ளி அடிக்கறானுவ. அவ்வளவு கல்லையும் வச்சா, ஒரு வீடே கட்டலாம் சாமி! உயிர கைல புடிச்சிக்கிட்டு ஓடி போயி மரத்துல ஏறுனா, சுத்தி நின்னு அடிக்கிறானுவ.நல்ல வேள சாமி, ஒரு பயலுக்கும் குறி பார்த்து அடிக்க தெரியல. இல்லன்னா, எங்க இனத்தையே காலி பண்ணியிருப்பானுங்க.

ராமர்: அடப் பாவமே!

ஓணான்: இருங்க! இன்னும் முடியலை. அதுல ஒரு எரும அடிச்ச கல்லு எம்மேல பட்டு நான் கீழே விழ, மறுபடியும் அந்த காட்டு கும்பல் என்ன தொரத்த ஆரம்பிச்சது. பக்கத்துல இருக்கற பன மரத்துல ஏறிட்டேன்.ஒரு பயலுவலுக்கும் பன ஏற தெரியாது, நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா, பெரிய பெரிய கல்ல எடுத்து பன மரத்து தூர்ல டங்கு டங்குன்னு அடிக்கிறானுவ. மரமே ஆடி போச்சு. நான் பயத்துல பல்ல கடிச்சிக்கிட்டு அவ்வளவு உச்சில இருந்து சர்க்கஸ் காரன் மாதிரி குதிச்சேன். தரைல வந்து விழுந்து சுதாரிக்கறதுக்குள்ள, ஒருத்தன் மண்டைல போட்டுட்டான்.

ராமர்: அப்புறம் என்னவாயிற்று?

ஓணான்: அப்புறம் சாமி! எல்லோரும் ஏதோ புலிய வேட்டையாடி புடிச்ச மாதிரி ஆடிக்கிட்டானுங்க. அப்புறம் தான் கொடுமையே ஆரம்பிச்சுது சாமி! அல்கொய்தா கைல மாட்டுன அமெரிக்க காரன் மாதிரி தான் என்னோட நெலமை. என்ன இழுத்துக்கிட்டு ஊருக்குள்ள போனானுங்க. ஒரு எரும அவனோட தாத்தா பொடி தடைல இருந்து மூக்கு பொடி எடுத்து வந்தது.

ராமர்: மூக்கு பொடியா அது என்ன?

ஓணான்: ஓ அதுவா! அது இந்த மனுச பயலுவ சர் சர்னு மூக்குக்குள்ள ஒரு பொடிய போட்டு உறிஞ்சறானுங்க. கருமம்! சும்மா கிர்றுண்ணு மண்டைல ஏறுது. மனுச பய மூக்கு தாங்கும். இந்த குட்டி மூக்கு தாங்குமா. பொடிய எடுத்துட்டு வந்து என்னோட மூக்குல ஒரு எரும போட, எனக்கு கிறு கிறுத்து போச்சி. நான் சும்மா ராட்டினம் மாதிரி சுத்த, மனசாட்சியே இல்லாம, எல்லா கொரங்கும் சிரிக்குதுங்க. இப்படி பல கொடுமைகள் சாமி! அப்புறம் விட்டுட்டானுவ. ரெண்டு நாளா எந்திரிக்க முடியல.

ராமர்: உன்னை மட்டும் தான் இப்படி கொடுமை செய்கிறார்களா?. இல்லை எல்லோரையுமா?

ஓணான்: ஓணான் என்று பேப்பர்ல எழுதினா, அந்த பேப்பரையும் கல்ல தூக்கி எறிவானுங்க, இவனுங்க. போன வாரம், என்னோட மாச்சான் அப்படித்தான் சாமி. ரொம்ப அப்பாவி சாமி! அவனோட சைட்ட பாக்க கெளம்பி இருக்கிறான். பாவி பயலுவ! சத்தமே இல்லாம அவன் பின்னாடியே போய் கழுத்துல சுருக்க மாட்டிட்டானுவ. தெரு தெருவா இழுத்துட்டு போயி, ஒடம்பெல்லாம் ஒரே காயம். இப்போ தான் தேறிருக்கான்.

ராமர்: சரி! அதற்கு என்னை எதற்க்கு பார்க்க வந்தாய்?. உனக்கு வேறு கடவுளே கிடைக்க வில்லையா?.

ஓணான்: பொறுங்க சாமி! மேட்டர் இல்லாமலா ஒங்கல பார்க்க வருவேன். இவ்வளவு கொடுமைக்கும் இந்த பயலுவ ஒரு நியாயம் வேற வச்சிருக்கானுவ. என்னன்னு கேக்கறீயலா.
ஒங்க பொண்டாட்டிய எவனோ தூக்கிட்டு போய்ட்டனாம, இலங்கைல இருந்து. அப்போ நீங்க வாணர படைகளோட சிலோனுக்கு பாலம் போட்டீங்கலாம். அந்த நேரத்தில், தாகமா இருந்த ஒங்களுக்கு அணில் இளநீர் கொடுத்ததாம். ஒடனே! நீங்க அத பாசமா எடுத்து முதுகுல ஒங்க விரல வச்சி தடவி கொடுத்தீங்களாம். அது அதோட முதுகுல மூனு கோடாக விழுந்ததாம்.

ராமர்: கதை நன்றாக தானே இருக்கிறது! அதற்கு என்ன ஓணானே?

ஓணான்: அதுவரைக்கும் கத நல்லாத்தான் இருக்கு. அப்புறம் தான் ஏதோ ஒரு மூதேவி எங்க மேல இருக்கற எரிச்சல்ல, ஒரு கதைய சேர்த்துடுச்சி. அணில் இளநீர் கொடுத்திச்சா. நாங்கல்லாம் ஒன் அடிச்சி குடுத்தோமாம். :-( இப்படி ஒரு கதைய கேட்டு தான் இந்த பயலுவ "நம்ம சாமிக்கே ஒன் அடிச்சி கொடுத்திட்டுடா" ன்னு எங்கள ஓட ஓட வெறட்டுதானுவ. ஏன்! சாமி ! அப்படி நாங்க எப்போ செஞ்சோம். எங்க பாட்டுக்கு செவனேன்னு போய்ட்டு இருக்கோம்.

ராமர்: கேட்க வருத்தமாக தான் இருக்கிறது. வால்மீகி, கம்பரும் எழுதிய ராமாயணத்தில் இவை எல்லாம் இல்லையே. சரி! நான் என்ன செய்ய வேண்டும்.

ஓணான்: அப்படியே எங்க முதுகுலயும் மூனு கோடு போட்டு விட்டுடுங்க. நாங்களும் பொழச்சுப்போம்லா.

ராமர்: அப்படியெல்லாம் உடனே செய்ய முடியாது ஓணானே. அது இயற்கைக்கு புறம்பானது. பரிணாம வளர்ச்சியினால், உன் முதுகிலும் கோடு வரும். அப்போது நீ நிம்மதியாக இருக்கலாம்.

ஓணான்: எப்போ சாமி அது நடக்கும்!

ராமர்: இன்னும் சில கோடி வருடங்கள் ஆகலாம்.

ஓணான்: அட போங்க சாமி! இந்த வெளாட்டு தான வேணாங்கிறது. பக்கத்து வீட்டு டி.வில ஒரு நாள் பார்த்தேன். அமெரிக்காவுல ஓணான எடுத்து கொஞ்சல்லாம் செய்றாங்க. செல்ல பிராணியா வேற வளக்கறாங்கலாமே. அப்படியே சிலோனுக்கு போட்ட பாலம் மாதிரி, சின்னதா அமெரிக்காவுக்கும் ஒரு பாலம் போட்டு கொடுத்திடுங்க. அகதியா ஓடி போயாவது பொழச்சுக்கறோம்.

ராமர்: நன்றாய் சொன்னாய் போ! ஈரானில் இருந்து குழாய் போட்டலே, அமெரிக்காகாரன் தீவிரவாதம் என்கிறான். என்னை, அமெரிக்கவுக்கே பாலம் கட்ட சொல்கிறாய். அப்புறம் மூன்றாம் உலகப்போர் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகி விடும். ஆள விடப்பா!

எங்கிகுந்தோ பறந்து வந்த கல், ஓணானின் மண்டையை தாக்குகிறது. "வந்துட்டாய்யா அந்த சிவா!" ஓட ஆரம்பிக்கிறது ஓணான்.

14 comments:

சிங். செயகுமார். said...

பாவம் அந்த வாயில்லா பூச்சி,படுவா ராஸ்கல் பசங்க சும்மாவே இருக்க மாட்டானுக. நம்ம ஒரு ஐடியா பண்ணுவோம் சிவா!.அந்த மாதிரி ஓணான் கழுத்துல சுருக்கு போடுற எருமைங்கள தேடி கண்டு பிடிச்சி அந்த எருமைகளையும் ஓணானுக்கு சுருக்கு மாட்டுன மாதிரி சுருக்கு மாட்டி தரதரன்னு இழுத்துட்டு போவனும். என்ன நான் ரெடி நீங்க ரெடியா? ஆனாலும் இந்த ஓணானுக்கு ரொம்ப தான் ஆசை ,அமேரிக்கா போவனுமாமே,ரொம்ப திமிர் புடிச்ச ஓணாந்தேன்.அப்ப ஓணான் கழுத்துல சுருக்கு வக்கிறதுல தப்பே இல்ல!.

குமரன் (Kumaran) said...

இந்த ஓணான், ஒன் அடிச்சக் கதைய நான் இதுவரைக்கும் கேட்டதில்ல சிவா. புதுசா இருக்கு. பாத்து. இந்த ஜென்மத்தில நீங்க அடிக்கிற ஓணான் எல்லாம் அடுத்த ஜென்மத்துல சிவாவா பொறந்து நீங்க ஓணானா பொறந்து அப்ப அதுங்க எல்லாம் உங்களைக் கல்லால அடிக்கப் போகுதுங்க. என்ன சொல்றீங்க? போன ஜன்மத்துல நீங்க ஓணானாவும் இந்த ஓணானுங்க எல்லாம் பசங்களாவும் இருந்து உங்களை அடிச்சாங்களா? நல்ல கதையா இருக்கே?!!!

ENNAR said...

ஓணானை அடித்து புதைத்து வைத்தவிட்டு எட்டு நாள் கழித்து அந்த இடத்தை திறந்து பாருங்கள் ஒரு அணா காசு இருக்கும் சரியாக எட்டாம் நாள் 10 நிமிடம் முன் அல்லது பின் என்றால் கிடைக்காது என்ன நான் சொன்னது தெரிகிறதா? பாருங்கள்.
சிறு வயதில் பல முறை சரியான நேரத்தில் திறந்து பார்க்க முடியவில்லை என்ன ரெடியா ஜுட்.

குமரன் (Kumaran) said...

ஓணானை அடிச்சுப் புதைச்சா ஓரணாவா? நல்லா இருக்கே!!! எதுகை மோனையைத்தான் சொன்னேன். :-)

சிங். செயகுமார். said...

குமரன் எனக்கு ஒன்னாப்பு படிக்கும் போதே எங்க டீச்சர் ஓணான் ஒன்னுக்கு போனத சொல்லி குடுத்தாங்க ! உங்களுக்கு சொல்லி குடுக்கலியா?. நீங்க கவனிக்கல, அதான் ஒன்னாபுல நீங்க 4 வருஷம் பெயிலு! எப்பிடி கண்டு பிடிச்சேன் பாருங்க!



என்னார் சிறுவயது சேட்டைய அப்பிடியே சொல்லி புட்டீங்க போங்க. அப்ப நீங்களும் ஓணான இம்ச பண்ணி இருக்கீங்க.!

குமரன் (Kumaran) said...

என்ன சிவா புதுசா எனக்குத் தெரியாததை எல்லாம் கண்டுபிடிச்சுச் சொல்றீங்க. ஒன்னாப்பே நான் படிக்கலையே. டபுள் புரமோஷன் குடுத்து நேரா ரெண்டாப்புக்கு அனுப்புச்சுட்டாங்க.

ஒன்னாப்புல மட்டும் தான் இந்தக் கதைய சொல்லுவாங்க போல இருக்கு. அதான் நான் மிஸ் பண்ணிட்டேன்.

சிவா said...

சிங்! நீங்க சொன்னது உன்மைன்னு நெனைக்கிறேன். குமரன் சமாளிக்கிறார் பாருங்க. இந்த கதை தெரியாது என்று சொன்னவுடனேயே நான் டவுட்டானேன். சிங் கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு :-).

குமரன் (Kumaran) said...

ஆஹா....யாரு சொன்னதுன்னு கூட சரியா கவனிக்கலையே. சிங்கு. நீங்களா அந்த டூப்பு விட்டது. நான் அவசரத்துல சிவான்னு நெனைச்சுட்டேன். சிவா நான் சொல்வது மட்டுமே உண்மை. உண்மைத் தவிர வேறொன்றுமில்லை.

சிவா said...

தம்பி சிங். சேம் சைடு கோல் போடுறீயோன்னு நெனச்சேன். கடைசில காப்பாத்திட்ட ராசா!

குமரன்! போன ஜென்மம், இந்த ஜென்மம்னு சொல்லி மனுசன பயங்காட்டாதிய! ஆமாம்! சொல்லிப்புட்டேன். ஓணான் ஒன் அடிச்ச கத தெரியாம இப்படி அப்புராணியா வளந்திருக்கியலே! இப்பவாவது தெரிஞ்சிக்கிட்டியலே! இந்த கதை தெரியாததால், உங்களுக்கு டபுள் ப்ரோமோசம் கொடுத்தது செல்லாது. மரியாதைக ஒண்ணங்கிலாஸ் போய் படிச்சிட்டு வந்திருங்க :-) ஏதோ ஒங்க அளவுக்கு கதை சொல்ல தெரியலன்னாலும், எங்க கிட்டயும் எவ்வளவு புராண கதைகள் இருக்குது பாத்தீங்களா :-)

என்னார்! வருமைக்கு நன்றி. எத்தனை அணா இது வரைக்கும் சேர்த்திருக்கீங்க?.

பரஞ்சோதி said...

சிவா,

அநியாயம் பண்ணியிருக்கிங்க,இது அக்கிரம் இல்லையா?

இப்படி கூடவா செய்வாங்க. பாவம் அந்த ஓணான்கள், உங்களால் கொல்லப்பட்ட ஓணாங்கள் இறைவனடி அடைய வேண்டுகிறேன்.

மனசாட்சி: ஏலே பரஞ்சோதி, என்னலே சிவாகிட்ட ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுற, நீ கொன்ற ஓணான், புட்டான், குருவிகள் சேர்ந்தால் ஒரு உலகமே உருவாக்கலாமே.

ஆமாம் சிவா, நானும் அந்த பாவச்செயல்களை சிறுவயதில் செய்திருக்கிறேன். எங்க சீனியர்கள் சொன்ன கதையை உண்மையாக நம்பி, கொன்ற ஓணான்கள் கொஞ்சமில்லை, விளையாட்டாக புட்டான்கள் பிடித்து ஒன்றுக்கு ஒன்றை இரையாக கொடுப்பது, புட்டான்களை தலையை ஒரே வெட்டாக வெட்டி, கிடா வெட்டுவதாக சொல்வது இது போன்றவை அடங்கும்.

இராமருக்கு உதவியதாக அணில்களை வளர்த்து, பின்னர் அதே அணில்கள் கொய்யா பழங்களை தின்று தீர்க்க, பின்னர் அவற்றை கொன்று, தின்று தீர்த்து இருக்கேன்.

அணில் வேட்டை, குயில் வேட்டை எல்லாம் சென்று கொலைக்காரனாக இருந்திருக்கிறேன், அப்போ எல்லாம் பொழுது போக ஓணான்களை அடிப்பது வழக்கம், அதுவும் ஓணான்கள் அடித்தால் ஓடாது, தெனாவெட்டாக எட்டி பார்க்க, அதுவே கடுப்பாகி கல்லால், உண்டி கோலால் அடிக்கிறது வழக்கம்.

இது போன்ற பாவச் செயல்களை நினைத்து வருந்துவதுண்டு, இனிமேல் யாரும் அவ்வாறு செய்யாமல் இருக்க சிறுவர் பூங்காவில் கதைகள் சொல்ல இருக்கிறேன்.

ஆண்டவரே! இந்த பாவியை மன்னியுங்க, அடுத்த பிறவியில் ஓணானாக மாற்றி விடாதீங்க.

G.Ragavan said...

ennavo ithu varaikum neenga cheitha thappu pothum. inime vendamnu aduthavangaluku cholli kudunga.

enaku indha maathiri panrathu chinna vayasula irundhey pidikaathu. college-la oru friend class-la oduna anila mithika poga, naan avana paathu katha...avan enna paathu katha.....lecturer irukurathaiye mathikama chandai aagi pochu. class mudinjathum avan kitta poi sorry kettutu inime appadi pannathannu request pannittu vandhean.

ithu irundhalum naan chapattu vishayathula non-veg thaan. but ennaiye konnu thinga chonnaa......i am sorry...i cant do that. naan thinga mattum thaan ready.

சிவா said...

வாங்க பரஞ்சோதி! அடடா! கதை இப்படி சீரியஸ்-ஆ போய்ட கூடாதுன்னு தான் கதைல நான் ஒரு ஓணான கூட கொல்லலை :-). இருந்தாலும் உண்மை நீங்க சொன்னது தான் :-( . இப்போ இருக்கும் பசங்க நம்ம காலத்துல இருந்த மாதிரி இல்லை. அவங்க கேபிள் டி.வி. கிரிக்கட், கம்யூட்டர்னு போய்ட்டாங்க. ஓணான்களுக்கு இனி பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்.

ராகவன்! நீங்க சின்ன வயசிலேயே நல்ல விசயங்கல யோசிச்சிருக்கீங்க. நமக்கு இப்போ தான் தோணுது :-)

சிங். செயகுமார். said...

அண்ணா சேம் சைடு கோலா ,அப்பிடீன்னா .அய்யோ எங்க டீச்சர் அதெல்லாம் சொல்லி குடுக்கலையே. ஒருவேளை குமரனுக்கு தெரியுமோ. சான் ஸே இல்ல!

சிவா said...

அண்ணா!

//** எலி விற்ற காசில் வீட்டுக்கு தெரியாமல் சினிமா பார்த்ததும் உண்டு**// நான் அப்படி எல்லாம் செய்ததில்லையே :-)). எலி வேட்டை, அணில் வேட்டை, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பதிவா போட்டுடலாம். சீக்கிரமே